Tagged: மா.வரதராசன்

மா.வரதராசன் நினைவேந்தல் நிகழ்வு

01042016 வெள்ளிக்கிழமை மாலை 5-00 மணியளவில் சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் செட்டியூரில் மறைந்த ‘மா.வரதராசன் நினைவேந்தல் நிகழ்வு’ நடைபெற்றது. காவலாண்டியூர் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு ஒன்றிய செயலாளர் க.ஈசுவரன் தலைமை ஏற்றார். காவலாண்டியூர் சித்துசாமி, கொளத்தூர் ஒன்றிய குழு துணைத்தலைவர் சி.சுந்தரராசன் (அ.தி.மு.க), அஞ்சல் துறை சிக்கப்பசெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள், மா.வரதராசன் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை ஆற்றினார். மேலும் கண்ணாமூச்சி ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.பழனிசாமி, எல்.ஐ.சி. முகவர் ரகுபதி, தி.முக. விவசாய அணி ஒன்றிய செயலாளர் தேவராசன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன், ஈரோடு மாவட்ட தலைவர் நாத்திகஜோதி, கழக செயற்குழு உறுப்பினர் சக்திவேல் ஆகியோரும் நினைவேந்தல் உரை ஆற்றினார்கள். இறுதியாக மறைந்த ‘மா.வரதராசன் அவர்களின் தகப்பனாரும், கழகத் தோழருமான மாரி (எ) மாரியப்பன்...