Tagged: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”

“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வே. மீனாட்சி சுந்தரம், ‘மார்க்சிஸ்ட்’ ஏப்ரல் மாத இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். “பகுத்தறிவு சித்தாந்தமும் – தி.மு.க., அ.தி.மு.க. சீரழிவும்” என்பது அக்கட்டுரை தலைப்பு. இக்கட்டுரை பெரியார் நடத்திய சமுதாயப் போராட்டத்தின் தாக்கம் குறித்து விவாதிக்கிறது. மறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ‘தோழர் ஏ.பி.’ என்று அழைக்கப்பட்ட ஏ.பாலசுப்பிரமணியம், பெரியார் இயக்கம் குறித்து கொண்டிருந்த மதிப்பீடுகளை இக்கட்டுரை பதிவு செய்கிறது. மார்க்சியம் – பெரியாரியத்தை காலத்தின் தேவைக்கேற்ப உள்வாங்கிக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் வற்புறுத்துகிறது.  முக்கியத்துவம் கருதி, கட்டுரையின் ஒரு பகுதியை இங்கு வெளியிடுகிறோம்.  வாசிப்பை எளிமையாக்க, ஆங்காங்கே கருத்துச் சிதையாமல் சொற்றொடர்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.  (ஆர்) பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 1857-58 சிப்பாய் எழுச்சிக்குப் பிறகு தங்களது நிர்வாக முறையில் மாற்றம் கொண்டுவர இந்திய அரசாங்க சட்டம் என்ற தலைப்பில் ஒரு சட்டமியற்றினர் அன்றைய விக்டோரியா மகாராணியின் மீது இந்திய...

ஜாதி எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை என்ன?

ஜாதி எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை என்ன?

கல்கத்தாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாட்டில் கட்சியின் எதிர்கால செயல் திட்டங்களில் ‘ஜாதி ஒடுக்குமுறை களுக்கு முன்னுரிமை தரப்படும்’ என்ற கருத்தை, பிரகாஷ் காரத், கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் வலியுறுத்தி யுள்ளது வரவேற்கத்தக்க ஒரு திருப்பம். இந்தியாவில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பொருளாதாரச் சுரண்டல் – சமூக ஒடுக்குமுறை என்ற இரண்டு பிரச்சினை களையே மய்யம் என்று தீர்மான நகல் கூறுகிறது. சமூக ஒடுக்குமுறை என்று பார்த்தால் பெண்கள், தலித், பழங்குடி யினர் மற்றும் மத அடிப்படையிலான மைனாரிட்டிகள் மீது காட்டப்படும் பாகுபாடுகள் என்று சீத்தாராம்யெச்சூரி விளக்கமளித்துள்ளார். அதே நேரத்தில், ஜாதி அமைப்புக்கு எதிரான கருத்தியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு தெளிவாக்கப்படவில்லை.  ஜாதிய பாகுபாடுகள் – ஒடுக்குமுறைகள் குறித்து மட்டுமே நகல் தீர்மானம் பேசுகிறது. இன்னும் ஒரு நிலைக்கு மேலே போய் சீத்தாராம் எச்சூரி, கட்சியின் நிலையை இவ்வாறு தெளிவுபடுத்தியிருக்கிறார். “பொருளாதார அதிகாரத்தை...

உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் பார்ப்பனர்களின் தீண்டாமை

உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் பார்ப்பனர்களின் தீண்டாமை

நாட்டின் பெரிய கோயில்கள் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டின் கீழ்தான் செயல்படுகின்றன. கோயில் வழிபாட்டு முறைகளை தீர்மானிக்கிறவர்கள் பார்ப்பனர்கள்தான். தமிழ்நாடு கோயில்களில் உரிய ஆகமப் பயிற்சி பெற்ற எவரும் கருவறைக்குள் நுழையும் உரிமை பார்ப்பனர்களால் இன்று வரை மறுக்கப்பட்டே வருகிறது. ஆனால், கேரளாவில் இப்படி ஒரு தடை இல்லை. தமிழ்நாட்டில் 1971 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் நீதிபதி மகராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட சைவ வைணவ மதத் தலைவர்கள் இடம் பெற்ற குழு பரிந்துரை செய்த பிறகும் கடந்த முறை தி.மு.க. ஆட்சியில் மீண்டும் ஒரு முறை நிர்வாக ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகும் பார்ப்பனர்கள் கருவறைக்குள் தாங்கள் மட்டுமே நுழைந்து பூஜை செய்ய முடியும். ‘சூத்திரர்’ நுழைந்தால் தீட்டு என்று சாதிக்கிறார்கள். இது மத சுதந்திர உரிமையில் குறுக்கிடுவதாகும் என்று உச்சநீதிமன்றம் வரை போய் தடை ஆணை வாங்கி விட்டார்கள். பக்தி மார்க்கத்தில் ஊறித் திளைத்திருக்கும் சொரணையுள்ள ‘தமிழர்’...