Tagged: போர்க்குற்றம்

வாக்குறுதியை மீறும் இலங்கை அய்.நா. என்ன செய்யப் போகிறது?

வாக்குறுதியை மீறும் இலங்கை அய்.நா. என்ன செய்யப் போகிறது?

2015ஆம் ஆண்டு அய்.நா.வில் இலங்கை அரசே கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இப்போது நினைவுகூர வேண்டும். காமன்வெல்த் நாடுகள், பன்னாட்டு நீதிபதிகளின் பங்கேற்புடன் போர்க் குற்றங்கள் குறித்து ஒரு கலப்பு விசாரணை, தீர்ப்பாயத்தை அமைப்போம் என்பதே அத்தீர்மானம். மனித உரிமை ஆணையத்தில் இடம் பெற்றிருந்த 47 நாடுகளில், இந்தியா உள்ளிட்ட 37 நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்தன. இப்போது பன்னாட்டு விசாரணைக்கு அனுமதிக்க மாட்டோம் என்கிறது இலங்கை. தமிழர்கள் பிரச்சினைக்கு அந்த அரசு மேற் கொள்ள வேண்டிய விசாரணை ஆணையம் நியமித்தல், இராணுவத்தைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட தீர்வுத் திட்டங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க 18 மாதங்கள் அய்.நா. காலஅவகாசம் தந்தது. இப்போது பிப்.24 முதல் மார்ச் 27 வரை நடைபெறவிருக்கும் அய்.நா. கூட்டத்தில் அப்படி ஒரு அறிக்கையை தாக்கல் செய்யாமல், மேலும் தங்களுக்கு கால அவகாசம் கேட்கிறது இலங்கை. தமிழர் பிரச்சினையை தள்ளிப் போட்டுக் கொண்டே போக வேண்டும் என்பதே இதில்...