541 பெண் போராளிகளின் அறைகூவல்
அக்டோபர் 07ஆம் தேதி சென்னையில் பெரம்பூர் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகம் களத்தில் நிற்கும் பெண் போராளிகளை இணைத்து மாபெரும் ஜாதி ஒழிப்புப் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி இருக்கிறது.
மிகக் குறிப்பிடத்தக்க சிறப்புடன் நடந்த இந்த மேடையில் “பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தை சார்ந்த போராடுகிற நெடுவாசல், கதிராமங்கலம் மக்களின் போராட்டத்தை ஆதரித்து துண்டறிக்கை கொடுத்தார் என்பதற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வளர்மதி, எப்போதும் மக்கள் போராட்டத்தில் நிற்கும் மக்கள் மன்றத்தை சார்ந்த மகேசு, ஜாதி வெறிக்கு அன்பு காதலனை பறிகொடுத்த உடுமலை கவுசல்யா, கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி, எழுத்தாளர் ஜெயராணி, தமிழ்நாடு அறிவியல் மன்றத்தினுடைய பொறுப்பாளர் ஆசிரியர் சிவகாமி என்று பெண்கள் ஒரே மேடையில் இணைந்து, ஜாதி சங்கங்களை புறக்கணித்து சுயஜாதி மறுப்பாளராக இருங்கள் என்று அறைகூவல் கொடுத்தார்கள்”.
ஆயிரக்கணக்கில் இளைஞர்கள், பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் அந்த நிகழ்வுக்கு திரண்டிருந்தார்கள். ஜாதி ஒழிப்புக் களத்தில் இளைஞர்கள் இறங்கிவிட்டார்கள்.
பெண் போராளிகள் அதற்கு தலைமை தாங்கிவிட்டார்கள் என்று ஜாதிவெறியர்களுக்கு பறைசாற்றுகிற ஒரு நிகழ்ச்சியாக என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக இது நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போராட்டக்களம் வளரட்டும்.