Tagged: வேத மரபு மறுப்பு

தமிழர்களே புரோகித சடங்குகளை புறக்கணிப்பீர்! சேலம் மாநாட்டின் ஒற்றைத் தீர்மானம்

24-12-2016 அன்று சேலத்தில், சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில் ‘வேத மரபு மறுப்பு மாநாட்டில்’  கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்த ஒற்றை தீர்மானம் : வேதங்கள் – பகவத்கீதை – மனுஸ்மிருதி அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட வேத மரபு – பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழரின் திருக்குறள் மரபுக்கு எதிரானதாகும். வேதங்கள் உருவான காலத்திலிருந்து அதற்கு எதிர்ப்புகளும் தோன்றி விட்டன. பார்ப்பனீயம் இந்த எதிர்ப்புகளை சாதுரியமாக வீழ்த்தியிருப்பதை வரலாறுகள் உணர்த்துகின்றன. சார்வாகர் – சமணர் – புத்தர் – சித்தர்கள் – வடலூர் வள்ளலார் போன்று பலரும் போர்க் கொடி உயர்த்தி இருக்கிறார்கள். இறுதியாக வேதமதமாகிய பார்ப்பன மதம் பிரிட்டிஷ் ஆட்சியைப் பயன்படுத்தி ‘இந்து’ என்ற வலைக்குள் வெகு மக்களை நிர்பந்தமாக  உள்ளிழுத்துக் கொண்டது. இதன் வழியாக சமூக அதிகாரங்களை தனது வசமாக்கிக் கொண்டு அதனூடாக தன்னை அரசியல் அதிகார...

இறை நம்பிக்கையாளர்களையும் இன உணர்வாளர்களையும் இணைத்தது – சேலம் மாநாடு

வேத மரபுக்கு எதிராகப் போர்க்குரல்! இந்து மதத்துக்கு தாங்களே உரிமைக் குரியவர்கள் போல் வெகுமக்களை ஏமாற்றி வந்த பார்ப்பனிய மிரட்டலுக்கு பதிலடி தந்துள்ளது சேலம் மாநாடு. வேத மரபினை மறுப்போம், வெகு மக்கள் உரிமைகளை மீட்போம் என்கிற பார்ப்பன இந்துத்துவ எதிர்ப்பு இலட்சிய முழக்கத்தை முன் வைத்து சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில் வேத மரபு மறுப்பு மாநாடு டிசம்பர் 24, 2016 அன்று சேலம் போஸ் மைதானம் அருகில் உள்ள நேரு கலையரங்கத்தில் இசை நிகழ்ச்சி, கருத்தரங்கம், வீதிநாடகம், கழகத் தலைவருக்கு பிரச்சார ஊர்தி வழங்குதல், புரட்சி பெரியார் முழக்க சந்தா வழங்குதல் கழக கட்டமைப்பு நிதி மற்றும் பொது மாநாடு எழுச்சியுடன் நடைப்பெற்றது. முன்னதாக தந்தை பெரியாரின் 40ஆவது நினைவு நாளை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர்...

வேத மரபை எதிர்த்துப் போராடிய வைகுண்ட சாமிகள்

வேத மரபை எதிர்த்துப் போராடிய வைகுண்ட சாமிகள்

வேத மரபை எதிர்த்த முன்னோடிகளில் ஒருவர் வைகுண்ட சாமிகள். கன்யாகுமரிக்கு அருகே பூவண்டன் தோப்பு எனும் கிராமத்தில் ஓர் ஏழை நாடார் குடும்பத்தில் 1809ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் ‘முடி சூடும் பெருமாள்’. ஆனால் அந்த காலத்தில் மன்னர்கள் அல்லது பார்ப்பன உயர்ஜாதியினர் வைத்துக் கொள்ளும் பெயர்களை ‘தாழ்ந்த’ ஜாதியினராக கருதப்பட்டவர்கள் வைத்துக் கொள்ளக் கூடாது. எனவே இப்பெயர் வைத்தமைக்காக பார்ப்பனர், உயர்ஜாதியினர் அரசு அதிகாரிகளிடம் புகார் செய்தனர். அவர்களும் பெயரை மாற்ற உத்தரவிட்டனர். வேறு வழியின்றி பெற்றோர்கள், பெயரை ‘முத்துக்குட்டி’ என்று மாற்றினர். 1833இலிருந்து பொது வாழ்வில் இறங்கினார். தொடக்கத்தில் விஷ்ணு பக்தராக இருந்த இவர், தனது பெயரை ‘வைகுண்டர்’ என மாற்றிக் கொண்டார். குமரிப் பகுதி அப்போது திருவாங்கூர் சமஸ்தானத்தின் நிர்வாகத்தில் இருந்தது. ஜாதி வெறியோடு ஆட்சி நடத்திய அரசர்கள், ஒடுக்கப்பட்ட ஜாதியினரை அடிமைகளாக நடத்தினர். அநியாயமாக வரி போட்டனர். மன்னனை எதிர்த்து துணிவோடு...

டிச.24 சேலம் மாநாட்டு சிந்தனை வேத மரபுகளை மறுப்போம்; வெகுமக்கள் உரிமை மீட்போம்!

பெரியார் நினைவு நாளில் டிசம்பர் 24இல் சேலத்தில் திராவிடர்விடுதலைக் கழகம் வேத மரபு மாநாட்டை நடத்துகிறது. “வேத மரபை மறுப்போம்; வெகுமக்கள் உரிமை மீட்போம்” என்பதே மாநாட்டின் முழக்கம். வேத பார்ப்பனிய மரபு சமூகத்தை ஒடுக்கி வந்த வரலாறுகளை பல்வேறு கருத்தாளர்கள் விரிவாகப் பேச இருக்கிறார்கள். வேதங்கள் கற்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதற்கு எதிர்ப்பான சிந்தனைகள் சமூகத்தில் உருவாகியே வந்திருக்கின்றன. ஆனால் பார்ப்பனியம் அந்த எதிர்ப்புகளை சூழ்ச்சியால், அழிப்பால், இருட்டிப்பால், ஊடுருவலால் வீழ்த்தியது என்பதே கொடூரமான வரலாறு. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ‘இந்து’ என்ற பெயரில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது பார்ப்பனியம். வேத பார்ப்பனிய மரபுகளால் அடிமைகளாக்கப்பட்டு, உருக்குலைக்கப்பட்ட மக்களை தனது கட்டுப்பாட்டில் உறுதிப்படுத்திக் கொண்டது. அதற்கு சட்டப் பாதுகாப்பையும் தேடிக் கொண்டது. இந்து மதம்  என்ற பெயரில் நமது மக்கள் மீது பார்ப்பனியம் திணித்த அடக்குமுறைகளை எதிர்க்கும் போதெல்லாம், “பார், பார்- இந்துக்களின் விரோதிகளைப் பார்” என்று பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாத வெகுமக்களை...