ஒரு களப் போராளியின் வரலாற்றுப் பக்கங்களிலிருந்து…
தூக்குத் தண்டனைக்குள்ளாகி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு முழு ஆயுள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலையானவர் தோழர் ஏ.ஜி. கஸ்தூரிரங்கன். பெரியார் இலட்சியங்களில் ஊன்றி நின்று, திராவிடர் விவசாய சங்கத்தை அப்பகுதியில் வழி நடத்தி, பிறகு மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, தன் மீது திணிக்கப்பட்ட ‘முக்கொலை’ பொய் வழக்கில் அரசு அதிகாரத்தால் தண்டிக்கப்பட்டு விடுதலையாகி மீண்டும் திராவிடர்கழகத்தில் இணைந்து விவசாய சங்கத்தை வழி நடத்தி, இறுதியில் தமிழர் தன்மானப் பேரவையைத் தொடங்கி, 84ஆம் அகவையில் முடிவெய்தினார், தோழர் ஏ.ஜி.கே.! தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளாதவர்கள் இத்தகைய களப்போராளிகள். ஏ.ஜி.கே.வை சமூகப் போராளியாக்கிய இளம்பருவ அனுபவங்களை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. பசு. கவுதமன், சாக்கோட்டை இளங்கோவன் முயற்சி – உழைப்பால் வெளி வந்திருக்கும் ‘ஏ.ஜி. கஸ்தூரிரங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்’ நூலிலிருந்து சில பகுதிகள்: நாகையை அடுத்த அந்தணப்பேட்டை வயல்களால் சூழப்பட்ட இருண்ட கிராமம். சேறு, சகதியாகிக் காயக்கூடிய மண்பாதை. சில ஒற்றையடிப் பாதைகள். இருட்டு ஆரம்பித்தால்...