Tagged: வர்தா புயல்

மறுவாழ்வு ஆணையருக்கு தமிழீழ ஏதிலியர் உரிமை கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை

அய்யா!       வணக்கம். அண்மையில் வந்துபோன வர்தா புயல் தந்த பாதிப்புகளை நீங்கள் அறிவீர்கள். அரசு உடனடி நடவடிக்கைகள் செய்ததும் சென்னை மாநகராட்சி தொய்வின்றிச் செய்யும் பணிகளும் நம்மை மீட்டுள்ளன.  முழுமையாக மீளவேண்டியுள்ளது என்பது வேறு செய்தி.        புலம்பெயர்ந்து இங்கே வாழ்ந்து வரும் ஈழத் தமிழரின் முகாம்கள் எந்த நிலையில் உள்ளன என்பதை நீங்கள் இந்நேரம் அறிந்திருக்கக் கூடும்.எவ்வித  மீட்புப்  பணிகளும் குறிப்பாக கும்முடிப்பூண்டி முகாமில் நடைபெறவில்லை என்பதை உங்கள் கவனத்திற்குக்  கொண்டு வர விழைகிறோம்.        இப்போதுவரை அங்கே மின்சாரம் மருந்துக்கும் இல்லை. அதனால் தண்ணீரை மேலேற்ற முடியவில்லை. குடிப்பதற்கோ கழுவிக்கொள்வதற்கோ  தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். சில தன்னார்வலர்கள் உதவியால் ஏதோ அடிப்படைத் தேவைகளை சிக்கனமாய் நிறைவு செய்துகொள்ளும் அவலநிலை. இரவெல்லாம் இருண்ட வனவாழ்வு வாழ்கின்றனர். மரங்கள் வீடுகள் மேல் விழுந்ததை அப்புறப்படுத்த அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத் தரப்பில் எவ்வித முயற்சியும் இல்லை....

”புயலில் அழிந்த ஈழத் தமிழர் முகாம் மீட்டெடுக்க தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் !”

அன்பிற்குரியீர்! வணக்கம். வர்தா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. இன்னும் சென்னை மக்கள் வாழ்வு முழுமையாக மீண்டுவிடவில்லை. புயல் கடந்த அடுத்த நாளிலிருந்து மீட்புப் பணிகள் சென்னையெங்கும் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது. இன்னும் சீராகாதது புயல் வேகத்தின் அளவை நமக்கு உணர்த்துவதாகவே உள்ளன. அப்படி ஒரு நாளில் நம் வாழ்வை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டது வர்தா புயல். அரசு வேரோடு சரிந்த மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தி வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக மின்சாரத்தை தர முயற்சிக்கிறது. நமக்கு இப்படி எல்லாமும் முழுமையாக இல்லாவிட்டாலும் நடந்து கொண்டுள்ளன. ஆனால் ஈழத் தமிழர் முகாம்களின் நிலை முற்றிலும் வேறாக உள்ளது. புயல் வந்து போய் ஒரு வாரமாகியும் இப்போது வரை கும்முடிப்பூண்டி ஈழத் தமிழர் முகாமில் எந்தப் பணியையும் இதுவரைக்கும் அரசு நிர்வாகம் தொடங்கவேயில்லை. கூரைகளாலும் சிமிண்ட் ஓடுகளாலும் வானம் மறைத்த வீடுகள், இன்னும் சரியாகச் சொன்னால் கூடுகள்தான் அவை. அனைத்தும் பெயர்ந்து...