Tagged: பெரியார் முழக்கம் 23102013 இதழ்
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் தாயார் கு.பாவாயம்மாள் 4.10.2013 அன்று முடிவெய்தியதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள், தோழர் கொளத்தூர் மணியை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தனர். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி (ம.தி.மு.க.), விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, பா.ம.க. தலைவர் கோ.க.மணி, முன்னாள் அமைச்சர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு முத்துசாமி, ஆதித் தமிழர் பேரவைத் தலைவர் இரா. அதியமான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோபி. வெங்கிடு (தி.மு.க.), பனமரத்துப்பட்டி இராசேந்திரன் (தி.மு.க.), மேச்சேரி காமராஜ் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரி பேராசிரியர் திருநீலகண்டன், பூவுலகின் நண்பர்கள் பொறியாளர் சுந்தரராஜன் முதலானோர் நேரில் வந்து இரங்கல் தெரிவித்தனர். பெரியார் முழக்கம் 23102013 இதழ்
உ.பி. மாநிலம் உள்ளாவ் பகுதியில் 1857 இல் சிற்றரசர் ராஜாராவ் ராம் பச்சன் – 1000 டன் தங்கத்தைப் “புதைத்த”போது 31 கிராம் தங்கத்தின் விலை 20 டாலர். ரூபாய்க்கும் அதே மதிப்புதான். ஒரு குறுநிலப் பகுதியின் சிற்றரசர் இந்த விலையில் ஆயிரம் டன் தங்கத்தை எப்படி வைத்திருந்தார்? அப்படியே வைத்திருந்தாலும் அவ்வளவு பெரும் தொகை அவரிடம் இருந்திருக்குமா? அப்படியே நிதி வசதி இருந்தாலும் அவ்வளவு பெரிய அளவில் தங்கத்தை அவரால் எங்கிருந்து பெற முடிந்தது? நாட்டின் வரலாற்று தொன்மங்களை தேடிக் கண்டுபிடித்து ஆய்வு நடத்த வேண்டிய தொல்பொருள் துறை, மூடநம்பிக்கைகளுக்கு துணை போகலாமா? பெரியார் முழக்கம் 23102013 இதழ்
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றிருப்பவர் வர்ணாஸ்ரம வெறியில் ஊறிப் போன முரளி மனோகர் ஜோஜி. அவர் பத்திரிகையாளர்களிடையே தங்களின் அடிப்படைக் கொள்கைகளில் சமரசத்துக்கு இடமில்லை என்று கூறியிருக்கிறார். அயோத்தியில் ராமன் கோயிலைக் கட்டுவது; இஸ் லாம், கிறிஸ் தவர்களுக்கான மதச் சட்டங்களை ஒழித்து பொதுவான சிவில் சட்டத்தை உருவாக்குவது; காஷ்மீருக்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமையான 370 ஆவது பிரிவை ரத்து செய்வது – இந்த மூன்று கொள்கைகளும் தேர்தல் அறிக்கையில் நிச்சயமாக இடம் பெறும் என்று கூறிவிட்டார். அதேபோல், பசு பாதுகாப்பு, கங்கை நீரை தூய்மையாக்கும் திட்டம், சேது சமுத்திரத் திட்டததைக் கைவிடுவது என்பதிலும், சமரசத்துக்கு இடமில்லை என்கிறார். உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் வாக்காளர்களை ஏமாற்ற மோடி, இராமன் கோயில் பிரச்சினையை பேசாமல் தவிர்த்தாலும் ஜோஷி உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார். – இரா பெரியார் முழக்கம் 23102013 இதழ்
‘தாலிபான்’ பயங்கரவாதம் இஸ் லாமியர் களிடையே இருப்பதுபோல் இந்து ஜாதி வெறியர் களிடமும் இருக்கிறது. அரியானாவில் ‘ஜாட்’ சமூகத் தினர் நடத்தும் ஜாதிப் பஞ்சாயத்துகள் ‘தாலி பான்கள்’ போலவே செயல்பட்டுக் கொண்டிருக் கின்றன. காதலித்து திருமணம் செய்தாலோ ஒரே கோத்திரத்தில் காதலித்தாலோ பெற்ற மகளையே கொலை செய்துவிட வேண்டும் என்று உத்தரவு போடுகிறது இந்த ‘ஜாட்’கள் நடத்தும் ஜாதி பஞ்சாயத்து. 10 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் ஆடை களையே அணிய வேண்டும்; சக மாணவர்களிடம் பேசக் கூடாது; அலைபேசி வைத்துக் கொள்ளக் கூடாது; ஒரே வாகனத்தில் பயணம் செய்யக் கூடாது என்றெல்லாம் கட்டளைகளைப் பிறப்பித்துள்ளனர். நகரத்துக்கு படிக்கச் செல்லும் இளம் பெண்கள் அங்கே நவீன உடைகளை அணியாமல் இருக்கிறார்களா? ஆண் நண்பர்களுடன் பழகாமல் இருக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க உளவுப் பிரிவையும் அமைத்துள்ளார்களாம். தங்களுக்கு தாங்களே சட்டங்களையும் தண்டனைகளையும் உருவாக்கிக் கொண்டு திரியும் இந்த ஜாதி வெறியர்களிடம் சட்டம்...
‘கணித மேதை’ என்று அழைக்கப்படும் ராமானுஜம் (அய்யங்கார்) வரலாற்றைப் படமாக எடுத்து வருகிறார், பெரியார் படத்தை இயக்கிய ஞான. ராஜசேகரன். இந்திய சமூகம், சிறந்த அறிவாளிகளை அங்கீகரிப்பது இல்லை என்பதே இந்தப் படத்தின் மய்யமான கருத்து என்றும், வேதகாலத்திலிருந்தே இதுதான் நிலை என்றும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பிற்காலத்தில் கணிதத்தில் மேதையாக விளங்கிய இராமானுஜம், ‘இன்டர்மீடியட்’ படிப்பில் தோல்வி அடைந்தவர் என்பது, ஒரு முக்கிய செய்தி. மதிப்பெண் – ஒருவருடைய அறிவாற்றலுக்கான மதிப்பீடு இல்லை என்பதற்கு இவரே ஒரு உதாரணம் தான்! குடும்பத்துக்குப் பயந்து வீட்டைவிட்டு ஓடி விட்டார். அவரது தந்தை 1905 ஆம் ஆண்டு மகனைக் காணவில்லை என்று ‘இந்து’ ஏட்டில் படத்துடன் விளம்பரம் செய்து மகனைக் கண்டுபிடித்தார். ஜி.எச்.ஹார்டி என்ற வெளிநாட்டுக்காரர்தான் – இராமானுஜத்தின் அறிவைக் கண்டறிந்து, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்தார். சென்னை திரும்பிய இராமானுஜர், இறுதி காலத்தில் அவரது பார்ப்பன...
அர்ச்சகர்கள் – பிறவியின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அதற்கான தகுதி பார்ப்பனர்களுக்கு மட்டுமே உண்டு என்று தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் வரை போகிறார்கள். ஆனால், கேரளாவில் அர்ச்சகர் நியமனம் அப்படி அல்ல. அங்கே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகி விட்டார்கள். ‘கேரள தேவஸ் வம் போர்டு’ என்ற மாநில அரசின் கோயில் நிர்வாக அமைப்பு அர்ச்சகர்களாக பணிபுரிவோருக்கு பூஜை சடங்கு ‘தாந்திரீகம்’ மந்திரம் ஒதுதல் போன்ற சடங்குகளுக்குப் பயிற்சி வகுப்புகளை நடத்தி, பிறகு தேர்வு நடத்த முடிவு செய்தது. ஏற்கனவே அர்ச்சகர்களாக இருப்பவர்கள் பயிற்சியில் சேராமலேயே தேர்வு எழுதலாம் என்றாலும், அவர்கள் திறமையை சோதிக்க நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அப்போது இரண்டு பேர் மட்டுமே சரியான விடை தந்தார்கள். 95 பேருக்கு அர்ச்சகருக்குரிய பயிற்சி இல்லை. எனவே அவர்கள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து தேர்வு எழுத வேண்டும் என்று தேவஸ் வம் போர்டு அறிவித்துள்ளது. தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக...
அரசியல்வாதிகளை சோதிடம் எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதை விளக்கும் கட்டுரை ஒன்றை மத்திய அரசின் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற என்.ஆர்.கிருஷ்ணன், ‘இந்து’ ஆங்கில ஏட்டில் (அக்.6) எழுதியுள்ளார். பெயர்களை குறிப்பிடாமல் பல சுவையான சம்பவங்களை அவர் பதிவு செய்துள்ளார். 1980 ஆம் ஆண்டில் பெரும்பான்மை ஆதரவு பெற்ற ஒரு கட்சியின் முதல்வர் அமைச்சர் களோடு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பதற்கு சோதிடர்களைக் கலந்து ஆலோசித்தார். நாள், நேரம் குறித்து அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வழங்கப் பட்டன. காலை 10 மணிக்கு பதவி ஏற்க வேண்டும். பதவி ஏற்கும் நாளில் சோதிடர்கள் முதல்வரை அணுகி 10.02க்கு முதல்வர் பதவி ஏற்காவிட்டால், 5 ஆண்டுகாலம் பதவியில் நீடிக்க முடியாது என்று கூறவே, எல்லா நிகழ்ச்சிநிரல்களும் அவசரமாக மாற்றியமைக்கப்பட்டு, சோதிடர்கள் குறித்த சரியான நேரத்தில் முதல்வர் பதவி ஏற்றார். அடுத்த ஒரு மணி நேரத்தில் விமானத்தில் டெல்லிக்கு பறந்து போய் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்த நாள்...
சுஷில் சர்மா – டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை நீதிபதி உள்ளிட்ட 3 நீதிபதிகளடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது. தனது மனைவியை கொலை செய்து துண்டுதுண்டாக வெட்டி தந்தூரி ரொட்டி சுடும் அடுப்பு நெருப்பில் போட்டு எரித்தார் என்பது குற்றச்சாட்டு. அரிதினும் அரிதான வழக்கில் மட்டும் தூக்குத் தண்டனை விதிக்கலாம் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. கொடூரமான கொலைகள் தான் அரிதிலும் அரிதாக கருதப்பட வேண்டும் என்று இதற்கு தவறாக பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளி திருந்தி வாழவே முடியாது என்ற உறுதியான முடிவுக்கு வரும் நிலைக்கு குற்றம் புரிந்தால் மட்டுமே அரிதிலும் அரிதான வழக்கு என்ற முடிவுக்கு வர முடியும் என்ற கருத்தை சுஷில் சர்மா வழக்கில் இப்போது உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி யிருக்கிறது. இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சுஷில் சர்மா, எதிர்காலத்தில் திருந்தி வாழவே மாட்டார் என்பதற்கான சான்றுகளை அரசு தரப்பு...
மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் அறிவியலுக்கு எதிராகவே அனைத்து மதங்களும் இருக்கின்றன என்றார், கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி. இந்தியா புனித தோமா வழித் தமிழ்க் கிறிஸ் துவ நாடே – எவ்வாறு? என்ற தலைப்பில் மூன்று நாள் ஆய்வரங்கம் நடைபெற்றது. மகாபலிபுரம் அரசினர் சிற்பக் கல்லூரி அருகிலுள்ள Scripture Union Centre இல் நடைபெற்ற இந்த ஆய்வரங்கின் முதல் நாளான 27.08.2013 செவ்வாய் கிழமை அன்று காலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடக்க உரையாற்றினார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பொறுப்பு அலுவலர் பேராசிரியர் முனைவர் க. இராமசாமி வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் ஆய்வு கருத்துரை வழங்கி, மறுப்புக் கேள்விகளுக்கான பதில் அளித்தார். ஆய்வரங்க முடிவின் தீர்ப்பினை வழங்குவதற்கு ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கொளத்தூர் மணி நிகழ்த்திய உரையின் சுருக்கம்: சமயம் தொடர்பான இந்த ஆய்வரங்கில், சமயத்...
உ.பி.யில் பழங்கால கோட்டையின் கீழ், 1000 டன் தங்கம் புதைத்திருப்பதாக தனது கனவில் கிடைத்த செய்தியை ஒரு சாமியார் மத்திய அமைச்சரிடம் கூற, உடனே தொல்பொருள் துறை புதையலைத் தேடி தோண்டி வருகிறது. – செய்தி நல்ல சேதி. ஆனாலும், அமைச்சரிடம் சாமியார் நேரில் வந்து சொன்னாரா? அல்லது சாமியார் சொல்வதுபோல் அமைச்சர் கனவு கண்டாரா என்பதை உறுதி கொள்ளுங்கள். வாக்கு வங்கி அரசியலை ஒரேயடியாக குழி தோண்டிப் புதைக்க வேண்டும். – கான்பூரில் மோடி அப்படி எல்லாம் செய்யாதீங்க. அப்புறம் எவராவது கனவு கண்டு பூமிக்கடியில் வாக்குகள் புதைந்து கிடக்கிறது என்றால், அதிகாரிகள் குழிதோண்ட ஆரம்பித்து விடுவார்கள். கான்பூரில் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்ட மேடை வா°துப்படி சோதிடர்கள் ஆலோசனை பெற்று அமைக்கப்பட்டது. – செய்தி ஒலி பெருக்கி, மின் விளக்கு, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் வா°து உண்டா? அரசின் பொதுத் துறை நிறுவனத்துக்கு மட்டுமே ஒரிசா நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்க வேண்டும் என்று...