வினாயகன் அரசியலுக்கு எதிராக சென்னை-பொள்ளாச்சியில் பெரியார் கைத்தடி ஊர்வலம்: கைது
மதத்தை அரசியலாக்கி, மதக் கலவரத்தை உருவாக்கி வரும் ‘விநாயகன்’ ஊர்வலங்களை எதிர்த்து சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில் பெரியார் கைத்தடி ஊர்வலம் எழுச்சியுடன் நடைபெற்றது. அன்று தான் இந்து முன்னணி நடத்தும் ‘விநாயகன் சிலை’ ஊர்வலமும் நடந்தது. திருவல்லிக் கேணி அய்ஸ்அவுஸ் பகுதி மசூதிக்கு அருகே கழகத் தோழர்கள் திரண்டனர். பெரியார் கைத்தடிகளுடன் ‘விநாயகன் ஊர்வலத்தை அரசியலாக்காதே!’, ‘கலவரம் உருவாக்கும் விநாயகன் ஊர்வலங்களுக்கு, அரசே அனுமதி அளிக்காதே!’ ‘வீடுகளில் நடக்கும் பக்தி பண்டிகைகளை வீதிக்குக் கொண்டு வந்து அரசியலாக்காதே!’ என்ற முழக்கங்கள் அடங்கிய பதாகைகள் தாங்கி தோழர்கள் முழக்கமிட்டனர். கைத்தடி ஊர்வலத்துக்கு பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இரா.உமாபதி முன்னிலை வகித்தார். திருச்செங்கோடு, விழுப்புரம், மேட்டூர், காவலாண்டியூர், குடியாத்தம் பகுதிகளிலிருந்து கழகத் தோழர்கள் பங்கேற்றனர். கண்டன ஊர்வலத்தின் நோக்கங்களை விளக்கி பால்பிரபாகரன் பேசினார். தோழர்களை காவல்துறை கைது செய்தது. இராயப்பேட்டை பி.எஸ்.என்.எல்....