இராஜஸ்தான் உயர்நீதிமன்ற வாயிலில் டிச.6இல் ‘மனு’ கொடும்பாவி எரிப்பு
“செத்த மாடுகளை புதைக்க மாட்டோம்; பிணங்களை எரிக்க மாட்டோம்; சாக்கடைக் குழிக்குள் இறங்க மாட்டோம்” என்று குஜராத்தில் தலித் மக்கள் கிராமம் கிராமமாக நடத்தும் பயணம் மிகப் பெரும் தாக்கத்தை உருவாக்கி வருகிறது. ஜிக்மேஷ் மேவானி, சுபோத் பார்மர் எனும் இரண்டு தலித் இளைஞர்கள் இந்த புரட்சிக்கு தலைமை தாங்கி வழி நடத்துகிறார்கள். பயணத்தின் அடுத்த கட்டமாக ‘மனு சாஸ்திரம்’ என்ற பார்ப்பனிய கொடூர சட்டத்தை வழங்கிய ‘மனு’வின் உருவ பொம்மைக்கு தீ வைத்து எரிக்கும் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதி ஜெய்ப்பூரில் பல்லாயிரம் தலித் மக்கள், இஸ்லாமியர்கள், விவசாயிகள் திரண்டு ‘மனு’வின் உருவத்தை தீயிட்டு எரிக்கிறார்கள். இராஜஸ்தான் உயர்நீதிமன்ற கட்டிட வாயிலில் பார்ப்பன ‘மனு’வின் சிலை நிறுவப்பட்டுள்ளது. எனவே உயர்நீதிமன்ற அலுவலகத்தில் ‘மனு’வின் சிலைக்கு எதிரே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இத்தகவலை தலித் புரட்சிக்கு தலைமையேற்று நடத்தி வரும் ஜிக்மேஷ் மேவானி, லக்னோவில் செய்தியாளர்களிடையே அறிவித்து, பார்ப்பனிய...