மீண்டும் படேல்
திரு.படேல் அவர்கள் தமிழ்நாட்டிற்குள் வந்து செய்துவந்த பார்ப்பனப் பிரசாரத்தைப் பற்றி ‘ஜஸ்டிஸ்’ ‘திராவிடன்’ ‘குடி அரசு’ ‘குமரன்’ ‘தமிழ்நாடு’ ‘தமிழன்’ ‘சென்னை வர்த்தமானி’ ‘நாடார் குலமித்திரன்’ முதலிய பல பத்திரிகைகள் கண்டித்தெழுதி இருந்தது வாசகர்களுக்குத் தெரிந்த விஷய மாகும். ஏறக்குறைய இவைகளெல்லாம் நமது பார்ப்பனர்கள் திரு.படேல் தகவலுக்குக் கொண்டு போகப்படாமல் சூழ்ச்சிகள் செய்திருந்தாலும் ஆங்காங்கு சென்ற இடங்களிலெல்லாம் கேட்கப்பட்ட கேள்விகளாலும் ஆங்காங்கு இவருக்கு விநியோகிக்கப்பட்ட பத்திரிகைகளாலும் ஒருவாறு அறிந்துதான் இருக்க முடியுமென்று சொல்லுவோம். எப்படியெனில் திரு.படேல் மேற்கண்ட பத்திரிகைகள் மீது பாய்ந்து தனது முழு விஷத்தையும் கக்கி அவைகளை யாரும் படிக்கக் கூடாதென்று சொல்லி வருவதால் அவற்றிலுள் ளது இன்னது என்பதை உணராமல் இப்படிச் சொல்லியிருப்பாரென்று நினைப்பதற்கில்லை. தவிரவும் தமிழ்நாட்டில் பல இடங்களில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சமாதானம் சொல்ல முடியாமல் கஷ்டப்பட்டு தனது வருத் தத்தை தெரியப்படுத்தியிருப்பதாலும் ஒருவாறு விஷயங்கள் தெரிந்திருக்கலாம். தவிரவும் மதுரையில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த பல நண்பர்களைக்...
