நேரு பல்கலைக் கழகத்தில் தீட்டு கழிக்கும் சடங்காம்!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் பெண்களும் தடையின்றி நுழைய முடிந்தது. தேச விரோத சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர் சங்கத் தலைவர் கன்யாகுமார் சிறையிலிருந்து பிணையில் விடுதலை பெற்று திரும்பியபோது நிகழ்த்திய உரையிலும் இதை பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.

இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம், சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டது. இப்பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் மாணவிகளுக்கு 5 புள்ளிகள் மதிப்பெண்ணும், பிற்படுத்தப்பட்டோருக்கு 10 புள்ளிகள் மதிப்பெண்ணும் சலுகைகளாக வழங்கப்பட்டு வந்ததை பல்கலைக் கழக நிர்வாகம் திடீரென இரத்து செய்துவிட்டது.

இதற்கிடையே கன்யாகுமாரும், மாணவர்களும் ‘தேச விரோத’ செயலில் ஈடுபட்டார்கள் என்றும், அதனால் பல்கலைக்கழகம் தீட்டாகிவிட்டது என்றும் ஆர்.எஸ்.எஸ். மாணவர்கள்,  பார்ப்பன புரோகிதர்களை வைத்து தீட்டு கழிக்கும் சடங்குகளை ‘ராம நவமி’ அன்று நடத்தியுள்ளனர்.

 

பெரியார் முழக்கம் 21042016 இதழ்

You may also like...