வானியல் அறிவு: அன்றும் இன்றும்
இதுவொரு நுணுக்கமான விஷயம். நமது முன்னோர்கள் வானத்தைக் கூர்ந்து கவனித்து வந்திருக்கிறார்கள். தினசரி மாறும் காட்சியையும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு முன்பு கண்ட காட்சியே மீண்டும் தோன்றுவதையும் அவர்கள் ஆச்சரியத்தோடு நோக்கியிருக்கிறார்கள். அதிலிருந்து நாள்காட்டி (calendar) ஒன்றை உருவாக்கவும் அவர்களால் முடிந்தது. பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் ஒரு நீள் வட்டப் பாதையில் (Ecliptic) சுற்றி வருகிறது. இதற்கு அது 12 மாதங்களை எடுத்துக் கொள்கிறது. அந்தக் காலத்தில் சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் அதற்கான காலம் 12 மாதங்கள் என்பதை அறிந்திருந்தனர். சந்திரனைப் பொறுத்த வரை பிரச்சினை இல்லை. இதே தளத்தில் அதுதான் பூமியைச் சுற்றி வருகிறது. இதற்கு அது எடுத்துக்கொள்ளும் காலம் 27 நாட்கள். சூரியனை பூமி சுற்றி வரும் நீள் வட்டப் பாதையை ஒட்டியுள்ள ஒரு பகுதியைத்தான் zodiac என்கிறார்கள். ‘இது நாமே கற்பிதம் செய்து கொள்கிற பகுதி’ (lntroducingAstronomy-j.B.Sidgwick ) என்கிறார்கள்...