502 விநாயகர் சிலைகளை வைக்கும் இந்து அமைப்புகளுக்கு ஒரு கேள்வி” 22082017
தமிழ்நாட்டில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து மகா சபா, சிவசேனா என்று பல்வேறு பெயர்களில் இயங்கும் சிறு சிறு குழுக்கள் அத்தனையும் பாரதீய ஜனதா கட்சியின் தூசிப்படைகள்.
தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி அமைவதற்காக அடித்தளம் அமைத்து கொடுப்பதற்காக செயல்படும் இயக்கங்கள். இந்த அமைப்புகள் தான் விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு தீவிரமாக பாடுபட்டு கொண்டிருக்கின்றன. அவர்களை பார்த்து நாம் கேட்கிற கேள்வி ஒன்று உண்டு.
இப்போது, “மோடியின் பாரதீய ஜனதா கட்சி கொண்டு வந்திருக்கிற நீட் தேர்வானலும், போராடுகிற விவசாயிகளை அடிமைப்படுத்துகிற பிரச்சனையாக இருந்தாலும், சிறுகுறு தொழிலாளர்களை ஒடுக்குகிற ஜி.எஸ்.டி வரி திட்டத்தை கொண்டு வந்திருக்கிற திட்டமாக இருந்தாலும், மண் வளத்தை பாதிக்கிற ஓ.என்.சி யின் எரிவாயு எடுக்கின்ற திட்டமாக இருந்தாலும், இத்தனை திட்டங்களாலும் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும்பான்மை இந்துக்கள் தான்”.
இந்த இந்துக்கள் உரிமைகளை மோடி ஆட்சி பறிக்கிறதே என்பதை எதிர்த்து குரல் கொடுக்காத அமைப்புகள் தான் இந்த இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற அரசியல் அமைப்புகள் மாறாக இந்த திட்டங்களை அவர்கள் ஆதரித்து கொண்டிருக்கிறார்கள். இப்போது விநாயகர் சிலையை அமைப்பதற்கு நமது மக்களை அழைக்கிறார்கள்.
உண்மையிலேயே இந்துக்களை காப்பதற்கு தான் விநாயகர் சிலை ஊர்வலம் என்று சொன்னால், ” இந்துக்களின் வாழ்வுரிமைகளை பறிக்கிற மோடியின் சட்டங்களை எதிர்த்து இவர்கள் குரல் கொடுக்காதது ஏன்? என்ற கேள்வியை நாம் அவர்களிடம் எழுப்ப வேண்டும்.
விநாயகர் சிலை ஊர்வலம் என்பது இந்து மக்கள் கட்சியும், இந்து முன்னணியும் நடத்துகிற அரசியல் ஊர்வலம். பாஜகவிற்கு ஆதரவு தேடுகிற ஒரு ஊர்வலம் என்ற ஆபத்தை உணர்ந்து இந்த அரசியலை, இந்துக்கள் என்ற நம்பி கொண்டிருக்கிற நமது மக்கள் புறக்கணிக்க முன் வர வேண்டும்.
சிந்திப்போம்.!
நன்றி…வணக்கம்…
– தோழர்.விடுதலை இராசேந்திரன்
பொதுச் செயலாளர்