Tagged: மாட்டுக்கறி அரசியல்

மாட்டுக்கறி அரசியல் – மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் ! சேலம் 12052017

கருத்துரிமை உணவு உரிமைக்கு தடை போடும் தமிழ்நாடு காவல்துறையை கண்டித்து இன்று 12052017 காலை 11 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காவல் துறையின் தடையை மீறி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் தடையை மீறி மாட்டுக்கறியை சாப்பிட்டார்கள். போராட்டத்தின் போது தோழர் கொளத்தூர் மணி பேச்சு போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களை காவல்துறை கைது செய்தது. இப்போராட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி, கழக பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் டேவிட், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், அமைப்பாளர் டைகர் பாலன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வைரவேல், மாவட்ட செயலாளர் சரவணன்,...

மாட்டுக்கறி அரசியல் – சேலம் 12052017

அன்பார்ந்த தோழர்களே! 23-4-2017 அன்று கொளத்தூரில் மாட்டுக்கறி அரசியல், மாட்டுக்கறி விருந்து என்றறிவித்தோம்; அனுமதி மறுப்பு என்றது காவல்துறை. 2-5-2017 அன்று ஈரோட்டிலதே நிகழ்வு. நாம் அனுமதி கேட்கவில்லை; பாதுகாப்பு மட்டும் கேட்டோம். ஆனாலும் அனுமதி இல்லை என்றது காவல்துறை; உயர்நீதி மன்றமோ அடுத்த மாதம்தான் விசாரிப்பேன் என்கிறது. 12-5-2017 அன்று சேலத்திலும் அதே நிகழ்வு. பாதுகாப்பு மட்டுமே கேட்டிருந்தோம். அனுமதி இல்லை என்று கூறிவிட்டது காவல்துறை. அரசியல் சட்டத்தின் 48ஆவது பிரிவு நேரடி சட்டம்கூட இல்லை; வெறும் வழிகாட்டும் நெறிமுறை மட்டும்தான். அப்பிரிவு “பால் கொடுக்கும் பசுக்களையும், பாரம் இழுக்கும் எருதுகளையும், இளங்கன்றுகளையும் வெட்டுவதை வேண்டுமானால் – தடை செய்ய விரும்பினால் – மாநில அரசுகள் சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்றுதான் கூறுகிறது. நாமோ பால் கொடுக்காத, விவசாய வேலைக்குப் பயன்படாத மாட்டின் கறியைத்தான் உண்ணப்போகிறோம் என்பதை தெளிவாக – அடிமடையன் கூட புரிந்துகொள்ளும் வகையில் நமது பாதுகாப்பு கோரும்...