Author: admin

ரஷ்யாவின்  மேம்பாடு

ரஷ்யாவின்  மேம்பாடு

  சமீப  காலமாக  முதலாளித்துவ  நாட்டில்  ஏற்பட்டிருக்கும்  அளவு  கடந்த  பொருளாதார  நெருக்கடியை  வாசகர்கள்  நன்கு  அறிவார்கள்.  ஆனால்  சோவியத்  ருஷ்ய  நாடோ  சமதர்மத்  திட்டத்தால்  பொருளாதார  முற்போக்குடன்  தலைநிமிர்ந்து  பிறநாடுகள்  வெட்கித்  தலைகுனியும்படி,  முன்னேறிச்  செல்லுகின்றன.  ஒவ்வொரு  முதலாளித்துவ  ராஜ்யத்திலும்  3  கோடி,  4  கோடி  பேர்கள்  வேலையில்லாமல்  திண்டாடி  அவதியுறும்  போது,  ரஷ்யாவோ  தங்கள்  நாட்டில்  “”வேலையில்லாது  ஏங்குவோரோ  அல்லது  நாளைக்கென்  செய்வோம்  என்று  கவலையுறுவோறோ”  இல்லாமல்  செய்து  விட்டது. ரஷ்யாவைப்  பற்றி  முதலாளித்துவ  நாடுகளும்  அரசுகளும்  செய்யும்  விஷமப்  பிரசாரமானது  191618  வருஷங்களின்  மகாயுத்தப்  புளுகுகளுக்குச்  சமானமாகும். சோவியத்  ரஷ்யர்களின்  முதல்  5  வருஷ  திட்டத்தின்  முக்கிய  நோக்கமானது: பொருள்கள்  உற்பத்தி  விஷயத்திலும்,  அதன்  அபிவிருத்தி  விஷயத்திலும்  பழைய  ரஷ்யர்கள்  கொண்டிருந்த  முறையை  அடியோடு  மாற்றி  நவீன  முறையால்  அதிக  மேம்பாட்டிற்கு  உழைத்து  வெற்றி  பெருதல்  என்பதாகும்.  விவசாய  விஷயத்தில்  கூட்டுப்  பண்ணைத்  தொழில்  முறையையும்,  இயந்திர ...

தொழிலாளிக்கு  லாபத்தில்  பங்கா?

தொழிலாளிக்கு  லாபத்தில்  பங்கா?

  காந்தி  ஏமாறாதீர்கள் பிரஞ்சு  இந்தியாவில்  கிருஸ்தவர்கள்  ஏகபோக  உரிமை  அநுபவிப்பதை  போல,  தமிழ்நாட்டில்  பார்ப்பனர்  ஏக  போக  உரிமைக்காரர்கள்.  இவர்களைப்  போலவே  பம்பாய்,  ஆமதாபாத்  மில்கார  முதலாளிகளாகும்.  இந்திய  சர்க்கார்  ராணுவத்துக்கும்,  வெள்ளைக்கார  மாஜி  உத்தியோகஸ்தர்கள்  பென்ஷனுக்கும்  பணம்  ஒதுக்க  ஒருக்கால்  மறந்தாலும்  மறப்பார்கள்.  நமது  வடநாட்டு  மில்  முதலாளிகள்  தங்கள்  சங்கதியை  மறப்பதில்லை.  கதர்  துணிக்கு  கதர்  பக்தர்கள்  வரிப்பணம்  கொடுப்பதைப்  போலவே  மில்கார  முதலாளிகளுக்கும்,  சர்க்காரும்  வரி  நஷ்டமடைவதைப்  போல்,  மில்  துணி,  நூல்  இவைகளை  உபயோகப்படுத்துகிறவர்கள்  வரி  கொடுக்க  வேண்டும். சில  வருடங்களுக்கு  முன்பு  ஆமதாபாத்  மில்  தொழிலாளிகளுக்குள்  ஓர்  பலமான  ஒற்றுமையுண்டாகி  பெரும்  கிளர்ச்சி  செய்து  சிறிது  பலன்  அடைந்தார்கள்.  இவ்வருடம்  ஆமதாபாத்  மில்  முதலாளிகள்  தங்கள்  மில்லுகளில்  ஆள்  குறைப்பு  திட்டத்தையும்  கூலி  குறைவு  திட்டத்தையும்  கையாள  ஆரம்பித்ததும்,  மில்  தொழிலாளிகள்  பலமாக  விழித்துக்  கொண்டார்கள்.  முன்பு  நடந்த  ஒப்பந்தத்துக்கு  விரோதமாக,  மில் ...

மே  தினம்

மே  தினம்

  மே  மாதம்  1  தேதி  தொழிலாளர்  பண்டிகை. உலகத்  தொழிலாளர்  ஒன்றுபடும்  நன்னாள், இந்தியத்  தொழிலாளர்களே! மே  திருநாள்  கொண்டாடத்  தவறாதீர். சுயமரியாதைச்  சங்கங்கள் ஒவ்வொன்றும்  மே  திருநாள்  கொண்டாடுமாக! புரட்சி  அறிவிப்பு  22.04.1934

மே  தின  விசேஷ  அறிக்கை

மே தின விசேஷ அறிக்கை

அடுத்த வாரம் 29 தேதி வெளிவரும் நமது “”புரட்சி”யில் மே தினம் கொண்டாட வேண்டிய விதம் முதலியன விபரமாக அறிவிக்கப்படும். 1. மே மாதம் முதல் தேதி செவ்வாய்க்கிழமையன்று சகல நகரங்களிலும், கிராமங்களிலும் பொதுக்கூட்டங்களிட வேண்டும். 2. பிற்பகல் அந்தந்த ஊர் சங்கக் காரியாலயங்களிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு பொதுக் கூட்டமிட வேண்டிய இடத்திற்குச் செல்ல வேண்டும். 3. பொதுக்கூட்டத்தில் உபன்யாச நிகழ்ச்சிகள் நடந்ததும் மே தின அறிக்கை தலைவரால் படிக்கப்பட்டு பொதுக்கூட்டத்தினர் அங்கீகரிக்கச் செய்ய வேண்டும். 4. நாளது 29ந் தேதி “”புரட்சி”யிலும் 30ந் தேதி “”பகுத்தறிவி”லும் மே தின அறிக்கை வெளிவரும். புரட்சி அறிக்கை 22.04.1934

நமது  கடமை

நமது  கடமை

  உலக  முழுமையும்,  அந்தந்த நாடுகளில்  அந்தந்த  கக்ஷிகள்  அரசியலைப்  பிடித்து  அந்தந்த  தேசவாசிகளுக்கு  நன்மை  புரிகின்றோமென்று  சொல்லிக்  கொண்டு,  பற்பல  துவாராக்களில்  உழைத்து  வருகின்றன.  நமது  ஆங்கில  நாட்டின்  நாஷனலிஸ்ட்  கட்சி,  அதாவது  தேசீயக்  கக்ஷி  என்று  வழங்கும்  ஒரு  சார்பார்,  தோழர்  ராம்சே  மக்டொனால்டின்  தலைமையின்கீழ்  ஆங்கில  நாட்டு  அரசியலை  நடத்தி  வருகின்றார்கள்.  இவர்களுடைய  முக்கியப்  போக்கு  என்னவெனில்,  இருக்கும்  சமூகதிட்டத்தை  வைத்துக்  கொண்டு  அங்கோர்  சீர்திருத்தம்,  இங்கோர்  சீர்திருத்தத்தைக்  காட்டி,  ஆண்டு  வருவதாகும்.  பிரான்ஸ்  நாட்டிலும்,  பழைய  சேம்பர்  ஆவ்  டிப்புடிஸ்  என்ற  பழைய  பார்லிமெண்டை  வைத்துக்  கொண்டு  முதலாளி,  சிறு  முதலாளி  இயக்கங்களைப்  பாதுகாத்து  வருகின்றனர்.  ஜர்மனியில்  ஏகாதிபத்திய  கெய்சர்  ஆட்சியை  உடைத்தும்,  மழை  நின்றும்  தூவானம்  நிற்கவில்லை  என்பது  போல்  ஜெர்மனியைப்  பிடித்த  “”சனியன்”  ஒழியவில்லை.  அவ்வுலகில்,  பெரும்பான்மையோர்  தொழிலாளர்,  விவசாயிகளாக  விருக்கின்றனர்.  ஏகாதிபத்திய  அரசில்  பட்டு  வந்த  கஷ்டங்களுக்கு  விமோசனமின்றி  அத்தேச வாசிகள் ...

திருச்சி  தேவருக்கு  துணை

திருச்சி  தேவருக்கு  துணை

  திருச்சி  முனிசிபல்  சபைத்  தலைவரும்  நீலகிரி  முனிசிபல்  சபைத்  தலைவரும்  இன்று  சர்க்கார்  உத்திரவை  சந்தித்து  இருக்கிறார்கள்.  நீலகிரி  முனிசிபல்  சபைத்  தலைவரை,  அவர்  ஏன்  ராஜினாமா  செய்யக்  கூடாதென்பதற்கு  சரியான  காரணம்  காட்டுமாறு  நமது  மாகாண  முதல்  மந்திரியான  கனம்  பொப்பிலி  கேட்டு  இருக்கிறார்.  இவ்விதம்  கேட்பது  தப்பு என்று  “ஹிந்து’கூட கோபித்துக்  கொள்கிறது.  இதைப்  போன்றுதான்  திருச்சி  நகரசபை  தலைவரை  கேட்டதும்  தப்பு  என்று  நாம்  சொல்கிறோம். திருச்சி,  நீலகிரி  இவ்விரண்டு  நகரசபைத்  தலைவர்களையும்  நாமும்  தமிழ்  நாட்டாரும்  நன்கு  அறிவோம்.  இவர்களை  இவ்விதம்  விலக்க  காரணம்  கேட்பதும்  நியாயமானது  என்று  நமக்கு  தோன்றவில்லை.  நியாயமல்ல  என்பதுடன்  இவ்வித  உத்திரவுகளும்  மே.த.க.  தலையீட்டினாலாவது  உடனே  வாபீஸ்  வாங்கிக்  கொள்ளப்படுமென்று  நம்புகிறோம்.  மே.த.க.  முன்பு  மதுரை  ஜில்லா  போர்டில்  ஜாடையாக  புத்தி  மதி  கூறி  சமரசம்  உண்டாக்கினது  போல்  இதனையும்  செய்யுமாறு  கேட்டுக்  கொள்ளுகிறோம். நடப்பு முனிசிபல்  சபை ...

சீர்திருத்தக்  காந்தி

சீர்திருத்தக்  காந்தி

  சமரஸமே  காந்தியாரின்  பாலிஸி.  காந்தியாரை  சர்வாதிகாரியாகக்  கொண்டு  காங்கிரஸ்  பெருமையடித்துக்  கொள்கிறது.  காந்தியாரின்  தலைமையில்  காங்கிரஸ்  விவசாயிக்கும்  ஜமீன்தாருக்கும்,  தொழிலாளிக்கும்,  முதலாளிக்கும்,  ஒடுக்கப்பட்டவனுக்கும்,  உயர்ஜாதிக்காரனுக்கும்  ஒரே  சமயத்தில்  ஒத்தாசை  செய்ய  முயல்கிறது.  தற்கால  பொருளாதார,  சமூக  ஸ்தாபனங்களை  மாற்றியமைக்காது  விவசாயிக்கும்,  தொழிலாளிக்கும்  ஒடுக்கப்பட்டவனுக்கும்  நீதி  செலுத்த  முடியுமென்று  காந்தியார்  கனவு  காண்கிறார்.  ஏன்?  அவர்  சீர்திருத்தவாதி;  சமதர்மியல்ல. காந்தியாரின்  சீர்திருத்தம்  பலிக்காது.  அவரைப்  போல்  முயன்ற  அநேகர்  முடிவில்  தோல்வியடைந்ததாகச்  சரித்திரம்  கூறுகிறது.  எல்லோருக்கும்  நல்ல  பிள்ளையாக  நடப்பது  உலகத்தில்  முடியாத  காரியம்.  காந்தியார்  முடியாத  காரியத்தை  முடிக்க  முயன்று  காலத்தை  வியர்த்தமாக்குகிறார்.  “எலியையும்  பூனையையும்’  “ஆட்டுக்  குட்டியையும்  ஓநாயையும்,  “தவளையையும்  பாம்பையும்’  ஒரே பொழுதில்  ஆதரிக்க  முடியாது.  முதலாளி,  ஜமீன்தார்,  உயர்  ஜாதிக்காரர்களைப்  பூரணமாய்  ஆமோதிக்கவும்  காந்தியாருக்கு  முடியவில்லை.  அவர்களை  எதிர்த்து  உழைப்பாளிகளோடு  சேர்ந்து  கொள்ளவும்  காந்தியாருக்குத்  துணிச்சல்  இல்லை.  முதலாளிக்கும்  தொழிலாளிக்கும்  இடையில்  ஊஞ்சலாடுகிறார்.  வாலிபர்களே!  சீர்திருத்தக் ...

தோழர்  ஜவஹர்லாலும்  சர்.சி.பி.யும்

தோழர்  ஜவஹர்லாலும்  சர்.சி.பி.யும்

  சர்.சி.பி.  ராமசாமி  அய்யர்  ஆதியில்  ஆடிய  ஆட்டங்களும்,  அவர்  பிரபல  தேசீயவாதியாக  விளங்கிய  கதையும்,  ஹோம்  ரூல்  கிளர்ச்சிக்காரராக  விளங்கிய  கதையும்,  பனக்கால்  அரசர்  அவர்களால்  அடக்கி  விடப்பட்ட  கதையும்  அகில  உலகம்  அறிந்த  விஷயம். சர்.சி.பி.  சென்னை  மயிலாப்பூர்  வாசியாக  கருதப்பட்ட  போதிலும்  தஞ்சை  ஜில்லாவிலுள்ள  திருப்பனந்தாள்  மடத்து  பழைய  ஏஜண்ட்  ராமசுவாமி  அய்யரின்  பௌத்திரர்  என்ற  முறையில்  தஞ்சை  ஜில்லாவாசிதான்  என்பதை  நாம்  அறிவோம்.  இந்தக்  கனவான்  அரசியல்  உலகில்  எந்தப் படித்தரத்தில்  வைக்கப்பட்டிருக்கிறார்  என்பது  பொது  ஜனங்களுக்கு  நன்கு  தெரியும்.  இப்பெருமான்  காந்தியின்  ஒத்துழையாமை  முழு  வேகமாய்  இருந்து  சட்டசபைகளுக்கு  அபேக்ஷகர்களாக நிற்பதிற்குக்  கூட  ஆட்கள்  கிடைக்காத    காலத்தில்,  பல்லாரி  ஜில்லாவின்  பிரதிநிதியாக  இந்திய  சட்டசபைக்குச்  சென்று  காந்தியை  விடவேண்டுமா வேண்டாமா  என்ற  பிரச்சினை  ஓட்டுக்கு  விடப்பட்ட  காலத்தில்,  நடுநிலைமை  வகித்து  உலக  மக்களின்  முழு கவனத்தையும்  பெற்ற  ராவ்  பகதூர்  ஒருவர்  தலைமையில்  இந்திய ...

நல்ல  சந்தர்ப்பம்

நல்ல  சந்தர்ப்பம்

  இந்திய  நாட்டின்  பரிபூரண  விடுதலையைக்  குறிக்கோளாகக்  கொண்டு  ஆரம்பிக்கப்பட்ட  காந்தியின்  இயக்கங்கள்  ஒரு  வழியாய்  முடிவடைந்துவிட்டன. காந்தியும்  அவரது  சகாக்களும் பத்து  வருடங்களுக்குப்  பிறகாவது  தங்களது  தப்பான  வழியை  உணர்ந்து  தங்கள்  போக்கைத்  திருப்பியது  மிகவும்  போற்றத்தக்கதே.  காந்தியின்  உப்பு  சத்தியாக்கிரக  திருவிளையாடல்களின்  பயனாய்  ஏற்பட்ட  அடக்கு முறையால்  இந்திய  அரசியல்  விடுதலைக்  கிளர்ச்சிகள்  ஒரு  வகையில்  ஸ்தம்பித்துப்  போய்விட்டனவென்பதைக்  காந்தியே  ஒப்புக்  கொள்வார்.  இந்தப்  பரிதாபகரமான  நிலையிலிருந்து  தப்பவும்  “”இந்து  மதம்”  என்ற  போர்வையில்  பார்ப்பனர்கள்  தங்களது  ஆதிக்கத்தை  மீண்டும்  நடத்தவும்  ஒரு  வழியையும்,  சந்தர்ப்பத்தையும்  எதிர்பார்த்து வந்தனர்  நமது  தேசீயவாதிகள்.  இவர்களது  திக்கற்ற  நிலையை  நன்குணர்ந்த  லார்டு  வெல்லிங்டன்  இந்திய  சட்டசபையைக்  கலைத்து  மறு  தேர்தல்  நடத்தப்  போவதாக  ஒரு  நாடகம்  நடித்தார்.  திக்கு  முக்காடி  இறக்குந்  தருவாயில்  தண்ணீரில்  தவிக்குமொருவன்  தனதெதிரில்  வரும்  ஒரு  துரும்பைக்கூட  கைப்பற்றித்  தனது  உயிரை  நிலைக்க  வைக்கப்  பார்ப்பது  சகஜமே. ...

காந்தியின்  கடைசி  காலம்

காந்தியின்  கடைசி  காலம்

  பிரசித்திபெற்ற  ஏப்ரல்  மாதத்தில்தான்  தோழர்  காந்தி  அன்று  தோன்றினார்.  இன்று  பதினைந்து  வருடங்களுக்கு  முன்பு  அகில  இந்தியக்  காங்கிரஸ்  தலைவர்களுள்  கடையராக  இருந்த  காந்தி,  அகில  இந்தியத்  தலைவராகத்  தோன்ற  ஆரம்பித்தது  ஏப்ரல்  மாதச்  சத்தியாக்கிரக  வாரம்  என்பதில்தான்.  அதே  ஏப்ரல்  மாதத்தில்  மீண்டும்  காந்தி  இந்நாட்டின்  விடுதலைக்குக்  காது  ஒடிந்த  ஊசிக்கும்  பயனில்லை  என்று  சொல்லத்தக்க  நிலைக்கு வந்துவிட்டார்.  ஆனால்  வழக்கம்போல்  காந்தியின்  கடவுள்  அவருக்குத்  தோன்றித்  தனி  மனிதரின்  சட்டமறுப்பை  நிறுத்து  என்று  சொன்னதாக  சொல்லுகிறார்.  அத்துடன்  மட்டுமல்ல,  இதுவரையில்  இந்திய  நாட்டில்  அவரின்  “”சத்தியாக்கிரகத்தின்”  முறையை,  தத்துவத்தை,  உணர்ந்தவர்,  அனுஷ்டிக்கக்கூடியவர்  ஒருவர்  கூட  இல்லையென்றும் ஒப்புக்கொண்டுவிட்டார்.  பதினைந்து  வருடங்களுள்  மூன்று  முறை  ஆடாத  ஆட்டமெல்லாம்  ஆடி,  ஓய்ந்த  காந்தியடிகளையும்,  மகா  அவரது  சத்தியத்தையும்,  அவரது  சொந்தக்  கடவுளையும்  போற்றாவிட்டாலும்  தூற்றாமலாவது  இருப்போமாக!  காந்தியடிகளின்  கடைசி  தோல்விக்குப்பின்பு  அவர்  நீண்டகாலமாக  விரும்பும்  ஹிமய  உச்சிக்குச்  செல்ல  நாம் ...

காங்கிரஸ்  சுயராஜ்யக்  கட்சி

காங்கிரஸ்  சுயராஜ்யக்  கட்சி

  பழைய  காங்கிரஸ்  சுயராஜ்யக்  கட்சி,  இவ்  வருடத்தில்  “புனர்  ஜன்மம்’  எடுத்ததைப்  பற்றி,  சட்டசபை  மோகம்  பிடித்தவர்களுக்கு  திருப்திகரமாயிருக்குமென்பதைப்  பற்றி,  யாரும்  ஆச்சரியப்பட  வேண்டியதில்லை.  காந்தியாரும்,  இந்த  சுயராஜ்யக்  கட்சியின்,  “புனர்  ஜன்மத்தை’  வாழ்த்தி  வரம்  கொடுத்த  விஷயத்தைக்  குறித்தும்,  யாரும்  ஆச்சரியப்பட  வேண்டியதில்லை.  இவ்வித  உபாயங்கள்,  முதலாளித்  தத்துவத்தைச்  சேர்ந்தவர்களுக்கெல்லாம்  உண்டு.  இந்த  அனுபவத்தை  ஒட்டியே,  சுயராஜ்யக்  கட்சியினர்,  திரும்பவும் தங்கள் கட்சியைப் புதுப்பிக்க ஆரம்பித்தனர்; காந்தியாரும் முதலாளித்  தத்துவத்தில்  சன்னது  பெற்றவராதலால்,  சுயராஜ்யக்  கட்சிக்கு  மங்கள  வாழ்த்தும்  கூறினார்.  சுயராஜ்யக்  கட்சி  இன்று  எடுத்த  புனர்  ஜன்மத்திலாகிலும்  அல்லது  காந்தியார்  அதன்மேல்  பன்னீர்  தெளித்ததனாலாகிலும், தேசத்தில்  பெரும்பான்மையோருக்கு  எவ்வித  சுதந்திரமாகிலும்  நன்மையாகிலும்  யாரும்  கோர  வேண்டியதில்லை.  தேசமும்,  தேசத்து  மக்களும்,  பிறப்பு,  பிணி,  மூட்பு,  சாக்காட்டால்  பண்டை  கால  முதல்,  கஷ்டப்பட்டு  வந்ததைப் போல,  இந்தப்  “புனர்  ஜன்மத்தைப்’  போன்ற  ஆயிர மாயிரம்  “புனர் ஜன்மங்கள்’  சுயராஜ்யக் ...

உணவுக்கு வரி

உணவுக்கு வரி

பண்டைக்கால  அரசுகள்  முதல்,  தற்கால  அரசுகள்  வரையிலும்  எல்லா  அரசுகளும்,  உணவுக்கு  வேண்டிய  பொருள்கள்  மேல்  வரிகளைச்  சுமத்தி,  அவைகளின்  விலையை  உயர்த்தி  வந்திருக்கின்றார்கள்.  இத்தியாதி  வரிகளை  நியாயமென்றே  எண்ணி  வந்திருக்கின்றார்கள்.  இந்த வரிகளுக்கு நிலத்தீர்வையென்றும், ஜலத்தீர்வையென்றும், சுங்கத்தீர்வையென்றும்  அழைக்கின்றார்கள்.  இவ்வரிகளை  விதித்து  வரும்  தற்கால  அரசுகள்  இவ்வரிகள்  இயற்கையாக  நியாயமானவைகளா?  அநியாயமானவைகளா? என்று  பகுத்தறிவைக்கொண்டு  உணர்ந்தாரில்லை.  ஏதோ ஆதிகால  முதல்  உண்பண்டம், தின்பண்டங்களின்  மேல்  வரி  விதித்து   வந்திருக்கின்றார்களாகையால்,  அந்தப்  பழக்கத்தைப்  போலவே,  அந்தந்த  சமயங்கட்கு  ஏற்றவாறு  பற்பல  வரிகளை  உணவுப்  பொருளின்  பேரில்  விதித்து  வருகின்றார்கள். தற்கால  ஓர்  முனிசிபாலிடியை  எடுத்துக்  கொள்வோம்.  எந்தெந்தப்  பொருள்களுக்கு  வரிகளை  விதித்து  வருகிறார்களென்பதை  சற்று  கவனிப்போம்.  பட்டணங்களில்  வரி  விதிக்கப்படாத  உணவுப்பொருள்கள்  யாதொன்றுமில்லை.  பால்கொடுக்கும்  பசுவுக்கு  வரி,  பதார்த்தங்களை  விற்பதற்கு  வரி,  அவைகளை  விற்கும்  தொழிலுக்கு  வரி,  அவைகளை  விற்கும்  இடங்களுக்கு  வரி,  தோசைக்  கடை  முதல்,  நெய்,  சர்க்கரை,  மளிகை, ...

துணுக்குகள்

துணுக்குகள்

  லண்டன்  மாணவர்கள் குடியேற்ற  நாடுகளில்  உள்ள  மக்கள்,  பரிபூரண  சுயேச்சையோடு  வாழவேண்டுமென்கிற  கிளர்ச்சியால்,  பிரிட்டீஷ்  ஏகாதிபத்தியத்திற்கு  அழிவை  உண்டாக்க  வேண்டுமென்கிற  கோட்பாடு  லண்டன்  சர்வகலாசாலைகளில்  ஏற்பட்டு  வருவதானது  அங்கு  சர்வகலாசாலை  அதிகாரிகளிடையே  சிறிது  பீதியை  உண்டாக்கி  வருகிறது.  12  இந்தியப்  பொதுவுடமை  வாதிகளைத்  தவிர்த்து  கணக்குப்பார்த்தாலும்,  அங்கு  வசித்துவரும்  சில  ஆயிர  இந்திய  மாணவர்களும்  கிரேட்  பிரிட்டனில்  ஸ்திரமாக  நிலைபெற்றுள்ள  சிலரும்  பிரிட்டீஷ்  ஏகாதிபத்தியத்திற்கு  விரோதமான  இயக்கத்திலேயே  சார்ந்துள்ளனர்  என்பது  பகிரங்க  இரகசியம்.  அங்கு  சர்வகலாசாலை  யூனியன்களில்  நிகழும்  தர்க்க  வாதத்தின்  போது  இரு  இந்தியர்கள்,  பொதுவுடமை  தீர்மானத்தை  ஆதரித்துப்  பேசுவதும்,  இருபது  பேர்  தொழிலாளர்களுக்காகவும்,  சமுதாய  ஜனநாயகத்துவ  கொள்கைகளுக்காகவும்  பரிந்து  பேசுவது  வாடிக்கையாகும்.  இந்த  மாதத்தின்  முதல்  வாரத்தில்  ருசிகரமான  இரண்டு  சர்வகலாசாலை  மீட்டிங்குகள்  நடைபெற்றன.  அதில்  ஒன்று  கேம்பிரிட்ஜ்  மாணவர்களின்  சோஷியலிஸ்ட்  கழகத்தாரால்  கேம்பிரிட்ஜில்  கூட்டப்பட்டதாகும்.  இதில்  பென்  பிராட்லேயும்,  சக்லத்வாலாவும்  முக்கிய  பேச்சுக்காரர்களாவார்கள். பிரிஸ்டல்  சர்வகலாசாலையில் ...

நமது  நாகரீகம்

நமது  நாகரீகம்

  உலகில்,  மக்கள்  அடைந்துவரும்  நிலைமையைக்  காட்டு மிராண்டித்  தன்மையென்றும்,  அநாகரீக  வாழ்வென்றும்,  அரை  நாகரீக  நிலைமை  என்றும்,  நாகரீக  நிலைமை  என்றும்  வகுத்து வருகின்றார்கள்.  காட்டு  மிராண்டித்  தன்மையில்  மக்கள்  விலங்கினங்களைப்  போல்,  வீடுவாசலின்றி  நாளைக்கு  வேண்டுமென்ற  பகுத்தறிவின்றி,  மிருகாதிகளைப்  போல்  அங்கும்  இங்கும்  இரை  தேடி  வாழ்ந்து  வந்த  வாழ்க்கையாகும்.  இவ்வாழ்க்கையில்,  இன்றைக்கும்  சில  மக்கள்  வாழ்ந்து  வருகின்றார்கள்.  இலங்கையிலிருக்கும்  வேடர்களும்,  ஆப்பிரிக்காவில்  வாழ்ந்துவரும்  காட்டு  மனிதர்களும்,  பிஜீ தீவில் சில  காலத்திற்கு  முன்  வாழ்ந்து  வந்த  மக்களும்  இன்றைக்கும்  காட்டுமிராண்டித்  தன்மையிலே  இருந்து  வருகின்றனர்.  இந்நிலைமையிலுள்ள  மக்களுக்குக்  கல்யாணமென்ற  கூட்டுறவு  கிடையா.  பெண்களைச்  சட்டி  பானைகளைப்  போல்  ஆண்டு  அனுபவித்து  வருகின்றார்கள்.  இதற்கு  மேற்பட்ட  மக்கள்  நிலைமையில் மனித சமூகம்  சிறுசிறு  கிராமங்களில்  வசித்து  வரத்  தலைப்பட்டனர்.  கிராம  தலைவர்களென்றும் கிராமச்  சங்கங்களென்றும்,  சமூக  வாழ்க்கையை  உண்டாக்கிக் கொண்டு  தத்தம்  கிராமங்களில்  சில  காலம்  தங்கியிருந்து,  வேறு ...

நாகபட்டினம்

நாகபட்டினம்

  சுயமரியாதைச் சங்கம் 18.3.34ந்  தேதி  மாலை  6.30  மணிக்கு  சங்கமெம்பர்  கூட்டம்  சங்கத்  தலைவர்  தோழர்  எஸ்.பி. கிருஷ்ணன்  தலைமையில்  கூடியது.  அது  சமயம்.  சங்க  ஜனவரி,  பிப்ரவரி  மாதங்களின்  வரவு  சிலவு  கணக்குகளை  வாசித்து  ஒப்புக்கொள்ளப்பட்டது.  பின்  வருஷாந்திர  அறிக்கை  தயாரிக்கவும்,  கணக்குகளை  ஆடிட்  செய்யவும்  கமிட்டியொன்று  தேர்ந்தெடுக்கப்பட்டபின்  சுயமரியாதை  சங்க  மத்திய  சபையின்  கூட்ட  முடிவைப்  பற்றி  ஆலோசனைக்கு  எடுத்து  கொண்டபோது  தஞ்சை  சுயமரியாதைச்  சங்கக்  காரியதரிசி  தோழர்  ஆளவந்தார்  அவர்கள்  ஜில்லா  தாலூகா  சங்கங்கள்  சரியான  முறைப்படி  எங்கும்  அமைக்கப்படாமலிருப்பதால்  எல்லோரும்  மாகாண  சங்கத்திற்கு  வருஷ  சந்தா  நான்கணா  செலுத்தி  பதிவு  செய்துகெள்ள  முடியாதென்றும்,  மத்திய  சங்கத்தில்  மெம்பர்களாயில்லாதவர்களுக்கு  மாகாண  மகாநாட்டில்  ஓட்டு  கொடுக்க  உரிமை  கிடையாதென்பதில்  ஏதோ  சூழ்ச்சியிருப்பதாகவும்  கூறினார்.  அதை  ஆதரித்து  தோழர்கள்  கே.எஸ்.முஜிபுல்லா,  வி.சாமிநாதன்  ஆகியவர்கள்  பேசினார்கள்.  மத்தியசங்கத்தார்  இப்பொழுதாவது  மாகாண  மகாநாடு  கூட்ட  முன்  வந்தது  பற்றி  பாராட்டுவதாகவும்,  கூடிய...

மீண்டும்  பார்ப்பனீயமா?

மீண்டும்  பார்ப்பனீயமா?

  மாகாணப்  பார்ப்பனீயம்  மீண்டும்  அறைகூவி  அழைக்கிறது.  இதற்கு  மாகாணப்  பார்ப்பனரல்லாதார்  அளிக்கப்போகும்  பதில்  யாது?  இன்றைய  மாகாணச்  சர்க்கார்  நமது  பார்ப்பனர்  அல்லாதார்  கட்சியில்  நடைபெற்று  வருகிறது.  சென்ற  மாதத்திற்கு  முன்  மாகாணச்  சட்டசபையில்  இனாம்தார்களின்  பார்ப்பனப்  பணக்காரர்களின்  குடிகளுக்கு  நியாயம்  வழங்க  ஓர்  சட்டம்  நிறைவேறியது.  இச்சட்டத்தால்  இனாம்குடிகளுக்குப்  பரிபூரண  நன்மை  எதுவும்  ஏற்படாவிட்டாலும்  ஓர்  சாதாரண  உரிமையை  மட்டும்  ஒப்புக்கொள்வதாகவே  அச்சட்டம்  நிறைவேற்றப்பட்டது.  இதைக்  கண்டு  மாகாணப்  பார்ப்பனீயம்  ஒன்றுபட்டு  எதிர்க்க  முயற்சித்தது.  முடிவில்  மாகாணக்  கவர்னர்  பெருமானைப்  பேட்டிகண்டு  நிறைவேற்றப்பட்டுள்ள  இனாம்  குடிகள்  சட்டத்திற்கு  ஓர்  திருத்தம்  கொண்டுவரும்படி  இன்றைய  பிராமணீயம்  செய்துவிட்டது.  இதற்கு  மாகாணப்  பார்ப்பனரல்லாதார்  கட்சி  செய்யப்போகும்  பரிகாரம்  யாது  என்பதுதான்  நமது  கேள்வியாகும். அதிகாரத்தில்  உள்ள  சட்ட  சபையில்  மெஜாரிட்டியாகவுள்ள  ஜஸ்டிஸ்  கட்சிக்காரர்கள்  சர்க்கார்  மெம்பர்களுடைய  பரிபூரண  ஒத்துழைப்பையும்  பெற்று  இச்  சட்டத்தை  நிறைவேற்றினார்கள்.  இச்  சட்டத்தால்  இனாம்தார்களுக்கு  எத்தகைய  கஷ்டமோ, ...

சர்.கே.வி. ரெட்டி

சர்.கே.வி. ரெட்டி

சமீபத்தில் ஸர்.எம். கிருஷ்ணன் நாயர் அவர்கள் தமது சட்ட மந்திரி பதவியிலிருந்து விலகிக் கொள்ளப்போவதாகவும் அந்த ஸ்தானத்திற்கு ஸர். கூர்மா வெங்கிடரெட்டி நாயுடு அவர்கள் நியமிக்கப்படப் போவதாகவும் ஒரு செய்தி கிடைத்துள்ளது. இது உண்மையானால் நாம் கொள்ளும் மகிழ்ச்சிக்கு அளவில்லை யென்றுதான் சொல்ல வேண்டும். ஸர். ரெட்டி அவர்கள் சென்ற முப்பது வருடங்களாக சமூக சீர்த்திருத்தம் அவசியம் என்பதையும் அதற்கு பார்ப்பனீயம் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறதென்பதையும் உணர்ந்து பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம், பார்ப்பன மத ஆதிக்கத்தினின்று விடுபடுவதுதான் என்பதை எழுத்திலும், பேச்சிலும், செய்கையிலும் காட்டி வரும் ஒரு சீர்திருத்தப் பிரியர். நிற்க நமது மாகாண பார்ப்பனரல்லாதார் கக்ஷியென வழங்கும் ஜஸ்டிஸ் கக்ஷி, ஸர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்களுக்கு பல துரோகங்களைச் செய்திருப்பினும், அவர் அதைப் பொருட் படுத்தாது பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கும் இயக்க வளர்ச்சிக்கும் பெரும் தொண்டாற்றிய புனிதர். ஸர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்களது திறமையை அறிந்த அவர்களது சகாக்கள் பொறாமையினால் அவரை ஒதுக்கி...

ஜெர்மன்  சர்வாதிகாரியும்  வேலையில்லாத்  திண்டாட்டமும்

ஜெர்மன்  சர்வாதிகாரியும்  வேலையில்லாத்  திண்டாட்டமும்

  ஜெர்மனியில் வேலையில்லாத்  திண்டாட்டத்தின்  காரணமாகப்  பல  லெக்ஷம்  ஜனங்கள்  தங்கள்  வயிற்றுச்  சோற்றுக்கே  திண்டாட்டமாகி,  இருப்பதா  இறப்பதா  என்ற  ஆலோசனையில்  ஆழ்ந்து  கிடந்தனர்.  அவர்களது  வயிற்றுக்கு  உணவு  கிடைக்கவும்,  அவர்களுக்கு  வேலை  கிடைக்கவும்,  சில  திட்டங்களை  வகுத்துக்  கோடிக்கணக்கான  பொருளை  அதற்கென  ஜெர்மன்  சர்வாதிகாரி  ஹிட்லர்  செலவழித்து  வேலையில்லாது  திண்டாடும்  பெரும்பாலோருக்கு  வேலை  கொடுத்து  வருவதாகவும்,  இது  பெரும்  மெச்சத்  தகுந்த  காரியமென்றும்  பல  முதலாளி  அரசாங்கங்கள்  பறை  சாற்றுகின்றன. ஆனால்  நாம்  இது  முதலாளி  ஆட்சியின்  அழிவிற்கு  முன்னால்  செய்யப்படும்  கடைசி  முயற்சி  என்று  கருதுவதுடன்,  கண்டிப்பாய்  இன்று  இல்லாவிட்டாலும்  இன்னும்  பத்து  வருடங்களிலாவது  இம்முறை  சமதர்மத்தில்  தான்  கொண்டு  போய்விடும்  என்று  பரிபூரணமாக  நம்புகிறோம்.  ஏனெனில்  இன்று  முதல்  ஒரு  ஐந்து வருடங்களுக்கோ அல்லது பத்து  வருடங்களுக்கோ  செய்யக்  கூடிய  பெரும்  வேலைத்  திட்டத்தையும்  அதற்குப்  பொருளையும்  ஹிட்லர்  உண்டு  பண்ணி  வேலையற்றவர்களுக்கு  வேலை  கொடுத்து  அவர்களது ...

முதலாளிகள்  ஆதிக்கம்  உஷார்!

முதலாளிகள்  ஆதிக்கம்  உஷார்!

  இந்திய  நாட்டின்  தொழிலாள  வகுப்பார்கள்  தங்கள்  அடிமைச்  சங்கிலிகளை  அறவே  தகர்த்தெறிய,  பரிபூரணமாக  இன்னும்  முற்படவில்லை  என்றாலும்,  ஓர்  அளவிற்கு  அவர்கள்  சமீப  காலத்தில்  விழிப்படைந்திருக் கிறார்கள்  என்பது  மாத்திரம்  மறுக்க  முடியாத  உண்மையாகும்.  தொழிலாளர்களுடைய  விழிப்பிற்குக்  காரணம்,  அவர்களுடைய  சகிக்க  முடியாத  கொடிய  துன்பங்களும்  கஷ்டங்களுமேயாகும். தொழிலாளர்களுக்கு,  முதலாளிகளோ அல்லது   அரசாங்கத்தாலோ  இன்றையத்  தினம்  “கிருபா  கடாக்ஷம்’  காட்டப்படுகிற தென்று  சொன்னால்,  அது  அந்த  தொழிலாளிகளின்  உழைப்பின்  பயனாகவே,  நியாயமாக  கிடைக்க  வேண்டிய  வரும்படியிலிருந்து  கொஞ்சம்  கொடுத்து,  தொழிலாளர்கள்  வயிறு  ஒட்டி,  வாடி  வதங்கி  சாகாமலிருக்கச்  செய்து,  மீண்டும்  சாஸ்வதமாக  தங்களுக்கே  ஊழியம்  செய்து  கொண்டிருப்பதற்கே  தவிர,  மற்றப்படி  நியாய  புத்தியையோ,  கருணைப்  பிரவாகத்தையோ அல்லது  பச்சாதாப  இரக்க  புத்தியையோ,  கொண்டதல்லவென்று  துணிந்து  கூறுவோம். இன்றைய  தினம்  முதலாளியானவன்,  ஒரு  தொழிலாளியைப்  பற்றி  எப்பேர்க்கொத்த  மனோ  நிலையைக்  கொண்டிருக்கிறான்  என்று  முடிவு  கட்டுவதற்கு,  அவனுடைய  நடைமுறை  வாழ்க்கையை  பரிசீலனை ...

சைவ  மகாநாடு

சைவ  மகாநாடு

  தமிழ்  பாஷையின்  முன்னேற்றத்திற்கு  முட்டுக்  கட்டையாயிருந்தவர் களும்  தமிழை  வளர்த்த  சமணர்,  பௌத்தர்  முதலியவர்களைச்  சூழ்ச்சியால்  கொன்ற  சைவர்கள்  இல்லை  வேளாளர்கள்  தமிழர்களின்  பேரால்  திருநெல்வேலியில்  மகாநாடு  கூட்டுகிறார்கள்.  தமிழர்களே!  ஏமாந்து  விடாதீர்கள். புரட்சி  அறிவிப்பு  18.03.1934

துணுக்குகள்

துணுக்குகள்

பட்டினிக்  குரல்  கேட்க  வில்லையா? இவ்வாரத்தில்  லண்டனில்  லார்டு  லெஸ்டியும்,  சர்  எட்மெண்டு  லெஸ்டியும்  மாதாக்  கோவிலுக்குக்  கோபுரம்  கட்டுவதற்கு  இரண்டு  லட்சத்து  இருபதினாயிரம்  பவுன்  நன்கொடை  அளித்திருக்கிறார்கள்.  இவர்களுக்கு  அங்கு  பட்டினியின்  மிகுதியால்  அவதிப்படும்  பாட்டாளியின்  கூக்குரல்   காதில்  விழவில்லையா?  லண்டன்  ஹைடி  பார்க்கில்  75000  பட்டினி  வீரர்கள்  எட்டு  மேடைகளில்  அலறியதை,  அந்த  மதப்  பித்தம்  பிடித்த  கடவுள்  வெறியர்கள்  சிறிது  சிந்தித்துப்  பார்த்திருந்தால்  “”இயேசு”  கோபித்துக்  கொண்டிருப்பாரோ? பாசிசமா?  சோஷியலிசமா? மேனாடுகளில்  “”பாசிசம்”  “”சோஷியலிசம்”  என்று  அடிக்கடி  பேசப்பட்டு  வருகிறது.  சூரியன்  அஸ்தமிக்காத  பிரிட்டிஷ்  ஏகாதிபத்தியத்தின்  தலைமை  ஸ்தானமான  பிரிட்டனில்  இன்று  பாசிசம்  முறியடிக்கப்பட்டிருக்கிறது.  லண்டனில்  நிகழும்  கவுண்டி  கவுன்சில்  எலக்ஷன்களே  பார்லிமெண்டரி  எலக்ஷன்களின்  எதிர்  காலத்தைக்  குறிப்பிடுவதாகும்.  லண்டன்  முனிசிபல்  எலெக்ஷன்களான  கவுண்டி  கவுன்சில்  தேர்தலேதான்  இன்றைய  தினம்  பார்லிமெண்டுக்கு  அடுத்த  முக்கியமானதாகும்.  இப்பேர்க்கொத்த  தேர்தலில்  தொழிலாளர்களே  முன்னையை  விட  நன்கு  வெற்றி  பெற்றிருக்கிறார்கள்.  எலெக்ஷன்களுக்கு ...

மீண்டும்  சுயராஜ்ய  கக்ஷியா?

மீண்டும்  சுயராஜ்ய  கக்ஷியா?

  காங்கிரஸ்  ஒழிந்து  விட்டதென்றும்  அதனால்  நமது  நாட்டின்  முன்னேற்றத்திற்கு  இதுவரையில்  விமோசனம்  ஏற்படவில்லை  என்றும்,  அதை  இன்னும்  உயிரோடு  வைத்துப்  பார்ப்பதில்  யாதொரு  சிறிய  நன்மையும்  பெற  முடியாதென்றும்,  ஆனால்  காங்கிரசை  உயிர்ப்பிக்க  காந்தி  பக்தர்கள்  முயற்சிப்பது  நாட்டின்  முன்னேற்றத்திற்கு  வேண்டுமென்றே  முட்டுக்கட்டை  போடுவதாகுமென்பதோடு,  அது  பெரும்  முட்டாள்தனமும்  தற்கொலைக்குச்  சமானமானதாகுமென்றும்,  இந்திய  மக்களில்  சகலரும்  இன்று  உணர்ந்து  இருக்கிறார்கள். இந்த  நிலையில்  சில  காங்கிரஸ்  தலைவர்கள்  சமீபத்தில்  டில்லியில்  கூடி,  சட்டசபைகளைக்  கைப்பற்றுவதா?  இல்லையா?  என்பதைக்  குறித்து,  தக்க  முடிவிற்கு  வர முயன்றார்கள்.  ஆனால்  இன்றைய  தினம்  காங்கிரஸ்  கக்ஷியில்  எந்த  இருவர்களுடைய  அபிப்பிராயமும்  ஒரே  விஷயத்தைக்  குறித்துங்கூட  முழுதும்  ஒன்றாக  பரிணமிப்பதில்லை  என்கிற  இரகசியம்  நாம்  அறிந்ததேயாததால்,  அவர்கள்  எந்த  முடிவிற்கும்  வராமல்  கலைந்து  போய்  விட்டார்கள்  என்பதில்  நாம்  சிறிதும்  ஆச்சரியப்படவில்லை. வர்ணாசிரம  தர்மத்திற்கு  முலாம்  பூசி,  அது  வேண்டுமென்று  நம்பிக்கை  கொண்டிருப்போரும்,  பழைய  “”ராம” ...

3  லக்ஷமா?

3 லக்ஷமா?

ரஷிய நாட்டில் தீக்கிரையாக்கப்பட்டது போக மிஞ்சிய சில புத்தகங்களில் புறாதன காலத்து கையெழுத்து பிரதியான “”பைபிள்” ஒன்று பிரிட்டீஷ் பொது ஜனங்கள் 3 லக்ஷ ரூபாய் கொடுத்து வாங்கினார்களாம். இது அங்குள்ள மதத்தின் பேரால் உள்ள செல்வ செறுக்கை காட்டுகிறது. அதே தினத்தில் தான் பதினாயிரக்கணக்கான வேலையற்றோர் ஊர்வலக் காக்ஷியும் அங்கு நேர்ந்தது. பைபிளுக்கு கொடுத்த பணம் பட்டினிக்கு கொடுத்தால் சோறாகும். பட்டினிகாரர்களுக்கு பைபிள் ஒருக்கால் இனி சோறு போடுமா? என்று பார்க்கலாம். புரட்சி துணைத் தலையங்கம் 11.03.1934

சர்வ  ஜன  வாக்கா?

சர்வ  ஜன  வாக்கா?

தொட்டதற்கெல்லாம்  சர்க்கார்  பொது  ஜன  அபிப்பிராயம்  அறிந்து,  அது  சாதகமாக  இருந்தால்தான்  தாங்கள்  செய்வதாக  சொல்லுகிறார்கள்.  அத்துடன்  மட்டுமல்ல,  ஒன்றைப்  பற்றி  யோசிக்கக்  கூட  சர்வஜன  வாக்கு  கேட்கிறார்கள்.  நாம் உணர்ந்த வரையில்  என்றும்  சர்க்கார்  சர்வஜன  வாக்குப்படி  நடந்ததாக  கூறமுடியாது.  சென்ற  பத்து  ஆண்டுக்கு  முன்பு  பத்து  வயது  பெண்களை  இடுப்பொடிக்கக்  கூடாது,  பொட்டுக்  கட்டக்  கூடாது  என்று  பிரச்சினை  உண்டான  காலத்தில்  கூட  சர்வஜன  வாக்கு  எடுக்க  வேண்டு மென்றார்கள்;  எடுத்தார்கள்.  சிறு  பெண்களுக்குப்  பொட்டு  கட்டுவதை  ஆதரிப்பதாக  கூறினார்கள்.  பொது  ஜனங்களுக்கு  விரோதமாகவே  அத்தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.  அதன்பின்  பல  சீர்திருத்த  தீர்மானங்களிலும்  பொதுஜன  வாக்கு விரோதமாக  இருந்தும்  நிறைவேற்றப்பட்டிருக்கிறது.  ஆனால்  சர்க்கார்  அவைகளை  நிறைவேற்ற  உட்பட்டதற்கு  காரணம்  ஜனசமூக  நன்மை  என்பதற்கும்  பொது  ஜன  வாக்கு  என்று  இவர்கள்  எடுப்பதற்கும்  சம்மந்தமில்லை  என்பது  நன்கு உணர்ந்ததேயாகும். இந்நிலையில்  இரண்டு  மாதம்  காந்தி  பாபு  ஆலயப்  பிரவேசத்துக்கு  ஆதி ...

மன்னார்குடி  மகாநாடு

மன்னார்குடி  மகாநாடு

நமது  மாகாண  சமதர்ம  மகாநாடானது 4  தேதி  ஞாயிரன்று  மன்னார்குடியில்  சிறப்பாக  நடந்தது.  மகாநாட்டுக்கு  சமதர்ம  தோழர்  எம்.  சிங்காரவேலு  அவர்கள்  தலைமை  வகிப்பதாக  இருந்தும்  திரேக  அசௌக்கியத்தினால்  அவர்  வர  முடியாமல்  போனதினால்  3  தேதியன்று  மகாநாடு  நடைபெறவில்லை.  ஆனால்  அன்று  மகாநாட்டுக்  கொட்டகையில்  தோழர்  ஈ.வெ. கிருஷ்ணசாமி  அவர்கள்  தலைமையில்,  வந்திருந்த  இரண்டாயிரத்துக்கதிகமான  பிரதிநிதிகளைக்  கொண்டு  ஒரு  பொதுக்  கூட்டம்  நடந்தேறியது. 4  தேதியன்று  மகாநாட்டுக்  கொட்டகையில்  மகாநாடு  ஆரம்பமாயிற்று.  வரவேற்புத்  தலைவர்  தோழர்  எம்.  தருமலிங்கம்   அவர்களின் வரவேற்புத் தலைவர்  பிரசங்கம்  நடந்ததும்,  தோழர்  எஸ்.ராமநாதன்  எம்.ஏ.பி.எல்.,  அவர்கள்  மகாநாட்டுக்குத்  தலைமை  வகித்தார்.  முன்,  தலைமை  வகிக்கவிருந்த  தோழர்  எம்.  சிங்காரவேலு  பி.ஏ.பி.எல்.,  அவர்களால்  தயாரிக்கப்பட்டிருந்த  அச்சடித்திருந்த  அக்கிராசனப்  பிரசங்கத்தைத்  தோழர்  எஸ்.  இராமநாதன்  அவர்கள்  வாசித்தார்.  அக்கிராசனர்  முன்னுரைக்குப்  பின்  மகாநாட்டுத்  தீர்மானங்களைத்  தயாரிப்பதற்கு  விஷயாலோசனைக்  கமிட்டி  நியமிக்கப்பட்டது.  பகல்  11  மணியிலிருந்து  பிற்பகல்  மூன்று ...

தோழர் சம்சுதீன் ஹீரா அவர்கள் எழுதிய ”மெளனத்தின் சாட்சியங்கள்” நூல் அறிமுகவிழா !

தோழர் சம்சுதீன் ஹீரா அவர்கள் எழுதிய ”மெளனத்தின் சாட்சியங்கள்” நூல் அறிமுகவிழா ! நாள் : 03.10.2015 சனிக்கிழமை மாலை 6 மணி. இடம் : நல்லாயன் சமூக கூடம், வின்சென்ட் ரோடு, கோட்டை ,கோவை. சிறப்புரையாளர்கள் : தோழர் கொளத்தூர் மணி,தலைவர் , திராவிடர் விடுதலைக் கழகம், தோழர் ஜிவாஹிருல்லாஹ், மனித நேய மக்கள் கட்சி, தோழர் ரபீக் அகமது,SDPI தோழர் இரா.அதியமான்,ஆதித்தமிழர் பேரவை.

‘ஈழம் அமையும்’ நூல் வெளியீட்டு நிகழ்வில் விடுதலை இராசேந்திரன் உரை அமெரிக்க-இந்திய துரோகங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

ஊடகவியலாளர்கள் அய்யநாதன் எழுதிய ‘ஈழம் அமையும்’ நூல் வெளியீட்டு நிகழ்வும் கருத்தரங்கமும் அக்.2, 2015 அன்று சென்னை ‘கவிக்கோ’ அரங்கில் காலை முதல் இரவு வரை ஒரு நாள் நிகழ்வாக நடந்தது. காலை அமர்வில் அந்நூலை பழ. நெடுமாறன் வெளியிட, வைகோ பெற்றுக் கொண்டார். வழக்கறிஞர் பானுமதி, டி.எஸ்.எஸ். மணி, பேராசிரியர் இராமு மணிவண்ணன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் அறிமுகவுரை நிகழ்த்தினர். இரண்டாம் கட்ட அமர்வாக பிற்பகல் 3 மணியளவில் “அய்.நா. மனித உரிமை மன்றத் தீர்மானம்: தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா?” என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி. தேவசகாயம் தலைமை யில் நடந்தது. நிகழ்வில் பங்கேற்று, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரை: எனது நீண்டகால நண்பர் அய்யநாதன் மிகச் சிறந்த பத்திரிகையாளர். ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் உந்தப்பட்ட அவர், தனது பத்திரிகையாளர் பணியையும் உதறிவிட்டு, செயல்களத்துக்கு வந்தவர். தமிழ் ஈழப்...

இடஒதுக்கீடு கொள்கை : மறு பரிசீலனை தேவையா? சங்பரிவாரங்கள் எழுப்பும் வாதங்களுக்கு மறுப்பு

இடஒதுக்கீட்டுக் கொள்கையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று ஆங்கில ஊடகங்கள் ஒரே குரலில் கூக்குரலிட்டு வரும் நிலையில் அதற்கு மறுப்பாக இடஒதுக்கீட்டுக் கொள்கை தொடர வேண்டும் என்று வலியுறுத்தி கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேட்டுக்கு (செப். 30, 2015) எழுதிய கட்டுரை இது. இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் அதன் இலக்கை எட்டுவதற்கு முன்பே ஒழிக்க வேண்டும் என்று கருத்துகளை உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்றும், பல ஆண்டுகாலமாக பின்பற்றப்பட்டு வரும் இடஒதுக்கீடு கொள்கைதான் தமிழகத்தை இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக உயர்த்தியிருக்கிறது என்றும் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. குறி பார்க்கும் முன்பே துப்பாக்கிக் குண்டு முந்திக் கொண்டு பாய்வது போன்றதே இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் கருத்து உள்ளது என்பதுபோல்,“anti-quota can jumps the gun” என்று ‘டைம்ஸ்ஆப் இந்தியா நாளேடு இக்கட்டுரைக்கு தலைப்பிட்டுள்ளது. விடுதலை இராசேந்திரன் கட்டுரையின் தமிழ் வடிவம்: “எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்; இல்லையேல் இடஒதுக்கீடு எவருக்குமே இருக்கக்...

யாருக்கு?  பாதுகாப்பு  ?மன்னர்களுக்கா?  பட்டினிகளுக்கா?

யாருக்கு?  பாதுகாப்பு ?மன்னர்களுக்கா?  பட்டினிகளுக்கா?

    நமது  இந்திய  சட்டசபையான  எங்  பார்லிமெண்டில்  மாமூல்  கூட்டங்கள்  நடக்கும்.  இக்கூட்டகாலங்களில்  பல  தீர்மானங்களைப்  பற்றி  விவாதிக்கப்படும்.  சில  தீர்மானம்  கொண்டு  வரப்பட  அனுமதி கோரப்படும்.  பல  தீர்மானங்கள்  நீண்ட  நேரம்  பேசி  ஓட்  எடுக்க  நேரமில்லை  என்ற  காரணம்  காட்டி  விட்டு  விடப்படுவதுமுண்டு.  இதில்  சில  சமயங்களில்  தப்பித்  தவறி  பொது  மக்களுக்கு  நல்ல  பலனை  விளைவிக்கக்கூடிய  தீர்மானங்களைப்  பற்றியும்  பேசப்படுவதுண்டு.  இவைகளில்  இரண்டொன்று  அதன்  ஆதி  உருவைவிடப்  பலமற்றதாகச்  செய்யப்பட்டு,  பெயருக்கு  நன்மையானதென்றும்  கவனிக்கப்படுகின்றதென்றும்  சொல்லுகிற  நிலைமையிலாவது  நிறைவேற்றி  வைக்கப்படும்.  ஆனால்  இதுவரையில்  மில்  தொழிலுக்குப்  பாதுகாப்பு, “”கமிட்டி  மெம்பர்களுக்குச்  செலவுக்குப்  பணம்”  ஜமீன்தார்கள்  உரிமைகளுக்கு  வேலி,  ராஜாக்களின்  அந்தஸ்துக்குப்  பாதுகாப்பு  என்பது  போன்றவைகளுக்கு  வரும்  தீர்மானங்கள்  நிராகரிக்கப் பட்டதாகவோ,  நீண்ட  காலம்  வீண்  கால  தாமதம்  செய்யப்பட்டதாகவோ  யாரும்  கூற  முடியாது. இந்த  முறையிலேதான்  இப்பொழுது  நடைபெறும்  கூட்டத்திலும்  முக்கியமான  பல  தீர்மானங்கள்  பிரேரேபணை ...

இக்காலத்திலுமா  பண்டை  நாகரீகப்  பெருமை?

இக்காலத்திலுமா  பண்டை  நாகரீகப்  பெருமை?

  பண்டைக்காலத்தில்  நமது  பாரதநாட்டில்  தமிழர்களின்  நாகரீகம்  எப்படி  இருந்தது  என்னும் விஷயத்திலும்  பாஷையானது  எப்படி  தனித்து  விளங்கி  வந்தது?  என்னும்  விஷயத்திலும்  மக்கள்  எப்படி  வாழ்ந்து  வந்தார்கள்  என்னும்  விஷயத்திலும்  இன்னும்  பலவாறான  விஷயத்திலும்  நமது  வித்வ சிகாமணிகளும்,  பண்டிதமணிகளும்  பேசித்  தங்கள்  அரிய  காலத்தையும்,  புத்தியையும்  செலுத்தி  தற்போதைய  மக்கள்  நிலைமைக்குத்  தங்களால்  செய்யவேண்டிய  கடமைகளைச்  செய்தவர்களாக  நினைத்துக்  காலங்கடத்தி  வருகிறார்கள்.  இது  இந்தக்  காலத்தில்  நம்நாட்டு மக்களுக்கு எவ்வளவு முற்போக்கையுண்டு பண்ணுமென்பதையும் நம் மக்களுக்குத்  தற்காலத்தில்  எவ்விதமான  உணர்ச்சியும்,  ஊக்கமும்,  நினைவும்  வேண்டியிருக்கிறது?  என்பதையும்  யோசித்தால்  நமக்கு  வேண்டியது  இதுவா?  என்பது  விளங்காமல்  போகாது. நம்  நாட்டாரும்  மற்ற  நாட்டாரோடு  சம  வாழ்வு,  சம  அந்தஸ்து,  சம  உரிமை  இல்லாமல்  உழன்று  பசி,  தரித்திரம்,  நோய்,  அற்பமான  வருவாய்,  சுதந்திரமற்ற  அடிமை  வாழ்வு  முதலிய  கொடும்  வியாதிகளின்  மிகுதியால்  அவதிப்பட்டு  அல்லலுற்று  வாழ்ந்து  வரும்  இந்நெருக்கடியான  சந்தர்ப்பத்தில் ...

தோழர்  சிவப்பிரகாசம்

தோழர்  சிவப்பிரகாசம்

  ஜஸ்டிஸ்  கக்ஷியைத்  தோற்றுவித்தவர்களில்  ஒருவரும்  செல்வாக்கு மிகுந்த  வக்கீலும்,  சென்னை  கார்ப்பரேஷன்  கவுன்சிலருமான  தோழர்  சிவப்பிரகாசம்  முதலியார்  அவர்கள்  2234ல்  திடீரென்று  இறந்து  போனதைக்  கேட்டு  வருந்துகிறோம்.  நல்ல  அருங்குணங்களும்  பொதுஜன  சேவை  நோக்கம்  மிகுந்தவருமாகத்  திகழ்ந்த  தோழர்  சிவப்பிரகாசம்  அவர்களின்  மரணத்திற்கும்  துயருறுவதோடு  அவரது  குடும்பத்தாருக்கும்  ஆறுதல்  தெரிவித்துக்  கொள்கிறோம். புரட்சி  துணைத் தலையங்கம்  11.02.1934

தோழர்  சே. நரசிம்மன்

தோழர்  சே. நரசிம்மன்

  மாயனூர்  கிராம  சீரமைப்பு  நிலையத்தின்  தோழர்  சே.  நரசிம்மன்  எம்.ஏ.  அவர்கள்  சமீபத்தில்  இறந்துவிட்டார்  என்று  அறிய  பெரிதும்  துக்கிக்கிறோம்.  சமீபகாலமாக  நமது  “”குடி  அரசு”,  “”புரட்சி”  வார  இதழ்களில்  அவர்  எழுதிவந்த  பாலும்,  தேனும்  கலந்த  கட்டுரைகளை  வாசித்துப்  புதிய  உத்வேகத்தையும்,  இன்பத்தையும்  பெற்றிருந்த  நமது  வாசகர்களுக்குப்  பெரிதும்  துக்கமேற்படுமென்பதிலும்  ஐயமில்லை. தோழர்  நரசிம்மன்  அவர்கள்  பிறவியினால்  உயர்ந்த  ஜாதியார்  என்று  சொல்லிக்கொள்ளக்கூடியவரானாலும்  அவர்  பாழான  பழைய  வர்ணாஸ்ரம  தர்மத்தையும்,  இன்றைய  முதலாளி,  தொழிலாளி  என்பதான  வேறுபாட்டையும்  எவ்வளவு  தூரம்  மனப்பூர்வமாக  வெறுத்து  அதை  ஒழிப்பதற்காகவே  இந்தியர்  ஊழியர்  சங்கத்தின்  சார்பாகவும்  நமது  பத்திரிகைகளின் மூலமாகவும்  தொண்டாற்றியுள்ளார்  என்பதை  நாம்  விரிக்க  வேண்டுவதில்லை.  ஆங்கிலத்திலும்,  தமிழிலும்  நன்கு  நமது  கொள்கைகளை  வலியுறுத்தி  எழுதுவதில்  மிகத்  திறமைபெற்றிருந்த  நமது  அருமை  நண்பரை  நாம்  இழந்தது  ஒரு  விதத்தில்  பெரிய  நஷ்டமேயாகும்.  அதிலும்  வாலிப  உலகத்திற்கு  அவரது  ஆண்மையும்,  தீவிர  உணர்ச்சியும் ...

பத்திரிகாசிரியர் 

பத்திரிகாசிரியர் 

ஏ. ரங்கசாமி  ஐயங்கார்  மரணம் ஏ. ரங்கசாமி  ஐயங்கார்  நீண்ட  நாள்  பத்திரிகை  ஆசிரியராகவிருந்து  வந்ததின்  பயனாக  தென்னாட்டில்  தமிழ்  பத்திரிகையாகிய  “”சுதேசமித்திரன்”  வாயிலாகவும்,  ஆங்கிலப் பத்திரிகையாகிய  “”இந்து”  பத்திரிகை  வாயிலாகவும்  மக்களுக்கு  அரசியல்  துறைகளை  ஒருவாறு  புகட்டிவருவதில்  முன்னேற்ற  மடைந்தவராவார்.  அவர்  மக்கள் விடுதலைக்கு  போராடும்  வழிகளிலும்  அவரது  வர்ணாசிரம  தத்துவங்களுக்கு  எவ்வித  உபாதைகளும்  உண்டாக்காமல்  பாடுபட்டு  வருபவர்களில்  தலைசிறந்து  விளங்கினார். காங்கிரஸில்  அவர்  மிக்க  ஊக்கத்துடனும்,  முயற்சியுடனும்  உழைத்துத்  தன்வசமாக்கி  தனது  கருத்துக்கிசைந்த  முறைகளில்  தொண்டாற்றி  வந்தவராவார்.  எந்த  காரியத்தில்  ஆனாலும்  தமக்கு  வேண்டியதை  எப்படியும்  பிரவேசித்து  செய்து  முடிக்குந்  திறமை  வாய்ந்தவர். வர்ணாச்சிரமத்தை  வெறுப்பவர்களைத்  தவிர  மற்றவர்களுக்கு  அவர்  எப்போதும்  விரோதியாக  இருந்துவந்தவரே  அல்லர்.  அத்துடன்  அவர்களை  தமது  பத்திரிகைகளிலும்  மிகுந்த  சலுகைகளுக்கு  பாத்திரர்களாக்கியும்  வைப்பார். பத்திரிகையை  முன்னேற்றமடையச்  செய்து  அதைப்  பெரும்பான்மையோரான  மக்களிடம்  பரவி  வரவேண்டுமென்கின்ற  விஷயத்தில்  அவரெடுத்துக்கொண்ட  சிரமமும்,  முயற்சியும்  அளவிடற்  பாலதன்று.  இத்தகைய ...

மதத்தைத்  தூஷிக்கும்  மாபெருங்  குற்றத்திற்கேற்பட்டுள்ள  295  ஏ  பிரிவுக்குள்ள  வியாக்கியானத்தின்

மதத்தைத்  தூஷிக்கும்  மாபெருங்  குற்றத்திற்கேற்பட்டுள்ள  295  ஏ  பிரிவுக்குள்ள  வியாக்கியானத்தின்

  விமர்சனமும்  புத்தி  நுட்பமும் “”ரீசன்”  என்னும்  ஆங்கிலப்  பத்திரிகையானது  ரோமன்  கத்தோலிக்கர்களையும்  முஸ்லீம்களையும்  தாக்கி  அன்னோர்  மதங்களைப்  புண்படுத்தக்  கூடியதான  கட்டுரைகளை  எழுதி  பிரசுரித்ததாக  டாக்டர்  ஸி.எல்.  டிவாய்ன்  மீது  கொண்டு  வரப்பட்ட  வழக்கைப்  பொம்பாயில்  மாகாணப்  பிரதம  நீதிவான்  ஸர்.  ஹோர்  முஸ்டியர்  தாஸ்துர்  அவர்கள்  விசாரித்துத்  தமது  சட்ட  ஆராய்ச்சியின்  நிபுணத்துவமான  அறிவு  நுட்பத்தால்  பாரபக்ஷமற்ற  நடுநிலைமையான  தீர்ப்பளித்திருக்கிறார். தீர்ப்பின்  விபரமாவது: டாக்டர்  சட்டத்தில்  சொன்ன  செய்கைகள்  எண்ணங்கள்  என்கிற  பாகுபாடுகளின்  தன்மைகளை  அனுசரித்துத்தான்  எந்தச்  சட்டங்களும்,  பிரிவுகளும்  அவைகளுக்குப்  பலன்களும்  அமைக்கப்பட்டிருப்பதை  இது  விவகாரத்தை  விசாரித்த  நீதிவான்  உணர்ந்தவராதலால்  இவரின்  தீர்ப்பில்  செய்கையைவிட  எண்ணத்துக்கே  மதிப்பளித்துத்  தீர்ப்புக்  கூறியிருக்கிறார். இத்தகைய  நீதிவான்களின்  பாரபக்ஷமற்ற  நடுநிலைமையாலும்,  சட்ட  நிபுணத்வத்தாலும்,  விசாரித்தறியும்  புத்தி  நுட்பத்தாலுமே  தான்  “”அரசாக்ஷி”  என்னும்  பதத்தின்  உண்மையான  பொருள்களால்  மக்களுக்குள்ள  இன்னல்களாகிற  “”சிறியதைப்  பெரியது  நலிதல்”  முதலியன  விலகி  சமாதான  முறையில்  வாழ்விக்க  முடியுமேயல்லாது ...

துணுக்குகள்

துணுக்குகள்

  ஆதிதிராவிடர்  இல்லையோ? அடுத்த  மார்ச்சு,  ஏப்ரல்  மாதத்தில்  நிர்வாக  சபையில்  ஓர்  இடம் காலியாகும்  என்று  ஏஷ்யம்  கூறப்படுகிறது.  இக்காலியாகும்  இடத்தில்  யார்?  உட்கார்வது  என்பதுபற்றி  எல்லாப்  பத்திரிகைகளும்  ஏஷ்யம்  கூறி  சிலர்  பெயரை  சிபார்சும்  செய்கிறது.  வகுப்புத்  துவேஷத்தை  வெறுக்கும்  சகவர்த்தமானியான  “”சுதேசமித்திரன்”  ஒரு  ஐயங்கார்,  அல்லது  ஐயர்  கனவான்  பெயரை  சிபார்சு  செய்வதுடன்,  முன்பு  பனகால்  காலத்தில்  காபினெட்டில்  ஓர்  பிராமணர்  இருக்க  வேண்டுமென்பதற்காகவே  மந்திரியாக  ஒரு  பிராமணரை  நியமித்ததாகவும்  அந்நியாயப்படி  இன்று  ஓர்  பிராமணர்  அவசியம்  என்று  கூறுகிறது. இதுவரை  பெரிய  உத்தியோகங்களில்  ஐயர்,  ஐயங்கார்,  ஆச்சாரியார்  எல்லாம்  நீண்ட  நாள்  இருந்து  பார்த்துவிட்டார்கள்.  அதைப்போன்றே  முஸ்லீம்,  கிருஸ்துவர்,  முதலியார்,  நாயுடு,  தமிழர்,  தெலுங்கர்,  கேரளர்  முதலிய  யாவரும்  இருந்து  பார்த்துவிட்டார்கள்  என்று  நமது  சகவர்த்தமானிக்கு  இவைகளைக்  கூறுகிறோம்.  ஆனால்  இதுவரை  இந்  நாட்டில்  ஜனசங்கையில்  நாலில்  ஒரு  பாகத்தினரான  ஆதிதிராவிடர்  என்பவர்களில்  ஒருவர்கூட  இதுவரையில் ...

பரோடா  பெண்கள்  முன்னேற்றம்

பரோடா  பெண்கள்  முன்னேற்றம்

  புதிய  சட்ட  விபரம் பரோடா  சமஸ்தானத்திலுள்ள  இந்துப்  பெண்களின்  உரிமைகளைப்  பாதுகாப்பதற்காக  இந்து  சமுதாயச்  சட்டத்தை  பின்வருமாறு  திருத்தி  புதிய  சட்டம்  ஏற்படுத்தியிருக்கிறார்கள்.  திருத்தப்பட்ட  அந்தப்  புதிய  சட்டப்படி  ஒரு  இந்து  பொதுக்  குடும்பத்தைச்  சேர்ந்த  ஒருவர்  இறந்துபோனால்  அவருடைய  விதவை  அந்தக்  குடும்பத்தில்  ஒரு  பங்காளி  ஆகிவிடுகிறாள்.  விதவைகளின்  முந்தின  நிலைமையில்  இந்தச்  சட்டம்  ஓர்  பெரிய  மாறுதலை  உண்டுபண்ணி  விட்டிருக்கிறதென்று  சொல்லலாம்.  முந்தியெல்லாம்  ஒரு  விதவைக்கு  அவள்  புருஷன்  குடும்பத்திலே  சோறும்,  உடையும்தான்  கிடைக்கும்.  வேறு  எவ்வித  உரிமையும்  கிடையாது.  இந்தச்  சட்டப்படி  ஒரு  விதவையானவள்  தன்  புருஷன்  குடும்பத்தின்  மற்ற  நபர்களைப்போல்  ஒரு  சம  பங்காளி  ஆகிவிடுகிறாள்.  சொத்தில்  தனக்குள்ள  பாகத்தைப்  பிரித்துக்கொடுக்கும்படி  கேட்பதற்குக்  கூட  இந்தச்  சட்டத்தினால்  உரிமை  ஏற்பட்டிருக்கிறது. புருஷனுடைய சொத்து அவர் தானே சம்பாதித்த தனி  சொத்தாயிருந்தால்  பழய  சட்டப்படி  அவருடைய  மகனுக்கும்,  பேரனுக்கும்,  பேரன்  மகனுக்கும்தான்  கிடைக்கும்.  இந்த  வார்சுகள் ...

தற்காலம்  நமக்கு  வேண்டியதென்ன?

தற்காலம்  நமக்கு  வேண்டியதென்ன?

  தற்காலம்  நமது  நாட்டுக்கு  வேண்டியது  வர்ணாஸ்ரமமாகிற  (மக்களுக்குள்  ஆண்டானடிமை,  உயர்ந்தோன்,  தாழ்ந்தோன்  வேறுபாட்டுகளை  விர்த்தி  செய்கிற)  வெறியைக்  கிளப்ப  மக்களுக்குள்  பரப்பி  வர  வேண்டுமா?  அல்லது  மக்கள்  யாவரும்  பிறப்பினால்  உயர்வு  தாழ்வு  இல்லை  என்கிற  சமத்வக்  கொள்கைகளைக்   கிளப்பி  அவைகளை  மக்களுக்குள்  பரப்பி  வரவேண்டுமா?  ஆகிய  இந்த  இரண்டு  கேள்விகளைப்  பற்றியும்  நமது  மக்களிருக்கும்   நிலைமையையும்,  அந்தஸ்தையும்  பற்றியும்  யோசித்து  தற்காலம்  இவ்வித  வேறுபாடுகளை  ஒழித்து வந்திருக்கிற  அந்நிய  நாட்டு  மக்கள்  நிலைமையையும்  அந்தஸ்தையும்  கவனித்துப்  பார்த்தால்  நம்  நாட்டின்  மக்களுக்கு  இத்தருணத்திற்கு  வேண்டியது  எது  என்பது  விளங்காமற்  போகாது.  ஆகையால்  வர்ணாஸ்ரம  மொழிந்த  சமத்வக்  கொள்கையாகிற  நன்மருந்தே  இன்றியமையாத  சாதனமாகும்.  ஏனெனில்  நம்  நாட்டு  மக்களை  வெகு  காலமாகப்  பீடித்து  அடிமை,  அறியாமையாகிய  கொடிய  நோய்வாய்ப்படுத்தி  உருவழித்து    வரும்  சமயம்,  சாதி,  ஆச்சிரமம்  முதலியவைகளுக்கு  தாத்காலிகத்திற்கேற்ப உய்விக்கக் கூடியது  அம்மருந்தேயாகும். உதாரணமாக  வர்ணாச்சிரப்  பேதமில்லாத  (பிறப்பினால்  உயர்வு ...

வருத்தம்

வருத்தம்

  நமது  இயக்க  பிரபல  தோழர்களில்  முக்கியஸ்றான  தோழர்  ஏ.பொன்னம்பலனார்  அவர்களின்  சகோதரர்  மாணிக்கம்  அவர்கள்  நேற்று  இரந்தார்  என்பதையறிந்து  விசனிக்கிறோம்.  சென்ற  ஆண்டு  தங்கையையும்,  இவ்வாண்டு  தம்பியையும்  பிரிந்த  தோழர்  பொன்னம்பலனாருக்கு  நாம்  ஆறுதல்  கூற  விரும்பவில்லை  என்றாலும்  வயோதிகர்களான  அவரின்  தாய்  தந்தையர்களுக்கு  ஆறுதல்  கூற  ஆசைப்படுகிறோம். புரட்சி  இரங்கல் செய்தி  04.02.1934

ஈ.வெ. ராமசாமிக்கும்

ஈ.வெ. ராமசாமிக்கும்

ச.ரா. கண்ணம்மாளுக்கும் “”ஜே” நமதியக்கங் கண்ட தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் மீதும், தோழர் சா.ரா. கண்ணம்மாள் அவர்கள் மீதும் சென்ற அக்டோபர் மாதம் 29ந் தேதியில் “”குடி அரசி”ல் எழுதிய “”இன்றைய ஆக்ஷி ஏன் ஒழிய வேண்டும்” என்கிற தலையங்கத்தின் காரணமாக சர்க்காரால் துடரப்பட்ட ராஜநிந்தனை வழக்கை விசாரித்து வந்த கோவை ஜில்லா நீதிவான் ஆகிய தோழர் ஜி.டபள்யூ. வெல்ஸ், ஐ.சி.எஸ். அவர்கள் சென்ற ஜனவரி மாதம் 24ந் தேதியன்று கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்திருக்கிறார். அதாவது தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்களுக்கு 6 மாதம் வெறுங் காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் தோழர் சா.ரா. கண்ணம்மாள் அவர்களுக்கு 3மாதம் வெறுங் காவல் தண்டணையும் 300 ரூபாய் அபராதமும், þ அபராதத் துகை செலுத்தாத பக்ஷம் மேற்கொண்டு தலா ஒவ்வொரு மாதத் தண்டனையென்றும் தீர்ப்பளிக்கப்பட்டு காவலிலிருந்து வருகிறார்கள். எழுதப்பட்ட விஷயம் தப்போ, சரியோ என்றாவது, தண்டிக்கப்பட்ட விஷயம் தப்போ, சரியோ என்றாவது...

தோழர்  O.இ.  சீனிவாசன்  மறைவு

தோழர்  O.இ.  சீனிவாசன்  மறைவு

கொச்சி  ஈழுவ  சமுதாய  வீரரும்  பிராமணரல்லாதார்  இயக்கத்தின்  உயரிய  மேம்பாட்டிற்கு  ஆரம்ப  கால  முதல்  பெரிதும்  உழைத்தவரும்  சமதர்ம  லட்சியத்தில்  தீவிர  பற்றுடையவருமாகத்  திகழ்ந்த  சென்னை  தோழர்  O.இ.  சீனிவாசன்  அவர்கள்  18134ல்  பஸ்  விபத்தால்  அகோர  மரணமடைந்தார்  என்ற  செய்தி  கேட்டு  பெரிதும்  வருந்துகிறோம்.  தோழர்  O.இ.  சீனிவாசன்  அவர்கள்  பாழான  வர்ணாச்சிரம  தர்மத்தையும்  அதைப்  போன்றதான  இன்றைய  முதலாளி  தொழிலாளி, பணக்காரன்  ஏழை  என்ற  கொடுமைகளையும்  அறவே  அகற்றப்  பெரிதும்  துணிவோடு  தொண்டாற்றிய  வாலிப  வீரராவார்.  வாலிப  உலகம்  ஆண்மை,  தியாகம்  என்ற  இரு  குணங்களையும்  பின்பற்றுவதற்கு  அவர்  ஓர்  சிறந்த  எடுத்துக்காட்டாக  விளங்கியவர். உதாரணமாகச்  சென்ற  மூன்று  வருஷங்களுக்கு  முன்பு  கொச்சி  சமஸ்தான  கு.N.ஈ.க.  யோகத்தில்  தலைமை  தாங்கி  மதப் பிரசாரத்தையும்  உயர்வு  தாழ்வுக்கான  பொல்லாத  வர்ணாஸ்ரமத்தையும்  பற்றி  வடநாட்டு  பெருத்த  பழுத்த  வைதீகப்  பண்டித  மதன்  மோகன  மாளவியா  அவர்கள்  நெஞ்சில்  மான  ஈனமில்லாது  பேசியகாலையில் ...

அருஞ்சொல் பொருள்

அருஞ்சொல் பொருள்

அசூயை                       –                      பொறாமை அத்தியந்த               –                      மிகவும் நெருக்கமான ஆக்கினை              –                      கட்டளை ஆஸ்பதம்                –                      இடம், பற்றுக்கோடு கெம்பு    –                      சிவப்பு இரத்தினக்கல் சகடயோகம்         –                      குருவுக்கு ஆறு, எட்டு, பன்னிரண்டிற்                                                                               சந்திரன் இருத்தலால் உண்டாகும் பலன் சந்தியா வந்தனம்                 –                      சந்தி வணக்கம் சாக்காடு                   –                      இறப்பு சிடுக்கை நேரம்                       –                      பெண்கள் தலைமுடியில்                                                                                                                  சிக்கு எடுக்கும் நேரம் சிலாகித்தல்        –                      புகழ்தல் தர்க்கீத்து                  –                      விவாதித்து தர்ப்பித்து                 –                      பயிற்சி, ஒழுக்கம் தியங்கி                       –                      சோர்வடைந்து, புத்திமயங்கி, கலங்கி நிர்த்தூளி                –                      முழு அறிவு நிர்தாரணம்          –                      நிலை நிறுத்தல் பஞ்சராப்போல்...

நாகம்மாள் மறைவு                                   எல்லாம் நன்மைக்கே 

நாகம்மாள் மறைவு                                   எல்லாம் நன்மைக்கே 

எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11-5-33 தேதி மாலை 7-45 மணிக்கு ஆவி நீத்தார்.  இதற்காக நான் துக்கப்படுவதா?  மகிழ்ச்சி யடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா? நஷ்டமா? என்பது இதுசமயம் முடிவு கட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.  எப்படியிருந்தாலும் நாகம்மாளை “மணந்து” வாழ்க்கைத் துணை யாகக்  கொண்டு 35 வருஷகாலம் வாழ்ந்து விட்டேன்.  நாகம்மாளை நான் தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல் நாகம் மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை.  நான் சுயநலவாழ்வில் ‘மைனராய்’ ‘காலியாய்’ ‘சீமானாய்’ இருந்த காலத்திலும் பொதுநல வாழ்வில் ஈடுபட்டு தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக் குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தாள் என்பது மறுக்க முடியாத காரியம். பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிரத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ–போதிக்கி றேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு...

‘மே’ தினம்

‘மே’ தினம்

சமதர்மப் பெருநாள் 1933-வருடம் மே மாதம் 21-தேதி ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதையோரால்                                                                                                        தமிழ்நாடு முழுமையும் கொண்டாடப்படும்.   உலகெங்கும் கடந்த 50 வருஷமாக மே தினத்தை ஓர் பெருநாளாகத் தொழிலாளர், கிருஷிகள் முதலியோர் கவனித்து வருகின்றார்கள்.  தாழத்தப் பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், ஏமாற்றப்பட்டவர்களுக்கும் இந்நாள் வொன்றே உவந்த  தினமாகும். இந்நாளில் கோடான கோடி மக்கள் தாங்கள் படும் கஷ்டங்களையும், குறைகளையும் தெரிவிப்பான் வேண்டி, ஆங்காங்கு கூட்டங்கள் போடுவதும், ஊர்வலம் வருவதும், உபன்யாசங்கள் செய்வதும் வழக்கமாயிருந்து வருகிறது. இவ்வருஷம் ‘மே‘ தினமாகிய சென்ற திங்களில் (1933, மே, 1-²) ஆங்கில நாட்டிலும் (நுபேடயனே) பிரான்சிலும் (குசயnஉந) ருஷ்யாவிலும் (சுரளளயை) ஜெர்மனி (ழுநசஅயலே) இட்டலி (ஐவயடல) அமரிக்காவிலும் (ஹஅநசiஉய)  இந்தியாவிலும் (ஐனேயை) ஜப்பானிலும் (துயயீயn) மற்றுமுள்ள தொழிலாளர், முதலாளி தேசங்களில் கோடான கோடி மக்கள் தம்தம் குறைகளைத் தெரிவித்தும், குறைகளுக்குப் பரிகாரம் தேடியும், யோசித்தும், பற்பல தீர்மானங்கள் செய்தும் வந்திருக்கின்றனர்.  இந்த வருஷம் பாரிஸ் பட்டணம், இந்நாளை...

தோழர்  ஈ.வெ.ரா.  ஸ்டேட்மெண்டு

தோழர்  ஈ.வெ.ரா.  ஸ்டேட்மெண்டு

  சமதர்மப்  பிரசார  உண்மை  விளக்கம் இ.பி.கோ.  124அ  செக்ஷன்படி  தொடரப்பட்டுள்ள  “”பொதுவுடைமை”  பிரசாரத்திற்காகவும்  “”இராஜ  நிந்தனை”  என்பதற்காகவுமுள்ள  வழக்கு  கோவையில்  12ˆ  ஆரம்பிக்கப்பட்ட  போது  தோழர்  ஈ.வெ.  இராமசாமி  அவர்கள்  கோவை  ஜில்லா  கலெக்டர்  எ.ஙி.  வெல்ஸ்  ஐ.இ.கு.  அவர்கள்  முன்  தாக்கல்  செய்த  ஸ்டேட்மெண்ட்: என்  பேரில்  இப்போது  கொண்டு  வரப்பட்டிருக்கும்  வழக்குக்கு  ஆதாரமே  கிடையாது. வழக்குக்கு அஸ்திவாரமான  291033  தேதி  “”குடி  அரசின்”  தலையங்கத்தை  இப்போது  பலதரம்  படித்துப்  பார்த்தேன்.  அதை  நான்  எழுதினேன்  என்பதை  ஒப்புக்  கொள்ளுகிறேன். அதில் எழுதப்பட்டிருக்கும்  விஷயங்களுக்காவது  வாக்கியங்களுக்காவது  ராஜத்துவேஷக்  குற்றம்  சாட்டப்படுமானால்  இன்றைய  அரசாங்க  முறை,  நிர்வாக  முறை  முதலியவைகளைப்  பற்றி  ஆராய்ச்சி  செய்து  குறைகளை  எடுத்துச்  சொல்லவோ,  அவற்றால்  மக்களுக்கு  ஏற்படக்கூடிய  கஷ்டங்களை  விலக்கப்  பரிகாரம்  தேட  ஏற்பாடு  செய்யவோ  யாருக்கும்  சுதந்திரம்  கிடையாது  என்றுதான்  முடிவு  செய்யப்பட்டதாகும். என்ன காரணத்தைக்  கொண்டு  என்மேல்  ஆதாரமற்ற  இந்தப்  பிராது ...

சைவர்களின்  மனப்பான்மை

சைவர்களின்  மனப்பான்மை

  சைவர்கள்  என்பவர்  சிவனை  முழுமுதற்  கடவுளாக  எண்ணி  வழிபடுபவர்களாவார்கள்.  சிவ  என்னும்  சொல்  மங்களகரம்  என்றும்  அன்பே  உருவாகக்  கொண்டது  என்பது  முதலாக  பல  பொருள்களையும்  குறிக்கத்தக்கதாகும்.  இப்படிப்  பொருள்படும்  வாக்கியத்தின்  வாச்சியனை  வழிபடுபவர்கள்தான்  சைவர்கள்  என்று  கூறுகிறார்கள்.  இத்தகையோர்களின்  இலக்கணங்கள்  எப்படியிருக்க வேண்டுமென்பதைக்  குறித்து  சைவாகமங்களில்  விசேடமாகக்  கூறப்பட்டிருக்கிறது.  அவைகளை  விரிக்கிற்  பெருகுமென  முக்கியமானவற்றை  மட்டில்  இங்கு  குறிப்பிடுகிறோம். மன மொழி  காயங்களால்  தன்னைப்  போற்  பிறரை  நேசித்  தொழுகல்  என்பன  போன்றவைகளாகும்.  இத்தகைய  அரிய  குண  சமூகத்தோடு  கூடிய  சைவப்  பெரியார்களில்  தானும்  ஒருவராக  எண்ணிக்  கொண்டு  அநேக  சைவக்  கூட்டங்களில்  சொற்பொழிவாற்றி  வரும்  கோவை  சேக்கிழார்  நிலையம்  தோழர்  சி.கே.  சுப்பிரமணிய  முதலியார் ஆ.அ. அவர்கள்  ஜனவரி  மாதம்  18  ˆ  “”தமிழ்நாடு”  பத்திரிகையில்  “”அரை  குறை  சாஸ்திர  ஞானம்  கூடாது”  “”சோதிட  சாஸ்திர  ஆராய்ச்சி”  “”நவக்கிரகங்களுடன்  என்ன  சம்பந்தம்”  என்கின்ற  தலைப்புகளின்  கீழ்  எழுதிய ...

வடஆற்காடு ஜில்லா                          சுயமரியாதை மகாநாடு           

வடஆற்காடு ஜில்லா                          சுயமரியாதை மகாநாடு           

தலைவர் அவர்களே! தோழர்களே! ! இன்று இந்த மகாநாட்டுக்கு வந்த எனக்கு இங்குள்ள பல சங்கங்களால் வரவேற்பு பத்திரங்கள் வாசித்துக் கொடுக்கப்பட்டதற்கு பதில் சொல்லுவேன் என்று தலைவர் சொன்னார். வரவேற்புப் பத்திரங்களை ஒரு சடங்காகவே கருதி வருகிறேன், அவை புராணக் கற்பனைகள் போல் இருக்கின்றனவே ஒழிய உண்மைகள் மிக அருமையாகவே இருக்கின்றன. அப்படிப்பட்ட சில விஷயங்களினுடைய பாராட்டுதலும் எனக்குச் சேர வேண்டியதில்லை. அவைகள் எல்லாம் எனக்குத் துணையாய் இருந்து என்னுடன் ஒத்துழைத்து எனக்கு ஊக்கமும், உற்சாகமும் ஊட்டிவந்த வாலிபர்களுக்கே சேர வேண்டியதாகும். ஆதலால் அப்புகழ்ச்சிகளை அவர்களுக்கே சமர்ப்பித்து விடுகிறேன். தோழர்களே! இம்மாநாட்டுக்குத் தலைமை வகித்த தலைவர் தோழர் கே. எம். பாலசுப்பிரமணியம் பி.ஏ., பி.எல். அவர்கள், தான் ஒரு சின்னப் பையன் என்றும், தன்னை தலைமைப் பதவியில் உட்கார வைத்து நான் வேடிக்கை செய்கிறேனென்றும் சொன்னார். இந்த இயக்கம் இன்று ஏதாவது ஒரு அளவுக்காவது மதிக்கத்தகுந்த அளவுக்கு பயன்பட்டு வருகின்றது என்று...

தாலூகா  போர்டுகளின்  அழிவு

தாலூகா  போர்டுகளின்  அழிவு

  நமக்கு  சர்க்காரால்  அளிக்கப்பட்ட  ஸ்தல  ஸ்தாபன  அதிகாரங்களில்  தாலூகா  போர்டு  நிர்வாகம்  என்பதும்  ஒன்றாகும்.  இதானது  துவக்கப்பட்டு  நம்மவர்களால்  நடத்தப்பட்டு  வரும்  கொஞ்ச  காலத்திற்குள்ளாகவே  இதை  நிர்வகித்து  வரும்  அங்கத்தவர்களாலேயே  “”பிள்ளையார்  பிடிக்க  குரங்காய்  முடிந்தது”  என்றதற்கொத்த  நடைமுறையில்  அதன்  ஒழுக்கக்  குறைவாலும்,  சுயநல  முதிர்ச்சியினாலும்,  ஒழுக்கயீனமான  நடைமுறைகளாலும்,  சிவில்,  கிரிமினல்  வியாஜ்ய  விவகாரங்களாலும்  நடத்தப்பட்டு  வந்ததாக  ஏற்பட்டதோடு  பொருளாதார  முறையிலும்  மிக  நெருக்கடியான  தன்மையிலும்  அமைக்கப்பெற்று  விட்டதால் இந்த  சொல்ப  நன்மையும்  கூட  நம்மவர்களின்  அந்தஸ்திற்கு  கெட்டதாக  மாறி  விட்டதானது  மிகவும்  விசனிக்கத்தக்கதாகும்.  இதுகளைக்  குறித்து  பல  தடவைகளிலும்  நமது  “”குடி  அரசு”  வாயிலாகவும்,  நமதியக்கத்  தோழர்களால்  சொற்பொழிவுகளின் வாயிலாகவும்,  நமது  இயக்க  மகாநாடுகளின்  தீர்மான  மூலமாகவும்   எடுத்துக்  காட்டப்பட்டிருப்பதை  வாசகர்கள்  அறிந்திருப்பார்கள். மேலும்  இதை  நடத்தி  வருபவர்கள்  இதை  ஒரு  பொதுநல  சேவைக்கான  ஸ்தாபனம்  என்றும்,  இது  மக்களின்  நம்மைக்கே  அமைக்கப்பட்டிருக்கிறதென்கிற  நினைவேயில்லாமல்  இது  ஒரு  தனிப்பட்ட ...

கெண்டைக் குஞ்சுகள் – குறும்பன்

கெண்டைக் குஞ்சுகள் – குறும்பன்

பரமசினைப் பார்த்தீர்களா? ஆகாய விமானத்தில் போய் இமயமலையின் அதிக உயரமான சிகரமாகிய ‘எவரஸ்ட்’ டைப் பார்த்துவிட்டு வந்தார்கள், என்று பத்திரிகை கள் கூறுகின்றன. “அங்கே எங்கள் பரமசிவம் இருந்திருப்பாரே, பார்த்தீர்களா” என்று கேட்க வேண்டுமென்று லோகோபகாரப்பிள்ளை ஆவலோடிருக்கிறார். மாமாங்கம் உபாத்தியாயர்:- சமீபத்தில் நடந்த மகாமகத்தை (மாமாங்கம்) பற்றி நீ தெரிந்து கொண்ட தென்ன? பிராமணப்யைன்:- நமது ஹிந்துக்கள் இந்தப் பண நெருக்கடியான காலத்தில்கூட எவ்வளவு கடவுள் பக்தியோடு இருக்கிறார்கள், என்பதைக் காட்டுகிறது சார். உபாத்தியாயர்:- சரி, நீதெரிந்து கொண்டதென்ன? சு.ம. பையன்:- யோக்கியமாய் உலகத்தில் வாழ்வதைவிட ஏமாற்றிக் கொண்டே வாழ்வது ரொம்ப லகுவு என்பது தெரிகிறது சார். ஆஸ்திகக் குழந்தைகள் “குறித்த அளவுக்குமேல் உஷ்ணமோ குளிர்ச்சியோ ஒருவன் உடம் பில் ஏற்பட்டதும் அவன் இறந்து விடுவதற்குக் காரணமென்ன? என்று வைத்தியப் பள்ளிக்கூட (ஆநனiஉயட ளஉhடிடிட) ஆசிரியர் வகுப்புப் பிள்ளைகளைக் கேட்டார், ‘ஹிந்து’ மாணவன்:- அது அவனுடைய தலைவிதி சார். கிறிஸ்து மாணவன்:-...

வருந்துகிறோம்

வருந்துகிறோம்

  ஜோலார்ப்பேட்டை  பிரபல  கண்டிராக்டர்  தோழர்  வரதராஜலு  (முதலியார்)  அவர்கள்  5134ல்  காலமானார்  என்ற  செய்தி  கேட்டு  வருந்துகிறோம்.  இவர்  வயோதிக  வாழ்க்கையினரானாலும்  ஐதீகத்தையே  பின்பற்றிவிடாது  காலப்போக்கின்  உயரிய  தன்மையை  உணர்ந்து  நமது  “சமதர்மம்’  போன்ற  லக்ஷ்யங்களைப்  போற்றியதோடு  அதற்காக  நின்று  தொண்டாற்றிய  தோழர்களைப்  பெரிதும்  ஊக்கமூட்டிப்  பேராதரவு  நல்கியவராவார்.  மற்றும்  நமது  இயக்கத்திற்கு  உறுதுணையாக  நின்று  சீரிய  ஊழியம்  செய்ய தோழர்  வி. பார்த்தசாரதி  அவர்களை  நமக்கு  “தத்தம்’  செய்துள்ள  சிறப்பாளருமாவார்.  இத்தகைய  பெரியார்  மறைந்ததற்காக  இயற்கையை  செவ்வனே  உணர்ந்த  தோழர்  வி. பார்த்தசாரதி  அவர்களுக்கும்  அவர்தம்  குடும்பத்தினருக்கும்  எவ்வித  ஆறுதலும்  தேவையில்லை  என்றே  நம்புகிறோம். புரட்சி  இரங்கலுரை  07.01.1934

நாஸ்திகர்  மகாநாடு

நாஸ்திகர்  மகாநாடு

  சென்னையில்  நாஸ்திகர்  மகாநாடானது  சென்ற  டிசம்பர்  மாதம்  31தேதி  கூட்டப்பட்டது.  இது  நமது  நாட்டிற்கே  ஒரு  புதுமையானதும்,  மக்களுக்கு  ஒருவித  புத்துணர்ச்சியை  உண்டுபண்ணக்கூடியதுமாகும். நாஸ்திகமானது  தற்காலம்  இன்னாட்டிற்  சிலருக்கு  மட்டில்  புதுமையெனத்  தோன்றுமாயினும்  இது  தொன்றுதொட்டே  இருந்து  வந்திருப்பதாக  நம்மவர்களின்  புராண  இதிகாசங்களால்  விளக்கப்பட்டிருக்கிறது.  உதாரணமாக  இராமாயண  காலத்திலும்  நாஸ்திகம்,  கதாநாயகனான  ராமனுக்கு  உபதேசிக்கப்பட்டதாகவும்,  அவன்  மறுத்துவிட்டதையறிந்த  உபதேசிகள்  அதற்கு  அவனின்  இளமைப்  பருவந்தான்  காரணமென்றறிந்து  பிறகு  கொஞ்ச  காலஞ்  சென்று  வாசிட்டம்  என்கிற  முறையில்  உபதேசிக்கப் பட்டதாகவும்,  அவனும்  அதை  மறுக்காமல்  ஒப்புக்கொண்டதாகவும்  ஒரு  அத்தாட்சி  காணப்படுகிறது. மற்றொரு  உதாரணம்  என்னவென்றால்  தேவேந்திரனானவன்  தனது  லௌகீக  அலுவல்களை  விட்டு  விட்டு  வைதீக  மார்க்கத்தை  அநுஷ்டித்து  வந்த  சமயத்தில்  அவனது  நாடும்,  நாட்டுக்  காரியங்களும்  குன்றி  வருகிறதைக்  கவனித்து  வந்த  அவன்  குருவாகிய  வியாழன்  (பிரகஸ்பதி)  என்போன்  தனது  சீடனான  இந்திரனுக்கு  நாஸ்திகத்தை  உபதேசித்து  அவனது  ராஜ்யத்தையும்,  ராஜ்ய  காரியாதிகளையும் ...