குற்றவாளிகளே நீதிபதிகளாக முடியாது போர்க் குற்றம்: உள்நாட்டு விசாரணை பயன் தராது!
அய்.நா.வின் மனித உரிமைக் குழு அறிக்கை ஈழத்தில் தமிழர்கள் மீதான போர்க் குற்றங்களை விசாரிக்க கலப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. சிங்கள நீதிபதிகள், சர்வதேச சட்ட நிபுணர்கள் அடங்கியதே கலப்பு நீதிமன்றம். இலங்கை அரசு உள்நாட்டு விசாரணையை மட்டுமே ஏற்க முடியும் என்று பிடிவாதமாக மறுக்கிறது. கடந்த காலங்களில் சர்வதேச விசாரணைக்கு ஆதரவாக இருந்த அமெரிக்கா, இப்போது அய்.நா.வில் முன்மொழிய உள்ள தீர்மானத்தில் இலங்கை அரசின் ஒப்புதலுடன் தான் அமெரிக்காவின் தீர்மானம் இருக்கும் என்று கூறிவிட்டது. உண்மையில் இலங்கை வரலாற்றில் இதுவரை அங்கே நடத்தப்பட்ட எந்த உள்நாட்டு விசாரணையும் முழுமையாக தோல்வியையே சந்தித்து வந்திருக்கின்றன. 1963-லிருந்து 2013 வரை இலங்கையில் ஏறத்தாழ 18 விசாரணை ஆணையங்களை இலங்கை அரசு நியமித்திருக்கிறது. இதில் பெரும்பாலானவை. தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர் பானவை, எந்த ஒரு ஆணையமும் முறையாக செயல்படவில்லை. முதன்முதலாக 1963ஆம் ஆண்டு அன்றைய ‘சிலோன்’ ஆளுநராக இருந்த...