Tagged: மடத்துக்குளம் மோகன்

உடுமலை திருமூர்த்தி படகுத் துறையில் கருத்துச் செறிவுடன் நடந்தது இரண்டு நாள் பெரியாரியல் பயிற்சி

திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய இரண்டு நாள் பெரியாரியல் பயிற்சி வகுப்பு ஜூன் 11, 12-2017இல் உடுமலை திருமூர்த்தி மலை படகுத் துறை கிருஷ்ணா விடுதியில் சிறப்புடனும் கருத்துச் செறிவுடனும் கட்டுப்பாடு நேரம் தவறாமையுடன் நடந்தது. பயிற்சியில் 20 பெண்கள் உள்பட 75 இளைஞர்கள் பங்கேற்றனர். நபர் ஒருவருக்கு ரூ.200/- கட்டணம், முன்பதிவு, இரு நாள் பயிற்சிகளிலும் முழுமையாகப் பங்கேற்றல் என்ற ஒழுங்கு முறை விதிகளுடன் நடந்த இந்த பயிலரங்கில் பங்கேற்ற அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் பயிற்சியாளர்களின் கருத்துகளைக் கேட்டு குறிப்புகளை பதிவு செய்து கேள்விகளையும் எழுப்பினர். பயிற்சி பெறும் தோழர்கள், முதல் நாள் இரவே பயிற்சி அரங்குக்கு வந்து சேர்ந்தனர். இதனால் முதல் நாள் பயிற்சி திட்டமிட்டபடி காலை 9 மணியளவில் தொடங்கிவிட்டது. தோழர்கள் அறிமுகத்தைத் தொடர்ந்து முதல் வகுப்பாக பேராசிரியர் சுந்தரவள்ளி, “மதவாத அரசியல்” குறித்து வகுப்பு எடுத்தார். தொடர்ந்து வழக்கறிஞர்...