எழுச்சியுடன் நடந்த தர்மபுரி கழக செயலவை

tharma
திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 19.7.2015 காலை 11 மணியளவில் தர்மபுரி பெரியார் மன்றத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடந்தது.கழகத் தோழர் கிணத்துக்கடவு நிர்மல் குமார்,கடவுள்,ஆன்மா மறுப்பு கூற, மாவட்டக் கழக சார்பில் நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்று ஏற்பாடுகளை செய்த பரமசிவம் வரவேற்புரையாற்றினார்.

சென்னை மாவட்டக் கழகத் தோழர் சரவணன்,நெல்லை மாவட்டத் தலைவர் குறும்பலபேரிசு. வடிவேலு (3.11.2014), தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் க.மதன் (16.4.2015), மதுரை கைவண்டி கருப்பு, கழக ஓவியர் மேட்டூர் சாதகப் பறவை சேகர், கரூர் இராஜா ஆகியோர் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுனம் காத்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், செயலவை முன் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள், கழக செயல் பாடுகளை விளக்கி தொடக்க உரையாற்றினார்.பின்னர், மாவட்ட வாரியாக தோழர்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

ஈரோடு வடக்கு – நாத்திக ஜோதி, ஈரோடு தெற்கு – சண்முகபிரியன், சேலம் கிழக்கு – பரமசிவன், சேலம் மேற்கு – கோவிந்தராஜன்,விழுப்புரம் – நாவாப்பிள்ளை, பொள்ளாச்சி – நிர்மல்குமார், மதுரை – பாண்டியன், தென் சென்னை – வேழவேந்தன், தஞ்சை – பாரி,காஞ்சிபுரம் – தெள்ளமுது, திருப்பூர் – முகில்ராசு, தூத்துக்குடி – பொறிஞர் சி.அம்புரோசு, கிருட்டிணகிரி – குமார், கோவை நேருதாஸ், நாகை – மகேஷ், நாமக்கல் – சக்திவேல், கரூர் – முகமது அலி (எ) பாபு, திருவாரூர் – காளிதாசு, கடலூர் – பாரதிதாசன், விருதுநகர் – கணேசமூர்த்தி, சிவகங்கை – பெரியார் முத்து, தர்மபுரி – வையாபுரி, வடசென்னை – யேசு.


மாவட்ட பொறுப்பாளர்களைத் தவிர கருத்துகளை முன் வைத்த தோழர்கள்: நிவாஸ்-கோபி செட்டிபாளையம், பரிமளராசன்-முகநூல் குறித்து விளக்கினார். விஜயக்குமார்-இளையதளம் குறித்து விளக்கினார்.


மதியம் அனைவருக்கும் மாவட்டக் கழகம் சிறப்பாக உணவு ஏற்பாடு செய்திருந்தது. 3.30 மணியளவில் மீண்டும் செயலவை தொடங்கியது.


மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழு கோவிந்த ராஜ், பாடல்கள் பாடினார். தொடர்ந்து, தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ஈரோடு வெங்கட், தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் ஆசிரியர் சிவகாமி, சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம் சார்பில் கொளத்தூர் குமார் உரையாற்றினர்.
அதைத் தொடாந்து கருத்துகளை முன் வைத்து தலைமைக் குழு உறுப்பினர்கள் பேசினர்.


பேசியோர்:
அய்யனார், சக்திவேல், இளையராசா, அன்பு தனசேகரன், கோபி இளங்கோ, துரைசாமி, தபசி குமரன், இரத்தினசாமி, பால். பிரபாகரன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தீர்மானங்களை முன் மொழிந்து, தீர்மானங்களை விளக்கியும் பரப்புரைத் திட்டம், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டை மேலும் பரப்புதல், அமைப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் விரிவாகப் பேசி, மாநிலப் பொறுப்பாளர்களை அறிவித்தார். நாகராஜ் நன்றி கூற, 7 மணியளவில் செயலவைக் கூட்டம் நிறைவடைந்தது.

You may also like...

Leave a Reply