‘பெல்’ தங்கராசுவை நேரில் சந்தித்து தோழர்கள் நலம் விசாரித்தனர்
உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்துவரும் திருச்சி தோழர் ‘பெல்’ தங்கராசு அவர்களை தூவாக்குடியிலுள்ள அவரது இல்லத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் புதியவன், தாமரைக்கண்ணன், குணா, டாக்டர் தமிழ்ச்சுடர் ஆகியோர் 26.12.2011 அன்று நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். பெல். தங்கராசு நலம் பெற்று வருகிறார்.
பெரியார் முழக்கம் 12012012 இதழ்