‘யோகா’வை முன்னிறுத்தி மதப் பிரச்சாரமா?
‘யோகா’வை சர்வதேச அளவில் அங்கீகரிக்கச் செய்து விட்டதில் மோடிக்கு அப்படி ஒரு பெருமை. ஜூன் 21 ‘யோகா நாள்’! மோடி அமைச்சர்கள் அத்தனை பேரும் ஆங்காங்கே ‘யோகா’ செய்யும் நிர்ப்பந்தம். ‘யோகா’ என்பது மூச்சுக் கலை பயிற்சி என்கிறார்கள். இதை ஏற்பதும் ஏற்க மறுப்பதும் அவரவர் விருப்பம் சார்ந்தது. பிரச்சினை எங்கே வருகிறது என்றால், இதை இந்து மதத்தோடு முடிச்சுப் போடும் போதுதான். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இயங்கும் இந்திய தூதரகங்கள், சர்வதேச நாளில் நடத்தும் ‘யோகா’ நிகழ்ச்சிகளுக்கு ‘சங் பரிவார்’ முன்னணி அமைப்புகளுடன் இணைந்து செயல் படுகின்றன. இந்துத்துவ அரசியலுக்கு யோகாவை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் இவர்களின் உள்நோக்கம் மிகவும் அற்பமானது. மோடியின் யோகா குரு எச்.ஆர். நாகேந்திரா. இவர் பெங்களூருவிலுள்ள ‘விவேகானந்தா யோகா அனுசந்தான் சமந்தானா’ என்ற பல்கலைக்கழகத்தின் வேந்தராக வும் இருக்கிறார். அரசு ஆலோ சனைப்படி இவரது தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ‘யோகா’வை பாடத் திட்டத்தில்...