மாநில அளவிலான கராத்தே போட்டி!
என்சியன்ட் சோடா கான் கராத்தே நடத்திய மாநில அளவிலான கராத்தே போட்டி 01.03.2026 ஞாயிறு அன்று காலை 10 மணியளவில் சேலம் மாவட்டம், ஓமலூர் முன்சீப் கந்தசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.ஏன்சியன்ட சோட்டாகான் கராத்தே – டோ துணை தலைவர் சிவ மகேந்திரன் (எ) குட்டி தலைமை வகித்தார். ஏன்சியன்ட சோட்டாகான் கராத்தே – டோ பொதுச்செயலாளர், தலைமை பயிற்சியாளர் கோ. சிவபெருமாள், ஜே.டி.எஸ். சரவணன் மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கராத்தே வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
கழகத் தலைவர், தமிழ்நாடு கிக் பாக்சிங் அசோசியேசன் தலைவருமான கொளத்தூர் மணி சிறப்புரையாற்றி, போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர் ஆர். மணி, சவுத் இந்தியன் பள்ளி தாளாளர் சௌந்தர்ராஜன், நார்த்பாக் பள்ளி தாளாளர் முத்து, சுவாமி மெட்ரிக் பள்ளி தாளாளர் கஞ்சமலை மற்றும் பொருளாளர் கோவிந்த ரெட்டி, பத்மாவாணி கல்லூரி நிர்வாக அலுவலர் முத்துக்குமார் கராத்தே வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர். சிறப்பு விருந்தினராக எஸ். எஸ். கே. ஆர் ராஜேந்திரன், சேர்மன், மாதேஷ் சந்திரன் (ஓம் சக்தி ஜுவல்லர்ஸ்), எஸ்.ஆர் தளபதி (கவுன்சிலர்) ஆகியோர் கலந்துகொண்டனர். சக்திவேல், ராஜதுரை, பிரேமா, கார்த்தி, அருண்குமார், பூபாலன், திரிஷால், சந்துரு, பிரேம்குமார் ஆகியோர் பயிற்சியாளராகவும் மற்றும் நடுவர்களாக இருந்தனர்.
இப்போட்டியில் கராத்தே வீரர்கள் பிரகாஷ், துரை, சசிக்குமார் மூவருக்கும் ஏன்சியன்ட சோட்டாகான் கராத்தே – டோ பொதுச்செயலாளர், தலைமை பயிற்சியாளர் கோ. சிவபெருமாள் பிளாக் பெல்ட் வழங்கினார். போட்டியினை என் செல்வகுமார் ஒருங்கிணைத்தார். எல்.ஐ.சி தனசேகரன் நன்றியுரையாற்றினார்.
பெரியார் முழக்கம் இதழ் 30042026
