Tagged: மருத்துவ கல்லூரி நுழைவுத் தேர்வு
குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம். சார்பாக நீட் தேர்வைக் கண்டித்து தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் 4.3.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாவட்டச் செயலாளர் தமிழ்மதி தலைமை தாங்கினார். நீதி அரசர் (தலைவர். பெ.தொ.க) முன்னிலை வகித்தார். விஸ்ணு வரவேற்புரை நிகழ்த்தினார். பால் பிரபாகரன் (கழக பரப்புரைச் செயலாளர்) கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி தோழர்கள் மேசியா (ப.நா.புரம்), போஸ் (சமூக ஆர்வலர்), முரளீதரன் (பொது பள்ளிக்கான மாநில மேடை செயலாளர்), இரமேஷ், இராஜேஷ் குமார், இராதா கிருஷ்ணன், ஜான் மதி, சூசையப்பா, அனி ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர்கள் அனைவரும் மோடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை முழங்கினர். மஞ்சு குமார் நன்றியுரையுடன் முடிந்தது. பெரியார் முழக்கம் 09032017 இதழ்
குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக நீட் தேர்வைக் கண்டித்து தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது. மாவட்டச் செயலாளர் தோழர் தமிழ் மதி தலைமைத் தாங்கினார். தோழர் நீதி அரசர் (தலைவர் பெ.தொ.க) முன்னிலை வகித்தார். தோழர் விஸ்ணு வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் பால் பிரபாகரன்,கழக பரப்புரைச் செயலாளர் கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தோழர்கள் மேசியா (ப.நா.புரம் ச.ம.தொ.செயலாளர்,வி.சி.க,) போஸ் (சமூக ஆர்வலர்) முரளீதரன் (பொது பள்ளிகான மாநில மேடை செயலாளர்) தோழர்கள் இரமேஸ், இராஜேஸ் குமார், இராதா கிருஸ்ணன் MCUP(I), ஜாண் மதி, சூசையப்பா, அனி ஆகியோர் கலந்துக் கொண்டனர். தோழர்கள் அனைவரும் மோடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை ஆவேசத்துடன் முழங்கினர். தோழர் மஞ்சு குமார் நன்றியுரையுடன் முடிந்தது. ட
மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்யக் கோரியும், தனியார் பள்ளிகளில் 25ரூ இட ஒதுக்கீட்டை முழுமையாக நடை முறைப்படுத்தவும், பள்ளிகளில் சமஸ்கிருத திணிப்பை கைவிடக் கோரியும். தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் மாநில அமைப்பாளர் பாரி சிவக்குமார் தலைமையில் 7.7.2016 அன்று காலை 10.30 மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ஆளுநர் மாளிகை அருகே திரண்ட தோழர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர் பின்னர் ஊர்வலமாக சென்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்ட மாணவர்கள் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். இப் போராட்டத்தில் தமிழ்நாடு மாணவர் கழக சென்னை மாவட்ட அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ், விவேக், பல்லடம் மதிவாணன், மயிலாடுதுறை கார்த்திக், மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளை சேர்ந்த பாரி மைந்தன், பார்வைதாசன், பகலவன், ரம்யா, கலை, செம்பியன் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம்...