Tagged: மனு

முகநூலில் சாதி வெறியைப் பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு திவிக சார்பில் மனு

முகநூலில் சாதி வெறியைப் பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் மனு ! சமூக வலைத்தளங்களான முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றில் தீரன் சரவணன் குருசாமிக் கவுண்டர் என்ற நபர்,தான் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை என்ற அமைப்பைச் சார்ந்தவர் என்று கூறிக் கொண்டு கொங்கு இனத்தைச் சார்ந்த பெண்களைக் காதலித்தால் பஸ்,லாரியை எற்றிக் கொலை செய்வோம் என்று கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.. மேற்படி நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 29.02.2016 அன்று ஈரோடு கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் சண்முகப்பிரியன்,பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அமைப்பாளார்கள் குமார்,சென்னிமலை செல்வராசு,மாநகரச் செயலாளர் சிவானந்தம், சிவக்குமார்,மோகன்ராஜ்,விடுதலை வேங்கைகள் கட்சி நிறுவனர் தோழர்.தமிழின்பன் ஆகியோர் மனு அளித்தனர் பெரியார் முழக்கம் 10032016 இதழ்

பா.ஜ.க.வின் கல்யாண ராமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு !

பா.ஜ.க.வின் கல்யாண ராமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு ! பாஜக பொறுப்பாளர் கல்யாண ராமன் தொடர்ச்சியாக சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகவும்,கலவரத்தை தூண்டும் விதமாகவும்,பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் விதமாகவும் பேசியும்,சமூக வலை தளங்களில் எழுதி வருவதற்க்காகவும், திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை ஒருமையிலும், திவிக தோழர்களை கும்பல்கள் என்றும் முகநூலில் பதிவுசெய்த பாஜக கல்யாண ராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று (10.02.2016) காலை பதினோரு மணியளவில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன் தலைமையில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அப்போது ஊடகங்களுக்கு பேட்டியளித்த திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி அவர்கள் ”இதுபோன்ற நடவடிக்கைகளை கல்யாணராமன் போன்ற பாஜகவினர் தொடர்ந்தால் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம்’ என தெரிவித்தார்.

சென்னை மாநகர ஆணையரிடம் கழகம் மனு

சென்னை மாநகர ஆணையரிடம் கழகம் மனு

அரசு ஆணைகளை புறந்தள்ளிவிட்டு, காவல் நிலையங்களை ‘இந்து’ வழிபாட்டு இடமாக்கி, ஆயுத பூஜை போடும் மதவாத நிகழ்வை நிறுத்தக் கோரி சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன் தலைமையில் மாநகர ஆணையரிடம் நேரில் தோழர்கள் மனு அளித்தனர். இது தொடர்பாக அரசு வெளியிட்ட ஆணை களையும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.  மாநகர காவல் துறை ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரி கருத்துகளை பொறுமையுடன் கேட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மாவட்டத் தலைவர் வேழ வேந்தன், மாவட்ட செயலாளர் உமாபதி, துணை செயலாளர் சுகுமார், அய்யனார் உள்ளிட்ட தோழர்கள் பலரும் உடன் சென்றனர். பெரியார் முழக்கம் 29102015 இதழ்