Tagged: விசாகப்பட்டிணம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார் ஆந்திராவில் ‘இராவண விழா’

ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் அகில இந்திய தலித் உரிமைகள் அமைப்பு ஆண்டுதோறும் இராவணன் விழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ‘இராவண விழா’ அக்டோபர் 9ஆம் தேதி விசாகப்பட்டினத்திலுள்ள ‘அம்பேத்கர் பவனில்’ எழுச்சி யுடன் நடந்தது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு விருந் தினராகப் பங்கேற்று, தமிழ் நாட்டில் பெரியார் நடத்திய இராமாயண எதிர்ப்பு இயக்கங்களின் வரலாறுகளையும் ‘இராமன்’ எரிப்புப் போராட்டம் மற்றும் ‘இராமலீலா’வுக்கு எதிராக நடத்திய ‘இராவண லீலா’ நிகழ்வுகளையும் விவரித்து விரிவாக ஆங்கிலத்தில் பேசினார். கழகத் தலைவர் உரையை தெலுங்கு மொழியில் பேராசிரியர் பிரக்ஞா மொழி பெயர்த்துக் கூறியபோது கூட்டத்தினர் பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சுருக்கம். “இராம லீலா நடைபெறும் தருணத்தில் இராவணனின் மேன்மையைக் குறித்து பேச இங்கு கூடியிருக்கும் நம்மிடையே மூன்று கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக, இராமாயணம் என்பது வெறுமனே ஒரு கற்பனைக் கதை மட்டுமே என்பதை...