Tagged: வள்ளலார்

சைவத்தையும் ஆரியத்தையும் எதிர்த்தவர் வள்ளலார்

திராவிடர் விடுதலைக் கழகம் கடந்த 24.12.2016, பெரியார் நினைவு நாளன்று “திரு மூலர், வள்ளலார், பெரியார் வழியில் – வேத மரபு மறுப்பு மாநாட்டை” நடத்தியது. “வேத மரபை மறுப்போம்! வெகு மக்கள் உரிமைகளை மீட்போம்!” என்ற முழக்கத்துடன் கூட்டப்பட்ட அம்மாநாட்டில் தமிழ்ச் சூழலில் வேத மரபு மறுப்பு என்பது எத்தனை ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை விளக்கும் பல்வேறு தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நெறியாள்கை யில் காலையில் நடந்த கருத்தரங்கத்தில் “வள்ளலாரின் சன்மார்க்கத்தில் வேத மரபு மறுப்பு” என்ற தலைப்பில் பூங்குழலி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். வள்ளலார் கடவுள் மறுப்பாளர் அல்ல. ஆனால் கடவுள் மறுப்பாளரான பெரியாரே அங்கீகரித்து பதிப்பித்துப் பரப்பக் கூடிய அளவுக்கு வள்ளலாரின் ஆறாம் திருமுறையில் என்னதான் இருந்தது என்ற கேள்வி எழுந்தது. அதைப் புரிந்து கொள்வதற்கு முன் நாம் வள்ளலார் வாழ்ந்த காலத்தின் சமயச் சூழலைப்...

வேத மரபு மறுப்பு மாநாடு சேலம் 24122016 தீர்மானங்கள்

24-12-2016 அன்று சேலத்தில் ,சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில் ‘வேத மரபு மறுப்பு மாநாட்டில்’  நிறைவேற்றப்பட்ட தீர்மானம். வேதங்கள் – பகவத்கீதை – மனுஸ்மிருதி அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட வேத மரபு – பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழரின் திருக்குறள் மரபுக்கு எதிரானதாகும். வேதங்கள் உருவான காலத்திலிருந்து அதற்கு எதிர்ப்புகளும் தோன்றிவிட்டன. பார்ப்பனீயம் இந்த எதிர்ப்புகளை சாதுரியமாக வீழ்த்தியிருப்பதை வரலாறுகள் உணர்த்துகின்றன. சார்வாகர் – சமணர் –  புத்தர் – சித்தர்கள் – வடலூர் வள்ளலார் போன்று பலரும் போர்க் கொடி உயர்த்தி இருக்கிறார்கள். இறுதியாக வேதமதமாகிய பார்ப்பன மதம் பிரிட்டிஷ் ஆட்சியைப் பயன்படுத்தி ‘இந்து’ என்ற வலைக்குள் வெகு மக்களை நிர்பந்தமாக  உள்ளிழுத்துக் கொண்டது. இதன் வழியாக சமூக அதிகாரங்களை தனது வசமாக்கிக் கொண்டு அதனூடாக தன்னை அரசியல் அதிகார சக்தியாகவும் மாற்றிக் கொண்டது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி –...

சங்கராச்சாரியுடன் வாதிட்ட வள்ளலார்

சங்கராச்சாரியுடன் வாதிட்ட வள்ளலார்

இறந்து போன காஞ்சி சீனியர் சங்கராச்சாரிக்கும் வள்ளலாருக்கும் ‘சமஸ்கிருதம்’ தொடர்பாக நேரடி மோதல் நடந்த வரலாறும் உண்டு. ஒரு முறை வள்ளலார், காஞ்சி சங்கராச்சாரியை சந்திக்கச் சென்றபோது ‘சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கும் தாய்’ என்று சங்கராச்சாரி ஓங்கி அடித்துப் பேசியிருக்கிறார். அங்கேயே இதை ஏராளமான ஆதாரங்களைக் கொண்டு வள்ளலார் அவரிடம் மறுத்து வாதாடியிருக்கிறார். வள்ளலார் வரலாற்றை எழுதியுள்ள ‘சன்மார்க்க தேசிகன் என்ற ஊரன் அடிகள்’ நூலில் இந்த நிகழ்வை பதிவு செய்திருக்கிறார். ‘சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி என்று நீங்கள் கூறினால் தந்தை மொழி தமிழ் தான் என்று நான் கூறுவேன். தமிழ் இல்லாவிட்டால் பிறமொழிகள் வந்திருக்காது’ என்று பதிலடி தந்திருக்கிறார் வள்ளலார்.  ஊரன் அடிகள் அந்த சம்பவத்தை இவ்வாறு எழுதுகிறார். “ஆரிய அரசன் பிரகத்தனுக்கு – தமிழ் அறிவுறுத்துவான் வேண்டிக், கபிலன் குறிஞ்சிப் பாட்டினைப் பாடியதைப் போல் ஆரியமொழி மட்டுமே நன்கு உணர்ந்த சங்கராச்சாரிக்கு தென்மொழி, வட மொழி என்ற...