Tagged: இந்துத்துவா

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு விடுதலை இராசேந்திரன்

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு விடுதலை இராசேந்திரன்

“இந்துத்துவ அம்பேத்கர்” என்ற பெயரில் தமிழக பா.ஜ.க.வின் தலைவர்கள் அண்மையில் வெளியிட்ட நூலில் முன் வைக்கப்பட்ட கருத்துகளை மறுத்து ‘மக்கள் விடுதலை’ மாத இதழுக்காக எழுதி வெளிவந்துள்ள கட்டுரை. அம்பேத்கர் – இந்துத்துவக் கொள்கையின் தீவிர ஆதரவாளர் என்று நிலைநிறுத்த சங்பரிவாரங்கள் துடிக்கின்றன. இதற்காக வரலாறுகள் திரிக்கப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் வழிபடக் கூடிய தலைவர்களில் ஒருவராக அம்பேத்கரையும் இணைத்துக்  கொண்டிருப் பதாக கூறுகிறார்கள். இன்னும் சில காலம் கழித்து காந்தியையும் ஆர்.எஸ்.எஸ். வழிபாட்டுத் தலைவர் பட்டியலில் இடம் பெற்றாலும் வியப்பதற்கு இல்லை. அருண்ஷோரி என்ற ஒருவர் வாஜ்பாய் அமைச்சரவை யில் இருந்தார். அரசு பொதுத் துறை பங்குகளை கார்ப்பரேட்டுகளுக்கு விற்பதற்காகவே நியமிக்கப்பட்ட அமைச்சர். அவர், ‘அம்பேத்கர் – பிரிட்டிஷ் ஆதரவாளர், பிரிட்டிஷ் உளவாளி’ என்று ஒரு ‘ஆராய்ச்சி’ நூலையே எழுதினார். பா.ஜ.க. – சங்பரிவாரங்கள் –  அந்த நூலைத் தலையில் தூக்கி வைத்து ஆடின. இப்போது தமிழக பா.ஜ.க., அம்பேத்கருக்கு சொந்தம்...

தலைநகரில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் முற்றுகை!

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை வழங்க வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது என்று கருநாடக அரசு அறிவித்துவிட்டது. இந்தத் தீர்ப்பை ஏற்கக் கூடாது என்று கருநாடக காங்கிரஸ் ஆட்சியை மிரட்டி கலவரத்தை நடத்தி வருவது கருநாடக பா.ஜ.க.த்தான். கருநாடக முதல்வர் சித்தராமய்யா, மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து நடக்க தாம் தயாராக இருந்தாலும், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது பா.ஜ.க.தான்’ என்று சுட்டிக் காட்டியிருந்தார். மத்திய அமைச்சரான சதானந்த கவுடா, மாநில பா.ஜ.க. தலைவரான எடியூரப்பா போன்றோர், உச்சநீதிமன்ற தீர்ப்பை கருநாடகஅரசு ஏற்கக் கூடாது என்று கன்னட வெறியோடு பேசி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தை முற்றுகையிட்டு தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தும் போராட்டத்தை செப்.20 அன்று பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தின. திராவிடர் விடுதலைக் கழகம், த.பெ.தி.க., தமிழ்ப் புலிகள் இயக்கம், மே 17, காஞ்சி மக்கள் மன்றம், தமிழ்ப் புலிகள்...

இந்துத்துவ பயங்கரவாதிகளை கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம் 30092016

கோவையில் திட்டமிட்டு பொதுமக்கள் மீதும், வணிக நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகளை கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை(30.09.2016) திருப்பூரில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தோழமை இயக்கங்களை இணைத்து மாலை 3 மணிக்கு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவசியம் பங்கேற்கவும்.

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் பிரகடனம் : இடஒதுக்கீட்டுக்கு ‘சமாதி’

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் பிரகடனம் : இடஒதுக்கீட்டுக்கு ‘சமாதி’

வாக்குப் பதிவின் முதல் கட்டம் முடிந்த பிறகு, தேர்தல் அறிக்கையை ஒரு வழியாக வெளியிட்டு விட்டது பா.ஜ.க,. அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு அயோத்தியில் இராமன் கோயில் கட்டப் போவதாகவும், காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைச் சட்டமான 370 ஆவது பிரிவை நீக்கப் போவதாகவும், சிறுபான்மையினரின் மதச் சட்டங்களை நீக்கி, ஒரே சிவில் சட்டம் கொண்டு வரவிருப்பதாகவும் கூறும் தேர்தல் அறிக்கை – இட ஒதுக்கீடு கொள்கையிலும் கைவைத்து விட்டது. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதியடிப்படையிலான இடஒதுக்கீடு முறைக்கு ‘சமாதி’ கட்டிவிட்டு அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கக்கூடிய ஒரு முறையைக் கொண்டு வரப் போவதாக கூறுகிறது. இது குறித்து பா.ஜ.க.வின் பேச்சாளர் நிர்மலா சீத்தாராமன், இடஒதுக்கீடு முறைகளை மாற்றி அமைக்கத் திட்டமிட் டுள்ளதாகக் கூறியுள்ளார். மிகவும் பின்தங்கியுள்ள 100 மாவட்டங்களை அடையாளம் கண்டு ஏனைய மாவட்டங்களோடு தரம் உயர்த்தும் முறையைக் கொண்டு வருவதாக இடஒதுக்கீட்டு முறை இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். இடஒதுக்கீட்டுக்கான சமூகக்...