Tagged: விடுதலைப் புலிகள்

ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு

தமிழ்நாட்டில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆக்கப்பூர்வமான உதவிகளை செய்த பெருமை மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு உண்டு. இதை எவராலும் மறுக்க முடியாது. விடுதலைப் புலிகள் இயக்கமே இதை நன்றியுடன் பதிவு செய்திருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இரண்டு தவணைகளில் பல கோடி ரூபாய் நிதியை வழங்கியவர் – மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். இரண்டாவது முறை – அரசு நிதியிலிருந்து வழங்கிய காசோலைக்கு ராஜீவ் ஆட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் “அந்தக் காசோலையைக் கிழித்தெறியுங்கள்; எனது சொந்தப் பணத்தைத் தருகிறேன்” என்று கூறி, சொந்தப் பணத்தை எடுத்துத் தந்தவர் அவர்தான். சென்னை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கியபோது அதை துறைமுகத்திலிருந்து வெளியே எடுப்பதற்கு தடைகள் வந்தபோது, முதல்வர் என்ற முறையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கிடைக்கச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான். ஈழத் தமிழர்களுக்காக தான் கருப்புச் சட்டை அணிந்ததோடு, தனது சக அமைச்சர்களையும்...

ராஜிவ் கொலை விசாரணையில் காங்கிரசின்  துரோகம்

ராஜிவ் கொலை விசாரணையில் காங்கிரசின் துரோகம்

தமிழக முதல்வர் 7 பேரை விடுதலை செய்தவுடன் துள்ளி குதிக்கும் காங்கிரசார், ராஜிவ் மீது உண்மையான பற்று கொண்டவர்கள் தானா? ராஜீவ் பாதுகாப்பில் அலட்சியம் காட்டியதோடு தவறு செய்தவர்களை காப்hபற்ற முயன்றார்கள். இதோ, ஆதாரங்களுடன்…. ராஜீவ் காந்தி கொலை நடந்தபோது மத்தியில் ராஜீவின் ‘எடுபிடி’யான சந்திரசேகர் தலைமை யிலான ஆட்சி நடந்தது. வி.பி. சிங் ஆட்சியைகவிழ்த்த காங்கிரஸ், தனது ஆதரவோடு சந்திர சேகர் தலைமையில் ஒரு பொம்மை ஆட்சியை உருவாக்கியிருந்தது. சந்திரசேகர் ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்தவர் சுப்ரமணியசாமி. ராஜீவ் கொலை நடந்த அடுத்த 6வது நாளில் ஜெக்தீஷ் சரண்வர்மா (ஜெ. எஸ். வர்மா) என்ற உச்சநீதி மன்ற தலைமையில் ஒரு விசாரணை ஆணை யத்தை சந்திரசேகர் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த சுபத்காந்த் சகாய், 1991 மே 27 ஆம் தேதி அறிவித்தார். ராஜீவ் காந்திக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் கோளாறுகள், குறைகள் நடந்தனவா என்பது குறித்து ஆராய்வதே இந்த...

தலையங்கம்: அய்.நா.வில் நிறைவேறிய அமெரிக்க தீர்மானம்

தலையங்கம்: அய்.நா.வில் நிறைவேறிய அமெரிக்க தீர்மானம்

அய்.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை சர்வதேச தமிழர் அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் வரவேற்றுள்ளன. மயிலாடுதுறையில் 29.3.2014 அன்று கூடிய திராவிடர் விடுதலைக் கழக செயலவை, இத் தீர்மானம் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைவிட மேலும் முன்னேற்றம் கண்டிருப்பதை சுட்டிக்காட்டி, வரவேற்றுள்ளது. 2012-2013 ஆண்டுகளில், அய்.நா. வலியுறுத்திய ‘நம்பகத் தன்மையான விசாரணை’யை நடத்தும் தீர்மானத்தை ராஜபக்சே ஆட்சி முற்றிலும் புறந்தள்ளிய நிலையில் இப்போது அய்.நா. மனித உரிமை ஆணையரின் நேரடி கண்காணிப்பு வளையத்துக்குள் இலங்கை கொண்டு வரப்பட்டிருப்பது ஒரு முக்கிய திருப்பம். இதில் இந்தியா மேற்கொண்டுள்ள நிலைப்பாடு தமிழினத்துக்கு இழைத்த துரோகமாகும். மனித உரிமைக் குழுவில் இடம் பெற்றுள்ள 47 நாடுகளில் 23 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தும், கியூபா, ரஷ்யா, சீனா, வெனிசுலா, மாலத்தீவு, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்துள்ளன. ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கிய 12 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உண்மையில் இந்தியா நடுநிலை...