Tagged: மயக்கப் புலன்

படித்தவர்களை ஏன் ‘பேய்’ பிடிப்பதில்லை?

பேய், பிசாசு உண்மையா? அறிவியல் ரீதியான ஒரு அலசல். பேய், பிசாசு, ஆவிகளை அச்சத்தால் மக்கள் நம்புகிறார்கள். பூசாரிகளைக் கொண்டு அவற்றை விரட்ட முயல்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டவர்கள், பிறரால் கொல்லப்பட்டவர்கள், விபத்தால் இறந்தவர்கள் ஆகியோரே பேயாக, ஆவியாக உலவுவதாகப் பொதுவாக நம்பப்படுகிறது. விபத்தால் அல்லது உணவுக்காக கொல்லப்படும் ஆடுகள், கோழிகள், மாடுகள் போன்ற பிராணிகள் ‘ஆவியாக, பேயாக’ உலவுவதாகப் பொதுவாக யாரும் அதேபோல் நம்புவதில்லை. கொல்லப்படும் தாவரங்கள் பேயாக, ஆவியாக உலவுவதாக யாரும் நம்புவதில்லை. இந்தப் பேய், பிசாசு, ஆவிகள் யாரை தொந்தரவு செய்கின்றன தெரியுமா? படித்த அய்.ஏ.எஸ். அதிகாரிகளை, அய்.பி.எஸ். அதிகாரிகளை, மருத்துவர்களை, பொதுவாக படித்த ஆண்களை தொந்தரவு செய்வதில்லை. அதேபோல் பார்ப்பன ஆண்களையும் பெண்களையும் தொந்தரவு செய்வதில்லை. இன்று வரை இவர்களையெல்லாம் ஏன் பேய், பிசாசு, ஆவிகள் தொந்தரவு செய்யவில்லை என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதே “பேய், பிசாசு, ஆவிகள், கிராமப்புற மக்களை அதிலும் படிப்பு...