Tagged: விக்னேசுவரன்

ஈழத்தில், மீண்டும் எழுகிறார்கள் தமிழர்கள்!

யாழ்ப்பாணத்தில் செப்.24 அன்று ‘எழுக தமிழ்’ என்ற எழுச்சிப் பேரணியை பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு நடத்தியிருக்கிறார்கள். வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன் உருவாக்கிய அரசியல் சார்பற்ற ‘தமிழ் மாநிலக் குழு’ என்ற அமைப்பின் சார்பில் அவரே தலைமையேற்று வழி நடத்திய பேரணி இது. இதில் ஈபி.ஆர்.எல்.எஃப். டெலோ, புளோட் உள்ளிட்ட அமைப்புகளின்  அரசியல் பிரிவுகளைச் சார்ந்த அனைவரும் பங்கேற்றனர். தமிழ் தேசிய கூட்டணியில் சம்பந்தம் தலைமை யிலான ஒரு பிரிவினர் மட்டும் பங்கேற்க வில்லை. 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு மக்கள் ஆளும் சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்து வெளிப் படையாக போர்க்குரல் எழுப்பி வெளியே வந்திருக்கிறார்கள் என்ற அளவில் இந்தப் பேரணி முக்கியத்துவம் பெறுகிறது. தமிழர் பகுதி இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் சூழலில் மக்களின் இந்தப் போராட்டக் குரல் அந்த மக்களின் விடுதலை உணர்வுத் தீ அணைந்து விடவில்லை என்பதை உலகுக்கு அறிவித்திருக்கிறது. பேரணியின் இறுதியில் வெளியிடப்பட்டுள்ள பிரகடனங்கள் மிகவும் முக்கியமானதாகும்....

தலையங்கம்: கமலேஷ் சர்மா நடத்தும் காமன்வெல்த் மாநாடு

தலையங்கம்: கமலேஷ் சர்மா நடத்தும் காமன்வெல்த் மாநாடு

கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்று, இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைப் பேச வேண்டுமே தவிர, அதைப் புறக்கணிப்பது சரியாகாது என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. முள்ளி வாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகு இலங்கை அரசு, தனக்குத் தானே நியமித்துக் கொண்ட ‘கற்ற பாடம்; சமாதானப்படுத்தல்’ என்ற விசாரணை ஆணையம் – ஆண்டுகள் ஓடியும் எந்த விசாரணையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. 13 ஆவது சட்டத்திருத்தத்தில் மாகாண கவுன்சில்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலஉரிமை மற்றும் காவல்துறையை அமைத்துக் கொள்ளும் உரிமைகளையும் நீதிமன்றம் வழியாக இலங்கை அரசு பறித்துக் கொண்டது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பும் முறியடிக்கப்பட்டுவிட்டது. சிங்களர்களின் இன வெறியை திருப்திப்படுத்துவதே இலட்சியமாகக் கொண்டு செயல்படும் ஒரு ஆட்சியிடம் இனியும் பேசுவதற்கு என்ன இருக்கிறது? வடக்கு மாகாணத்தின் முதல்வராக தமிழர்களால் தேர்வு செய்யப்பட்ட விக்னேசுவரன், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று கூறும்போது, தமிழகத்தில் மட்டும் ஈழ ஆதரவாளர்கள்...