குமரி மாவட்டத்தில் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் மனு !

குமரி மாவட்டத்தில் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் மனு !

பார்ப்பன வெறிப்பிடித்த பாரதீய சனதா கும்பல் திரிபுராவில் புரட்சியாளர் லெனின் சிலையை உடைத்ததுபோல் தமிழ் நாட்டில் பெரியார் சிலையை உடைப்போமென்றும், சாதியை ஒழித்து சமத்துவம் ஏற்படுத்தத் துடித்த பெரியாரை சாதி வெறியனென்றும் கூறிக் கொண்டு உடம்பு முழுவதும் சாதி,மத வெறிப்பிடித்துத் திரியும் ஆரிய வந்தேரி பார்ப்பான் எச்ச.ராஜாவை பிடித்து சிறையில் தள்ளி தமிழகத்தை மதவெறிக் கும்பல்களிடமிருந்து காப்பாற்ற வேண்டி;

திராவிடர் விடுதலைக் கழகம்,குமரி மாவட்டம் சார்பாக இன்று 07-03-2017, புதன் கிழமை, காலை 11.00 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறீ நாத் அவர்களிடம் புகார் மனு தோழர்.வழக்குரைஞர்.வே.சதா(மாவட்டத் தலைவர்,)தலைமையில் தோழர்கள் தமிழ் மதி(மாவட்டச் செயலாளர்),நீதி அரசர்(தலைவர்,பெரியார் தொழிலாளர் கழகம்),சூசையப்பா (முன்னாள் மாவட்டத் தலைவர்),
அப்பாஜி(வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர்,தி.மு.க),வைகுண்ட ராமன்,வின்சென்ட் ஆகியோரால் வழங்கப்பட்டது.

Image may contain: 7 people, people smiling, people standing and outdoor

You may also like...