511 அரியலூர் அனிதா தற்கொலை – நீட் தேர்வின் உயிர்ப்பலி 01092017
அரியலூர் அனிதா தன் வாழ்வை முடித்து கொண்டுவிட்டார்.
“+2 தேர்வில் 1176 மதிப்பெண்களை பெற்று மருத்துவ கனவுடன் வாழ்ந்த ஒரு மாணவி. நீட் தேர்வு அவரை பழிவாங்கி விட்டது. கிராமத்தில் இருந்து வந்த ஒரு தலித் பெண். தந்தை மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருப்பவர். கழிப்பறை இல்லாத வீடு. உச்சநீதிமன்றம் வரை சென்று சமூகநீதிக்காக அவர் போராடி பார்த்தார்”.
“ஓராண்டுக்கு நாங்கள் விதிவிலக்கு தருகிறோம் என்று கூறிவிட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு தர முடியாது என்று பாஜ.க எடுத்த கல்வி துரோக கொள்கை அனிதாவை பழிவாங்கி விட்டது. மாநில அரசும் தன்னுடைய அர்ப்ப அரசியல் நலனுக்காக கொத்தடிமை ஆட்சியாக மாறிப் போய் ஜெயலலிதா நீட் தேர்வில் எடுத்த உறுதியான முடிவை எடுக்காமல் தமிழக மக்களுக்கு மகத்தான துரோகத்தை எடுத்துவிட்டது”.
மருத்துவ கல்லூரியின் கதவுகள் தனக்காக திறந்திருக்கும் என்று நம்பிக்கையில் வாழ்ந்த அனிதாவுக்கு இப்போது மருத்துவமனையின் கதவுகள் அந்த பெண்ணின் உடல் பரிசோதனைக்காக திறக்கப்பட்டு இருக்கிறது.
சமூகநீதிக்கு எதிரான இந்த கொடுமையை எதிர்த்து தமிழ்நாட்டு இளைஞர் சக்திகள், மாணவர் உலகம், சமூகநீதி சக்திகள் போராட வேண்டும்.
போராடி பெற்றால் தான் நம் உரிமையை மீட்க முடியும் என்ற உறுதியான முடிவுக்கு வர வேண்டிய நேரம்.!
சிந்திப்போம்.!