Tagged: விருதுநகர்

விருதுநகர் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள் சங்பரிவாரங்களின் சவாலை முறியடிக்க சூளுரைப்போம்

விருதுநகர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ‘விருதுநகர் சுயமரியாதை மாநாடு’ 23.9.2017 அன்று மாலை விருதுநகர் விஸ்வேஸ்வரர் அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது. 1931ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த மூன்றாவது சுயமரியாதை மாநாட்டின் வரலாற்றை நினைவு கூர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இம்மாநாடு. மாநாட்டையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் பெரியார் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் வரலாற்றுப் பதிவுகள் பேரறிஞர் அண்ணா சிலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இந்த வரலாற்றுச் சுவடுகள் கண்காட்சியை திறந்து வைத்தார். அங்கிருந்து பறை இசை முழங்க ஊர்வலமாக புறப்பட்டு மாநாட்டு அரங்கிற்கு தோழர்கள் வந்து சேர்ந்தனர். டபிள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியன் நினைவரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் வரவேற்புரையாற்றினார். மாவட்ட கழகத் தலைவர் அல்லம்பட்டி நாத்திகபாண்டி முன்னிலை வகித்தார். தோழர்கள் டார்வின்தாசன் (திருச்சி மாவட்ட கழகப் பொறுப்பாளர்), ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), இரா உமாபதி (சென்னை...