தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக 19032017 அன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. உயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் தமிழநாட்டு மாணவர்களின் மர்ம மரணத்திற்கு நீதி வேண்டியும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் மத்திய கைலாஷ் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் 20 மாணவர்கள் கைது
தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் உயர்கல்வி நிறுவனங்களில் தொடரும் தமிழ்நாட்டு மாணவர்களின் மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டியும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் 19032017 அன்று காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும்
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சேலம் கிழக்கு மாவட்ட செய்லாளர் டேவிட் உள்ளிட்ட தோழர்கள், நேற்று மாலை 6-30 மணிக்குடெல்லி ஜவகர்லால் நேரு பலகலைக் கழகத்தில் தற்கொலை செய்ததாகக் கூறப்பட்ட ஆய்வு மாணவர் முத்துகிருட்டிணனின் இல்லம் சென்று அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினர். மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் ஹென்றி திபேன் அவர்களும் அவரது குழுவினருடன் வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஆய்வு மாணவர் சேலம் முத்துகிருட்டிணனன் உடல் இன்று ( 16-3-2017 ) காலை 6-00 மணியளவில் சேலம், அரிசிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு மக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாவட செய்லாளர் டேவிட், மாநகரத் தலைவர் பாலு, செயலாளர் பரமேசு, மூணாங்கரடு சரவணன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் திருச்செங்கோடு வைரவேல், ஆத்தூர் மகேந்திரன் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் காலை 8-00 மணிக்கே மாணவர் முத்துகிருட்டிணன் இல்லம் வந்துவிட்டனர்....