பா.ஜ.க. தேர்தல் அறிக்கை : தமிழிசை தடுமாறுகிறார்

இராமர் கோயில் கட்டுவோம்; சமஸ்கிருதத்தைப் பள்ளிப் பாடமாக்குவோம் என்கிறது பா.ஜ.க. தேர்தல் அறிக்கை. ‘நீட்’ குறித்து மவுனம் சாதிக்கிறது. தமிழிசையிடம் இது குறித்து செய்தியாளர் கேட்டபோது நீட் பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது என்று சமாதானம் கூறியிருக்கிறார்.

சபரிமலை கோயிலுக்குள் அனைத்துப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் சபரிமலையில் பாரம்பரிய முறையை மீறக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப் போவதாக இதே தேர்தல் அறிக்கைதான் கூறுகிறது. இதற்கு தமிழிசையிடம் பதில் உண்டா?

பெரியார் முழக்கம் 11042019 இதழ்

You may also like...