Category: சென்னை

‘விநாயகனை’ மதவெறி அரசியலுக்கு பயன்படுத்தாதே! எதிர் ஊர்வலம்: தோழர்கள் கைது! 0

‘விநாயகனை’ மதவெறி அரசியலுக்கு பயன்படுத்தாதே! எதிர் ஊர்வலம்: தோழர்கள் கைது!

விநாயகன் சிலை ஊர்வலம் என்ற பெயரில் மதவெறி அரசியல் ஊர்வலத்தை இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அமைப்புகள் தொடர்ந்து நடத்தி, பதட்டத்தை உருவாக்கி வருகின்றன. சென்னையில் இதற்காக பெரும் தொகை செலவிடப்படுகிறது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்ட அப்பாவி இளைஞர்கள் இந்த ஊர்வலங்களுக்காக வலைவீசப்படுகிறார்கள். இதில் பெரும்பகுதி இளைஞர்கள் அன்றைய ஒரு நாள் மகிழ்ச்சியை கொண்டாடுவதைத் தவிர வேறு மதவெறி அரசியலில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லை. ஆனால், ‘இந்துத்துவா’ அரசியலுக்கு மக்கள் ஆதரவு இருப்பதுபோல் ஒரு தோற்றத்தைத் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். 1996 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, பெரியார் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டபோது, அதன் தொடக்க விழாவிலேயே சென்னையை அச்சுறுத்தி வரும் விநாயகன் சிலை ஊர்வலத்துக்கு எதிரான போராட்டம் அறிவிக்கப்பட்டது. விநாயகன் சிலை ஊர்வலம் வரும் பாதையில் அதற்கு நேர் எதிராக பெரியார் சிலை ஊர்வலத்தை நடத்துவோம் என்று தொடக்க விழா நிகழ்விலேயே பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது. அப்போது முதலமைச்சராக...

நீதிபதிகள் நியமனத்தில்  சமூக நீதியைப் பறிக்காதே கழக சார்பில் எழுச்சி ஆர்ப்பாட்டம் 0

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியைப் பறிக்காதே கழக சார்பில் எழுச்சி ஆர்ப்பாட்டம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங் களில் சமூக நீதியை வற்புறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 25..2.2015 மாலை 4 மணியளவில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால். கனகராஜ், முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எ°. ரஜினிகாந்த், சமூக நீதிப் பேரவைத் தலைவர் கே.பாலு, ஜனநாயகம் மற்றும் சமூக நலன்களுக்கான வழக்கறிஞர் பேரவையைச் சார்ந்த செ. விஜயகுமார், அகில இந்திய எல்.அய்.சி. பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க செயலாளர் கு. கமலக்கண்ணன், சிறுபான்மையினர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஜைனூல் ஆபீதீன், பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வா. நளினி, வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் அறிவழகன், துணைத் தலைவர் கினி லீயோ மேனுவேல், சி.பி.அய்.எம்.எல். மக்கள் விடுதலை சார்பில் செல்வி, மனித நேய மக்கள் கட்சி...

கோகுல்ராஜ் படுகொலை: காவல்துறை இயக்குனரிடம் கழகம் மனு 0

கோகுல்ராஜ் படுகொலை: காவல்துறை இயக்குனரிடம் கழகம் மனு

தலித் இளைஞர் கோகுல்ராஜ், ஜாதி ஆணவக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கொலை வழக்காக மாற்ற வலியுறுத்தி, 1.7.2015 பகல் 1 மணியளவில் கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சட்டம் ஒழுங்குப் பிரிவு துணை இயக்குனரிடம் மனு அளித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிக்க ஜாதியாக இருக்கும் சமூகப் பிரிவைச் சார்ந்தவர்களை காவல்துறை அதிகாரிகளாக நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், காவல்துறை கல்வித் துறையுடன் இணைந்து ஜாதி எதிர்ப்புப் பரப்புரை நடத்துவதை வரவேற்றும், அதே நேரத்தில் கழகம் நடத்தும் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை இயக்கத்துக்கு காவல்துறை தடை விதிப்பதை நிறுத்தக் கோரியும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. கோரிக்கைகளில் நியாயம் இருப்பதாகக் கூறிய அதிகாரி, சமூக நீதி, ஜாதி வெறி தலைதூக்கும் ஆபத்துகளை சுட்டிக்காட்டினார். மாவட்ட செயலாளர் உமாபதி, தபசி குமரன், வழக்கறிஞர் அருண், அன்பு தனசேகரன் ஆகியோர் இயக்குனரை சந்திக்க உடன் வந்தனர். பெரியார் முழக்கம் 09072015 இதழ்

0

கோகுல்ராஜ் படுகொலையை கண்டித்து எழும்பூர் இக்சாவில் கூட்டம்

கோகுல்ராஜ் படுகொலையை கண்டித்து அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டம், சென்னை, சார்பாக எழும்பூர் இக்சாவில் 13.07.2015 அன்று மாலை 5 மணியளவில் அரங்க கூட்டம் நடைபெற்றது. பேரசிரியர் வீ.அரசு, தோழர் செல்வி, கவின் மலர், தோழர் தியாகு, கழகப் பொது செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவாக தோழர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

0

இளவரசனை தொடர்ந்து கோகுல்ராஜ்

”திராவிடர் விடுதலைக் கழகம் இந்த ஜாதி ஆணவப் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறது”- கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை. கோகுல்ராஜ் கொலை’கவுரவக் கொலை’ என்ற பெயரில் ‘ஜாதி ஆணவக் கொலைச் சம்பவங்கள்’ தமிழகத்தில் தலைதூக்கி வருவது தமிழ் நாட்டுக்கே தலைக்குனிவாகும். 2013ம் ஆண்டு இளவரசன் என்ற தலித் இளைஞர் திவ்யா என்கிற வன்னியப் பெண்ணை காதலித்து திருமணம் செய்த குற்றத்திற்க்காக அவர்களை ஜாதிவெறியர்கள் கட்டாயப்படுத்தி அச்சுறுத்தி பிரித்தனர்.கடைசியில் இளவரசனின் பிணம் தண்டவாளத்தில் கிடந்தது. இப்போது பொறியியல் பட்டதாரியான தலித் இளைஞர் கோகுல்ராஜ் அதே கதிக்கு ஆளாகி உள்ளார்.உயர் ஜாதி என சொல்லிக் கொள்ளும் கவுண்டர் ஜாதிப்பெண்ணை காதலித்ததால் அவர் ஜாதிவெறியர்களால் கடந்த 23ம் தேதி கடத்தப்பட்டுள்ளார்.24ம் தேதி தலை துண்டிக்கப்பட்டுல்ள நிலையில் பள்ளிபாளையம் கிழக்கு தொட்டி பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். திருச்செங்கோடு மலைக்கோவிலுக்கு கோகுல்ராஜ் ஒருமாணவியோடு சென்று சாமி கும்பிடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.கடைசியாக...

0

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறை தலைவரிடம் மனு

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறை தலைவரிடம் மனு! நாள் : 01.07.2015 புதன்கிழமை காலை 11 மணி. இடம் : காவல்துறை தலைமை அலுவலகம், காமராஜர் சாலை,மெரீனா கடற்கரை அருகில்,சென்னை.4 தமிழ் நாட்டில் நடக்கும் ஜாதீய வன்கொடுமை,ஜாதி வெறிப் படுகொலைகளில் காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், குறிப்பிட்ட ஆதிக்க ஜாதியினர் வாழும் மாவட்டங்களில் அதே ஜாதியை சேர்ந்தவர்களை காவல்துறை அதிகாரிகளாக நியமனம் செய்யக்கூடாது என வலியுறுத்தியும், நாமக்கல் பொறியியல் கல்லூரி மாணவன் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கு நேர்மையாகவும்,விரைவாகவும் நடக்கும் பொருட்டு வழக்கை சி..பி.அய்.க்கு மாற்றவேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தமிழக காவல்துறை தலைவர் (D.G.P.)அவர்களிடம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நாளை 01.07.2015 அன்று காலை 11 மணியளவில் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் மனு அளிக்கப்படுகிறது. தொடர்புக்கு : 7299230363 தோழர் உமாபதி மாவட்ட செயலாளர்,சென்னை.

0

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை-சி.பி.ஐ.விசாரணையை தடுக்கும் ஆந்திர அரசு

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலையில் சி.பி.ஐ.விசாரணையை தடுக்கும் ஆந்திர அரசுக்கு எதிராக வழக்காடவும்,ஆந்திர சிறையில் வாடும் சுமார் 2000 தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு. 15.07.2015 அன்று சென்னையில் ம.தி.மு.க. தலைமையகமான ‘தாயகத்தில்’ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன்,தமிழக மக்கள் வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன், விடுதலைசிறுத்தைகள் அமைப்பின் தோழர் பாலசிங்கம்,தமுமுக தலைவர் பேராசியர் ஜிவாஹிருல்லா,மார்க்ஸிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் வீரபாண்டியன்,இந்திய கம்னியூஸ்ட் கட்சி சார்பில் தோழர் பீமாராவ்,திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி,தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் ஆனூர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த ஆலோசனைக்கூட்டத்தின் நோக்கம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பேட்டியளித்தார். ஆந்திராவில் 20 கூலித்தொழிலாள தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட...