Tagged: ரஞ்சித்

பகுத்தறிவு ‘அம்மா’க்கள் வேண்டும்!

பகுத்தறிவு ‘அம்மா’க்கள் வேண்டும்!

திரைப்பட இயக்குனர் பா. இரஞ்சித், ஜன.11, ‘ஆனந்த விகடனில்’ பெண் விடுதலை குறித்து எழுதிய கட்டுரை யிலிருந்து சில பகுதிகள். நாம் சாதி சமூகமாக இருப்பதில் ஆண்களைப் போலவே பெண் களுக்கான பங்கும் அதிகம். ஆண்கள் சொல்கிற எதையுமே தட்டிக் கழிக்கிற பெண்கள், சாதி, மதம், அடிப்படை யிலான நம்பிக்கைகளை, உணர்வுகளை, சடங்குகளை மட்டும் இன்னமும் தாங்கிப் பிடிக்கிறவர்களாக ஏற்றுக் கொள்கிறவர்களாக இருக் கிறார்கள். அப்பா கண்டிப்பான முறையில் கற்றுத் தருகிற சாதியைவிட, நிதானமாக சாதிக்குக் கொடி பிடிக்கிற அம்மா ஆபத்தானவராக இருக்கிறார். சாதி என்பது தவறானது என்றே தெரிந்தாலும், அதைத் தவறு என்று தன் பிள்ளைகளுக்கு அம்மா உணர்த் தாமல் இருப்பது ஆபத்தானது தான். பகுத்தறிவுள்ள அம்மாக்களால்தான் சாதி, மத, பாலின பேதமற்ற சமூகத்தை உருவாக்க இயலும். * * * பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரி செல்லும் வரை பெண் குறித்த என்னுடைய நம்பிக்கைகள், பார்வைகள் என அனைத்தும் கல்வியும்...

என்னை சுய ஜாதிக்குள் அடைத்து விடாதீர்கள்! ‘நான் ஜாதியற்றவன்’ – ப.ரஞ்சித்

பெரியாரை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள் என்று சிலர் வைக்கும் குற்றச் சாட்டை எப்படி எதிர் கொள்கிறீர்கள்? அம்பேத்கர் குறித்த உரையாடல் எதுவும் இங்கு நிகழவில்லை. இரட்டை மலை சீனிவாசனையும் எம்.சி. ராஜாவையும் இங்கு யாருக்கும் தெரியாது. ஆனால், பெரியார் தமிழ்ச் சமூகத்தில் பெரிதும் அறிமுகமானவர். யாருக்கும் தெரியாதவர்களை ஒரு போட்டோவாகவாவது  அறிமுகப்படுத்த வேண்டுமென எண்ணுகிறேன். அதன் விளைவே  இவர்களின் படங்களை வைத்தது. என் தாத்தா ஒரு  பெரியாரிஸ்ட்தான் . பெரியாரை காண்பிக்கக்கூடாது என்று ஒருபோதும் எண்ணியதில்லை. என் அடுத்த ஸ்கிரிப்டான  ‘சார்பட்டா பரம்பரை’யில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை பெரியாரிஸ்டாகத்தான் எழுதியிருக்கிறேன். படம் வரும்போது தெரியும். எனக்கு பெரியாரைப் பிடிக்கும் என்று எல்லா இடங்களிலும் தொடர்ந்து  சொல்கிறேன். எனக்கு  திராவிட இயக்கங்கள் மீது விமர்சனம் உண்டு. ஆனால் பெரியார் மீது ஒரு விமர்சனமும் கிடையாது. சரியான வாய்ப்பு வரும் போது இதைப் புரிந்து  கொள்வார்கள் என நம்புகிறேன். சமூக வலைத்தளங்களில் கபாலியை ஒட்டி உங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் வரும் விமர்சனங்களை எப்படிப்...