வாசகர் கடிதம்
கடந்த ஒரு மாதங்களாக வருகின்ற புரட்சிப் பெரியார் முழக்கங்கள் எல்லாம் வண்ணப் புகைப்படங்களோடு வந்து கொண்டிருக்கிறது. 1973-ல் பெரியாருக்கு பிரச்சார வாகனம் அளிக்கப்பட்டது குறித்து செய்திகள் படிப்பதற்கு களத்தில் நாங்கள் நிற்பதைப் போல் இருந்தது.
அதே போல் தலையங்கத்தில் சட்டத்தின் ஆட்சியா? பார்ப்பன ஆட்சியா? என்று அந்த செய்தியை எவ்வளவு அயோக்கியத்தனமாக இந்த பார்ப்பனர்கள் செய்கிறார்கள் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டியது. டெல்லிக்கு எதிரான போராட்டங்களின் முதல் வெற்றி என்ற தலைப்பில் எழுதப்பட்ட செய்தியும், உலகிலேயே குடும்பத் தலைவிகளின் உழைப்புக்கு ஊதியம் வழங்கிய ஒரே ஆட்சி தமிழ்நாடு தான் என்ற செய்தி மிகவும் சிறப்பானது. திராவிட மாடல் ஆட்சி நாயகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை பெரியார் முழக்கத்துடன் நாங்களும் பாராட்டி மகிழ்கிறோம்.
மு.சாமிநாதன்
(நாமக்கல் மாவட்டத் தலைவர், திவிக)
பெரியார் முழக்கம் இதழ் 30042026
