‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ உறுப்பினர் சேர்க்கை
கழகச் செயல்வீரர்களே!
‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ உறுப்பினர் சேர்க்கை தொடங்கி விட்டீர்களா?
‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. நான்கே பக்கங்களில் வெளிவரும் அந்த ஏடு, காலத்தின் அறை கூவலுக்கு உறுதியாக முகம் கொடுத்து வருகிறது என்ற உண்மை, அதன் வாசகர்களுக்குத் தெரியும்.
பெரியார் எழுத்து-பேச்சுகளை ‘குடிஅரசு’ தொகுதிகள் வழியாக நாம் வெளியிட முயன்றபோது அதற்கு தடைபோட முயன்றவர்கள் முன் வைத்த வாதங்களை முனை மழுங்கடித்தது ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’. பெரியாருக்கு எதிராக திசை திருப்பும் வாதங்களையும் வரலாற்றுத் திரிபுகளையும் முன் வைக்கும் சக்திகளின் முகத் திரையைக் கிழித்துக் காட்டி வருவதும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தான்.
எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தன்னை ஒப்படைத்துக் கொண்டு விடாமல் எந்த முகாமிலிருந்து பெரியாரிய எதிர்ப்புக் குரல் வந்தாலும் அதை உறுதியாக எதிர்ப்பதிலும் எங்கேயிருந்து பெரியாரியத்தின் ஆதரவுக் குரல் வந்தாலும் தயக்கமின்றி வரவேற் பதிலும் முன்னிற்பதும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தான்.
கழகத்தின் செயல்பாடுகளை பதிவு செய்யும் ஒரே வரலாற்று ஆவணமும், இதுதான். இந்த ஏட்டைப் பரவலாகக் கொண்டு செல்வது கழகத் தோழர் ஒவ்வொருவரின் கடமையல்லவா?
கழகச் செயல்வீரர்களே! எந்த மாவட்டம், எவ்வளவு எண்ணிக்கை யில் உறுப்பினர்களை சேர்க்கப் போகிறது என்பதை பார்க்கப் போகிறோம்! இயக்கத் தோழர்களின் செயல்பாடுகளுக்கு இது ஓர் அளவுகோல்!
இதோ, எங்கள் மாவட்டம் மற்ற மாவட்டங்களை விஞ்சிவிட்டது என்ற பெருமையை தட்டிச் செல்ல எண்ணிக்கை இலக்கை உயர்த்தி, களமிறங்குங்கள்!
டிசம்பர் 15 ஆம் தேதியோடு சந்தா சேர்ப்பு இயக்கம் நிறைவடைகிறது என்பதை மறந்து விடாதீர்கள்!
விரைவுப்படுத்துங்கள்!
பெரியார் முழக்கம் 11122014 இதழ்