மூடப்படும் அரசுப் பள்ளிகள்: கொளத்தூர் மணி கண்டனம்
திருநெல்வேலி மாவட் டம் பாவூர் சத்திரத்தில் பெரியார் 138ஆவது பிறந்த நாளான 17.9.2016இல் கல்வியை காவி மயமாக்கும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து கீழப்பாவூர் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத் தின் சார்பில் சார் பதிவாளர் அலுவலகம் அருகே பொதுக் கூட்டம் நடைபெற்றது. கீழப்பாவூர் ஒன்றிய கழகத் தலைவர் குறும்பை அ. மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு பொருளாளர் ந. சங்கர், துணைச் செயலாளர் மூ.சபாபதி முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட கழக அமைப்பாளர் பொ.பெ.சு. அன்பரசு வரவேற்புரையாற்றினார். காவை இளவரசனின் ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்வோடு பொதுக்கூட்டம் தொடங்கியது. நிகழ்வில் நெல்லை மாவட்ட கழகத் தலைவர் பால்வண்ணன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு மற்றும் இராம. உதயசூரியன் (ம.தி.மு.க.), கலிவரதன் (ஆதித் தமிழர் பேரவை), கூ.சு. இராமச்சந்திரன் (தி.மு.க.), டேனியல் (வி.சி.க.), சொ. சு. தமிழினியன் (விசிக) ஆகியோர் உரைக்குப் பின் கழகத் தலைவர்...