Tagged: யாழ்ப்பாணம்

ஈழத்தில், மீண்டும் எழுகிறார்கள் தமிழர்கள்!

யாழ்ப்பாணத்தில் செப்.24 அன்று ‘எழுக தமிழ்’ என்ற எழுச்சிப் பேரணியை பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு நடத்தியிருக்கிறார்கள். வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன் உருவாக்கிய அரசியல் சார்பற்ற ‘தமிழ் மாநிலக் குழு’ என்ற அமைப்பின் சார்பில் அவரே தலைமையேற்று வழி நடத்திய பேரணி இது. இதில் ஈபி.ஆர்.எல்.எஃப். டெலோ, புளோட் உள்ளிட்ட அமைப்புகளின்  அரசியல் பிரிவுகளைச் சார்ந்த அனைவரும் பங்கேற்றனர். தமிழ் தேசிய கூட்டணியில் சம்பந்தம் தலைமை யிலான ஒரு பிரிவினர் மட்டும் பங்கேற்க வில்லை. 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு மக்கள் ஆளும் சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்து வெளிப் படையாக போர்க்குரல் எழுப்பி வெளியே வந்திருக்கிறார்கள் என்ற அளவில் இந்தப் பேரணி முக்கியத்துவம் பெறுகிறது. தமிழர் பகுதி இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் சூழலில் மக்களின் இந்தப் போராட்டக் குரல் அந்த மக்களின் விடுதலை உணர்வுத் தீ அணைந்து விடவில்லை என்பதை உலகுக்கு அறிவித்திருக்கிறது. பேரணியின் இறுதியில் வெளியிடப்பட்டுள்ள பிரகடனங்கள் மிகவும் முக்கியமானதாகும்....

செப்டம்பர் 24இல் யாழ் நகரில் தமிழர் எழுச்சிப் பேரணி

செப்டம்பர் 24இல் யாழ் நகரில் தமிழர் எழுச்சிப் பேரணி

செப்டம்பர் 24ஆம் தேதி யாழ்ப் பாணத்தில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசின் இன அழிப்புக் கொள்கையை கண்டித்தும் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமைக் கோரியும் மாபெரும் பேரணி நடக்க இருக்கிறது. இந்தப் பேரணியை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன், கஜேந்திர குமார் தலைமையிலான தமிழ்த் தேச மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த சுரேஷ் பிரேம சந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பைச் சேர்ந்த சித்தார்த்தன் மற்றும் தமிழ் சிவில் சமூக அமையம், சர்வ மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், ஊடக வியலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். தமிழர்களின் ஒன்றுபட்ட எழுச்சி மீண்டும் ஈழத்தில் தொடங்கியிருக்கிறது. தமிழர்களின் ஒருங்கிணைந்த உரிமைப் போராட்டம் சிங்கள அரசுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. பெரியார் முழக்கம் 15092016 இதழ்