Tagged: அம்பேத்கர் பிறந்தநாள் விழா

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை அம்பேத்கர் – ஜாதித் தலைவரல்ல; சமூக விடுதலையின் புரட்சியாளர்

அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் என்று கூறுவது தவறு. அவர் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். 14.4.2011 வியாழக்கிழமை அம்பேத்கர் பிறந்த நாளில் சேலத்தில் ஆற்றிய உரை: புரட்சியாளர் அம்பேத்கரை நாம் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? நாம் ஏன் அவரை மற்றவர்களிடம் இருந்து பிரித்து வேறுபடுத்தி தனித்துவமாக பார்க்கிறோம் என்பதில்தான் அம்பேத்கருக்கு பிறந்த நாள் எடுப்பதன் பலனாக இருக்கும். புரட்சியாளர் அம்பேத்கர் பல சிறப்புகளை கொண்டவர். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தாலும், வெளிநாடுகளுக்கு  சென்று படிக்கிற வாய்ப்பினைப் பெற்றார். அங்கு போய் ஆய்வு பட்டங்களையும், பல உயர் பட்டங் களையும் பெற்றார். தத்துவ துறையில், பொருளியல் துறையில், சட்டத் துறையில் பட்டங்களைப் பெற்று திரும்பி வந்தார் என்றால் பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வதற்காக அல்ல. இந்த இந்திய சமுதாயத்தை திருத்த பலர் வந்தார்கள். இந்த சமுதாயத்தில் இருக்கிற கேடுகளை நீக்க...

அம்பேத்கர் பிறந்த நாளில் ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு

அம்பேத்கர் பிறந்த நாளில் ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு

தமிழகத்தில் கழகத்தினர் பல்வேறு ஊர்களில் அம்பேத்கர் பிறந்த நாளில் சிலைகளுக்கு மாலை அணிவித்து ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்றனர் . களத்தூரில் : 14-4-2016 அன்று வேலூர் மாவட்டம் களத்தூரில் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா களத்தூர் கிளை, மக்கள் மன்றத்தால் எழுச்சி யோடு நடத்தப்பட்டது. ஜாதி ஒழிப்புப் போரில் உயிர்நீத்த தியாகிகளின் வீரவணக்கப் பாடலுடன் தொடங்கியது. தொடர்ந்து, மக்கள் மன்றத் தோழர்களின் பறைமுழக்கமும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. கலைநிகழ்ச்சிகளின் நடுவே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சி மாவட்ட செயலாளர் பரந்தாமன், காஞ்சி வழக்கறிஞர் அப்துல் ஹக்கீம், இயக்குநர் களஞ்சியம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர். காஞ்சி மக்கள் மன்றத்தின் சார்பாக மகேஷ் நன்றி கூறினார். களத்தூர் மக்கள் தொடர்ச்சியாக மணல் கொள்ளைக்கு எதிராக, பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே துணிச்சலோடு போராடிவருபவர்கள் ஆவார்கள். மன்னையில் : திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் விடுதலைக்கழகத்தின்...

ஆணவ படுகொலைகளை தடுத்திட தமிழக அரசு தனி சட்டம் இயற்றவேண்டும்” தலைவர் கொளத்தூர் மணி பேச்சு மன்னார்குடி அம்பேத்கர் பிறந்த நாள் 18042016

”ஆணவ படுகொலைகளை தடுத்திட தமிழக அரசு தனி சட்டம் இயற்றவேண்டும்” அம்பேத்கர் 125வது பிறந்த நாள் விழாவில்’கழக தலைவர் கொளத்தூர் மணி பேச்சு மன்னார்குடி ஏப். 20. தமிழகத்தில் ஜாதியின் பெயரால் நடைபெறுகின்ற ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்திட தமிழக அரசு உடனடியாக தனி சட்டத்தை இயற்ற வேண்டுமென அம்பேத்கர் 125வது பிறந்த நாள் விழா கருத்தரங்கில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர்மணி பேசினார். புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார்குடி சிட்டி ஹாலில் கருத்தரங்கம் திருவாரூர் மாவட்ட செயலாளர் காளிதாசு தலைமையில் நடைபெற்றது. அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார் வரவேற்றார். திராவிடர் விடுதலைக்கழக நாகை மாவட்ட செயலாளர் மகேசு, மாவட்ட அமைப்பாளர் அன்பசரன், மாவட்ட பொருளாளர் விஜயராகவன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பூபதி கார்த்திகேயன், தஞ்சை மாவட்ட செயலாளர் சித.திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கத்தில் தலைவர்களின்...