Tagged: மயிலாப்பூர்

நடைபாதை பூங்கா நிறுத்தம்: கழகத்தின் கோரிக்கை வெற்றி!

நடைபாதை பூங்கா நிறுத்தம்: கழகத்தின் கோரிக்கை வெற்றி!

சென்னை மயிலாப்பூர் ஒரு வழிப்பாதையாக உள்ள லஸ் சாலையின் நடுவே 15 அடி அகலத்தில் நடைபாதை அமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 80 அடி அகலத்தில் உள்ள இந்த சாலையில் ஏற்கனவே, இரு புறங்களிலும் தலா 12 அடியில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்போது, சாலையின் நடுவே நடைபாதை பூங்கா அமைப்பதால் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இத்திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் மார்ச் 6ஆத் தேதி, மண்டல உதவி ஆய்வாளரிடமும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மார்ச் 8ஆம் தேதியும் சந்தித்து மனு அளித்தனர். கழகத்தின் கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சி நடைபாதை பூங்கா அமைக்கும் பணியை நிறுத்தி விட்டது. கழகத்தின் முயற்சிக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர். பெரியார் முழக்கம் 24032016 இதழ்

மயிலாப்பூர் லஸ் சந்திப்பில் நடைபாதை ஆக்ரமிப்பை எதிர்த்து மனு

தனியார் பள்ளிக்கு ஆதரவாக சென்னை மாநகராட்சியே ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தக் கோரி சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் சென்னை மேயர் அலுவகத்தில் மனு ! நேற்று 08.03.2016 அன்று மயிலாப்பூரில் மாநகராட்சியே மேற்கொள்ளும் நடைபாதை ஆக்ரமிப்பிற்கு எதிராக திவிக சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன் தலைமையில் சென்னை கழக தோழர்கள் மேயர் அலுவலகம் சென்று அந்த பணியை நிறுத்தக்கோரி மனு தந்தனர். கழக தோழர் செந்தில் அவர்கள் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்