Tagged: பெரியார் முழக்கம் 28112013 இதழ்

சலிப்பற்ற சுயமரியாதைத் தொண்டு

சலிப்பற்ற சுயமரியாதைத் தொண்டு

என்ன காரணத்தாலோ நாம் சவுக்கியமாக உயிர் வாழ்கின்றோம். எப்படியோ உயிர் வாழ்வுக்கு மற்ற எவருடைய தயவையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லாத நிலைமையில் இருந்து வருகின்றோம். மனிதனுக்கு இந்த இரண்டு காரியந்தான் மேலான சம்பத்து ஆகும். அதாவது உழைக்க உறுதியும் ஆசையும் – அதாவது சோம்பறித்தனமும் கழிப்பிணித்தனமும் இல்லாத, திடம் உள்ள சரீரமும் தனது வாழ்வில் எந்தத் துறைக்கும் மற்றவர்களை எதிர்பார்க்கவோ, தனக்குச் சரியென்று தோன்றிய அபிப்பிராயங்களை – முடிவுகளை தனது வாழ்க்கைக்காக – வாழ்க்கை நலத்துக்காக – மற்றவர்களின் தயவுக்காக மாற்றிக் கொள்ளவோ வேண்டிய அவசியமில்லாத – சாகும் வரை சுதந்திர உணர்ச்சியுடன் இருக்கத் தகுந்ததிலே எதுவோ அதுவே மேல்கண்ட உயர்ந்த சம்பத்தாகும். அப்படிப்பட்ட நிலையில் நான் இருப்பதால் (இருக்கிறதாக நான் நினைத்துக் கொண்டிருப்பதால்) அந்த நிலையைப் பாழாக்குவதற்கு இஷ்டமில்லாமல் பயனுள்ள வேலையென்று எதைக் கருதுகின்றேனோ அதைச் செய்கிறேன் என்பதல்லாமல் வேறு எவ்விதப் பிடிவாதமும் எனக்குக் கிடையாது. நாளை நான் சாகும்போது...

சிங்களருக்கும் சமநீதி கோரிய தலைவர்

சிங்களருக்கும் சமநீதி கோரிய தலைவர்

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் 50 ஆவது பிறந்தநாளையொட்டி 2004 ஆம் ஆண்டு ‘ஈழ முரசு’ சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டது. அதில் போராளிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்களின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தினேஷ் என்ற போராளி எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி. திருகோணமலை மாவட்டத்தில் எமது கட்டுப் பாட்டிலுள்ள மூதூர் பிரதேசத்தினுள் அமைந்த காட்டுப் பகுதியினுள் அயல் எல்லைக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிங்களப் பெண்மணி வழி தவறி வந்து விட்டார். அப்போது அங்கு வைத்து அச்சிங்களப் பெண்மணிக்குத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஒரு தமிழ் வாலிபன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விடுகின்றான். இதனை அச்சிங்களப் பெண்மணி எமது இயக்கத்தின் முகாமிற்கு வந்து முறைப்பாடு செய்தாள். உடனே எமது இயக்கப் போராளிகள் அனைவரும் தேடுதலில் ஈடுபட்டு அந்த வாலிபனை இறுதியாக ஆதாரங்களுடன் தேடிக் கண்டுபிடித்து விட்டார்கள். அத்துடன் அச்சிங்களப் பெண்மணி யும் அவனை அடையாளங் காட்டிவிட்டார். அவ்வாலிபன்...

பட்டாசு வெடிப்பு வேண்டாம்!

பட்டாசு வெடிப்பு வேண்டாம்!

கழக நிகழ்வுகளில் பட்டாசுகள் வெடிப்பதை தோழர்கள் தவிர்க்கக் கோருகிறோம். ஒவ்வொரு பட்டாசுக்குள்ளும் குழந்தைத் தொழிலாளர்கள் உழைப்புச் சுரண்டல் அடங்கியிருக்கிறது. பெரியார் முழக்கம் 28112013 இதழ்

பூஜைக்கு போகும் விண்வெளி ராக்கெட்டுகள்: ‘பாரத ரத்னா’ விஞ்ஞானி கண்டனம்

பூஜைக்கு போகும் விண்வெளி ராக்கெட்டுகள்: ‘பாரத ரத்னா’ விஞ்ஞானி கண்டனம்

பாரத ரத்னா விருது பெற்றுள்ள விஞ்ஞானி சி.ன்.ஆர். ராவ், பெங்களூரில் நவம்பர் 24 அன்று பேட்டி அளித்தார். அப்போது ஒரு செய்தியாளர் “இஸ்ரோ சார்பில் ஒவ்வொரு முறையும் ராக்கெட் அனுப்பும் முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதன் மாதிரி வடிவத்தை வைத்து பூஜை செய்யப்படும் வழக்கம் இருந்து வருகிறது. அது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்றார். அதற்கு பதில் அளித்த விஞ்ஞானி சி.என்.ராவ், “அது மூட நம்பிக்கை. எனக்கு அதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. பயத்தின் காரணமாக மனிதர்கள் பூஜைகள் செய்தால் தாம் செய்கின்ற பணி வெற்றி பெறும் என்று நம்புகிறார்கள். அதற்கு என்ன செய்ய முடியும்? இதுபோன்ற நம்பிக்கைகள் எனக்கு இல்லை. நான் ஜோதிடத்தையும் நம்புவதில்லை. மேலும் நான் தகவல் தொழில்நுட்பத்திற்கு எதிரானவன் என்ற கருத்தும் நிலவுகிறது. அதில் உண்மையில்லை. சீனாவில் அறிவியல் துறையில் அதிக அளவில் முதலீடு செய்யப்படுகிறது. இந்தியர்கள் எதையும் எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள். அறிவியல்...

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்கள் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு மனுக்கள் தயாரிப்புப் பணிகள் முடிந்துள்ளன. தமிழ்நாடு அறிவுரைக் குழுமம், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசு உள்துறைக்கு மனுக்கள் அனுப்பப்பட் டுள்ளன. உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் நவம்பர் 25 அன்று தாக்கல் செய்யப் பட்டது. கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண் ஆகியோர் முழு வீச்சில் பணியாற்றி வருகிறார்கள். தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன் உடனிருந்து உதவி வருகிறார். காவல்துறையினரால் வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட தபசி. குமரன், சேலம் டேவிட், சென்னை ஜான் ஆகிய தோழர் களுக்கு முன் பிணையை ஏற்கனவே உயர்நீதிமன்றம் வழங்கி யுள்ளது. தோழர் கொளத்தூர் மணியை 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே சிறையில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படுகிறது. வழக்கறிஞர்கள் அவ்வப்போது சந்தித்து வருகிறார்கள். பெரியார் முழக்கம்...

தலையங்கம்: மறு விசாரணை வேண்டும்

தலையங்கம்: மறு விசாரணை வேண்டும்

உண்மைகள் வெளிச்சத்துக்கு வர 23 ஆண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது. ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை சந்தித்துள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தூக்குத் தண்டனைக் குறித்து உச்சநீதிமன்றத்தில் மறு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது மரணதண்டனை எதிர்ப்பு இயக்கம் தயாரித்து வெளியிட்டுள்ள ‘உயிர் வலி’ ஆவணப்படம் இந்த வழக்கில் ஒரு முக்கிய திருப்பத்தை உருவாக்கி விட்டது. ராஜிவ் கொலைக்கான மனித வெடிகுண்டு ‘பெல்ட்’டில் பயன்படுத்தப்பட்டது, போறிவாளன் வாங்கித் தந்த பேட்டரிதான் என்பதே அவரை தூக்கு மரத்தின் கொட்டடியில் கொண்டுபோய் நிறுத்துவதற்கான ஒரே சான்றாதாரம். தடா சட்டத்தின் கீழ் துன்புறுத்தி பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை இதற்கு சான்று ஆவணமாக உச்சநீதிமன்றமே ஏற்றுக் கொண்டது. பேரறிவாளனிடம் சாட்சியத்தைப் பதிவு செய்த சி.பி.அய். அதிகாரி தியாகராசன், அய்.பி.எஸ். இப்போது இந்த ஆவணப் படத்துக்கு வழங்கியுள்ள பேட்டி, புதிய திருப்பத்தை உருவாக்கி விட்டது. பேரறிவாளன் தன்னிடம் தந்த ஒப்புதல் வாக்குமூலத்தை உள்ளது உள்ளபடியே பதிவு செய்யாமல் தவிர்த்து...

கொளத்தூர் மணி, தோழர்களை விடுதலை செய்: அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கொளத்தூர் மணி, தோழர்களை விடுதலை செய்: அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட தோழர்களை விடுதலைச் செய்யக் கோரியும், பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரியும் அடக்குமுறை சட்டங்கள் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நவம்பர் 23 ஆம் தேதி காலை 11 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் எழுச்சியான கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப் பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார். கொளத்தூர் மணியை விடுதலை செய்யக் கோரியும், அடக்குமுறை சட்டங்களை எதிர்த் தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், எஸ்.டி.பி.அய். கட்சி மாநிலத் தலைவர் தெகலான் பாகவி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல் முருகன், தோழர் தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தங்கத் தமிழ்வேலன்,...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு தெலுங்கானா பகுதி காங்கிரஸ் தலைவர்கள் கோயில் கட்டி தினமும் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.  – செய்தி கடவுள் இருக்கிறார் என்று சொல்லக்கூடிய ஒரே கோயில் இதுவாகத்தான் இருக்கும்! மது பாட்டில்களில் – இந்து கடவுள்களின் படங்களை அச்சிடும் ஆஸ்திரேலியா நாட்டைக் கண்டித்து சென்னையில் இந்து முன்னணி போராட்டம். – செய்தி நியாயம்தாங்க… இதேபோல் இந்துமதச் சின்னங்களை நெற்றியிலும் கழுத்திலும் போட்டுக் கொண்டு மதுபாட்டில்களை உடைக்கும் இந்து குடிமகன்களை எதிர்த்தும் ஒரு போராட்டம் நடத்துங்க! தமிழக மீனவர்களை நாங்கள் தாக்கவில்லை என் கிறது இலங்கைக் கடற்படை. அப்படியானால் தாக்குவது யார் என்று அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.   – இந்திய கடற்படை துணை தளபதி பேட்டி திமிங்கிலங்களும் முதலைகளும் தமிழக மீனவர்களை மட்டும் குறி பார்த்து தாக்கிவிட்டு பிறகு கடலுக்குள் ஓடி விடுகின்றன என்று இலங்கை கடற்படை விளக்கம் கூறலாம். அந்த விளக்கத்தை இந்தியக் கடற்படையும் ஏற்கலாம். காதுல பூ சுத்தாதீங்கய்யா… 60...