Tagged: மாநில சுயாட்சி

வரலாறு ஒரே ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சி மொழியானது இந்தி

  மத்திய பா.ஜ.க ஆட்சி இந்தித் திணிப்பை தீவிரமாக்கி வரும் நிலையில் இந்த வரலாற்றுப் பின்னணியை அரசியல் நிர்ணயசபையில் நடந்த விவாதங்களை விளக்குகிறது. இந்தக் கட்டுரை; கட்டுரையை படிப்பதற்கு முன் சில விளக்கங்கள் தேவைப்படுகிறது. இந்தியா “சுதந்திரம்“ பெறும் 1947 ஆகஸ்ட் 15க்கு முன்பே 1946ம் ஆண்டிலேயே அரசியல் நிர்ணயசபை அமைக்கப்பட்டுவிட்டது. இந்த அரசியல் நிர்ணயசபையில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் யார்? 1935ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியர்களுக்காக ஒரு அரசியல் கூட்டத்தை தயாரித்து அதனடிப்படையில் தேர்தல்களை நடத்தியது. அந்தத் தேர்தலில் அனைத்து குடிமக்களுக்கும் வாக்குரிமை கிடையாது சொத்து-கல்வி அடிப்படையில் நூற்றுக்கு 14 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து தேர்ந்தெடுத்து நாடாளுமன்றம் அப்படியே அரசியல் நிர்ணயசபையாக மாற்றப்பட்டது. இதில் பெரும்பான்மை எண்ணிக்கையில் இடம் பெற்றிருந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர்; 1946ம் ஆண்டில் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணயசபை அரசியல்சட்டத்தைதயாரித்து -1949ம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் அரசியல் நிர்ணயசபையின் ஒப்புதலைப் பெற்றது. அரசியல் நிர்ணயசபையின் தலைவர்...

அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதம் ஆளுநர்கள் மய்ய அரசின் கங்காணிகள்

தமிழ்நாட்டில் இப்போது ஆளுநராக இருப்பவர் செயல்பாடு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. அரசியல் நிர்ணய சபையில் ஆளுநர் பதவி குறித்து கடும் விவாதங்கள் நடந்துள்ளன. முரசொலி மாறன் எழுதிய ‘மாநில சுயாட்சி’ நூலிலிருந்து சில பகுதிகள்: கவர்னரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். குடியரசுத் தலைவர் நியமிக்கிறார் என்றால் பிரதமர் நியமிக்கிறார் என்று பொருள். பிரதமர் நியமிக்கிறார் என்றால் மத்திய அரசை ஆளுகின்ற கட்சி அப்படி முடிவு எடுக்கிறது என்று பொருள். அரசியல் நிர்ணய சபை எடுத்த எடுப்பிலேயே இந்த முடிவுக்கு வந்து விடவில்லை. பலவித முடிவுகளை அலசி ஆராய்ந்து, இறுதியில் இப்படி நியமனம் செய்யும் முடிவுக்கு வந்தது. அவற்றையெல்லாம் ஆராய்ந்தால், கவர்னர் பதவியை நியமனப் பதவி யாக்கியதன் உள்நோக்கம் நன்கு புலப்படும். அரசியல் நிர்ணய சபையின் துவக்கக் காலத்தில், வயது வந்தோருக்கு வாக்குரிமை என்கிற அடிப்படையில் மாநிலத்து வாக்காளர்கள் அனை வரும் பெரும்பான்மை வாக்குகளால் அந்த மாநிலத்து கவர்னரைத் தேர்ந் தெடுக்கலாம்...