Tagged: பெரியார் முழக்கம் 22052014 இதழ்
15-05-2014 ஆம் நாளிட்ட ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் 14-05-1933 அன்று பல தடைகளை மீறி, பெரியார் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட தோழர் எம்.ஏ.சவுந்தரராஜன், 27-05-1979 இல் எழுதி வைத்திருந்த நினைவுக் குறிப்பு வெளி வந்துள்ளது. ‘குடிஅரசு’ ஏட்டின் பதிப்பாளராய் இருந்துவந்த நாகம்மையார் 11-05-1933 அன்று காலமாகிப் போனதால், புதிய பதிப்பாளரின் பெயருக்கு பத்திரிக்கையை மாற்றுவதற்காக அந்த இதழோடு (மாலை-9; மலர்-3) ‘குடிஅரசு’ நிறுத்தப்பட்டது. பெரியாரின் தங்கை சா.ரா.கண்ணம்மாள் அவர்கள் பதிப்பாளராக பதியப் பெறுவதற்கு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அடுத்த ‘குடிஅரசு’ இதழ் ( மாலை-9; மலர்-4 ) 16-07-1933 அன்று தான் வெளிவந்தது. அவ்விதழின் 9ஆம் பக்கத்தில் “கத்தோலிக்கர்களே, இனி பலிக்காது” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கட்டுரையை இங்கு வெளி யிடுகிறோம். “எவனெழுதினாலென்ன?” என்ற புனைப் பெயரில் இக்கட்டுரை வெளி வந்துள்ளது. திருச்சியில் மே மாதம் 14 –ந் தேதி நடந்த ஒரு சுயமரியாதைத் திருமணத்தை முன்னிட்டு தோழர்...
இந்தியாவில் அந்நிய முதலீடு நுழைய முடியாத துறையை காண்பது இன்று அபூர்வம். தொழில்துறை, நிதித் துறை, சில்லரை வர்த்தகம் என எல்லா முக்கியத் துறைகளிலும் தனது ஆக்டோபஸ் கரங்களை நுழைத்து கொள்ளையடித்து வருகிறது அந்நிய முதலீடு. இப்போக்கு வளர்ச்சியின் குறியீடாக இங்கு உருவகப்படுத்தப் பட்டுள்ளது. ஏராளமான சலுகைகள், அடிமாட்டு விலைக்கு நிலம், வரிச் சலுகைகள் என இந்திய மக்களின் செல்வ வளம் வாரியிறைக்கப்படு கிறது. அந்நிய முதலீடுகள் மீது கட்டுப் பாடற்ற சுதந்திர போக்கு மத்திய, மாநில அரசுகளால் கையாளப்படு கிறது. இவர்களின் எதிர்பார்ப்பின்படி இம் முதலீடுகள் நாட்டை வளமாக்க வில்லை. மாறாக இந்திய அரசு அளிக்கும் அத்துனை சலுகைகளை யும் அனுபவிப்பதோடு, சட்ட விரோதமான வழிகளிலும் நாட்டின் வளங்களை கொள்ளையடிக் கிறார்கள் என்பதை “பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதை போல நோக்கியா இந்தியா நிறுவன விவகாரங்களை கொண்டே விளங்க முடியும். தமிழக அரசின் ஒப்பந்தம் ஏப்ரல் 2005இல்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் வித்தோபா கோயில் வழக்கில் பார்ப்பனர் களல்லாத தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் உள்பட அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. “பார்ப்பனர்” மட்டுமே கோயில் அர்ச்சகராகலாம் என்ற ஆதிக்கத்திற்கு உச்சநீதிமன்றம் மரண அடி கொடுத்துள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்களும் அர்ச்சகராகலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. மகாராட்டிர மாநிலத்தில் சோலாப்பூரை அடுத்த பந்தர்பூரில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த வித்தோபா கோயில் உள்ளது. புனித நகராகக் கூறப்படும் இந்நகரில் உள்ள கோயிலின் வரலாற்றிலேயே முதன்முதலாக பூசை செய்வதற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு அர்ச்சகராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் பழமையான ஆண் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. வித்தல் (உ)ருக்குமணி கோயில் அறக்கட்டளையின் தலைவர் அன்னா டாங்கே இது குறித்து கூறும்போது இரு நூற்றாண்டுகளாக பார்ப்பனர் மட்டுமே கோயில் பூசை, சடங்குகள் செய்யப்பட்டு வந்ததை மாற்றி, நாட்டிலேயே முதல் முயற்சியாக கோயில் அறக்கட்டளை மூலமாகவே பழைய...
‘இந்து இராஷ்டிரத்தை’ உருவாக்கும் கொள்கையைக் கொண்டவர்களிடம் அரசியல் அதிகாரம் போய்ச் சேர்ந்து விடக்கூடாது என்பதை மக்களிடம் உணர்த்த விரும்பியதால்தான் திராவிடர் விடுதலைக் கழகம் – இடதுசாரி கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள், தலித் அமைப்புகளை ஆதரிக்கும் முடிவை எடுத்தது. எந்தக் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதைவிட எந்தக் கொள்கை வெற்றி பெற வேண்டும் என்ற பார்வையில் கழகம் எடுத்த முடிவு இது. இப்போது ‘இராஷ்டிரிய சுயம் சேவக் சங்’ என்ற ‘இந்து இராஷ்டிரத்தை’ அமைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துவிட்டது. அந்த அமைப்பு களமிறக்கிய நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராகிறார். நாடாளுமன்றம், வாக்குரிமை என்ற “ஜனநாயக” வழிமுறைகளில் ‘இராம இராஜ்யத்தை’ அமைக்கும் முயற்சி என்பதேகூட ஒரு விசித்திர முரண்பாடுதான். பார்ப்பன அதிகாரம் மட்டுமே இராமஇராஜ்யத்தை வழி நடத்தியதாக இராமாயணங்கள் கூறுகின்றன. இந்தியா, இறையாண்மை கொண்ட சோஷலிச மதச்சார்பற்ற குடியரசு என்று வலியுறுத்தும் அரசியல் சட்டத்துக்கு உண்மையாக இருக்க வேண்டியவர் ஒரு...
நாட்டை தூய்மைப்படுத்தும் பணியை வாரணாசி யிலிருந்து தொடங்குவோம். – மோடி நேர்மையான பேச்சு; உலகிலேயே அதிக சுகாதாரக் கேடு கொண்ட நகரம் அது தானே! எதிர்க்கட்சியாகும் தகுதியைக்கூட பெறாமல் காங் கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. – செய்தி இருக்கலாம். ஆனால், காங்கிரசையே கலைக்கச் சொன்ன காந்தியின் லட்சியத்தை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார்களே! இது சாதனை தானே? தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற வாக்கு களின் சதவீதக் கணக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. – செய்தி இது யாருக்குப் பயன்படாவிட்டாலும் அடுத்த தேர்தலில் ‘வெற்றிக் கூட்டணி’க்கு கணக்குப் போடுவதற்கு தோழர் தமிழருவி மணியனுக்கு நிச்சயம் பயன்படும். தில்லை நடராசன் கோயில் நிர்வாகத்தில் அரசு தலையீட்டை எதிர்த்து வெற்றி பெற்ற தீட்சதர்கள், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு தில்லை காவல் நிலையத்தில் புகார். – தினமலர் செய்தி இதுக்கு மட்டும், அரசு தலையிடு வேண்டுமா? தில்லை நடராசனிடம் நேரடியாக ‘பாதுகாப்பு’ அர்ச்சனை செய்ய வேண்டியது தானே? பெரியாறு அணை நீர் மட்டத்தை கேரள...
மொத்த வாக்குகளில் 31 சதவீதத்தைப் பெற்ற பா.ஜ.க. 282 தொகுதிகளையும் 19.3 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ், 44 தொகுதிகளையும் கைப்பற்றி யுள்ளது. தமிழகத்தில் பதிவான வாக்குகளில் 43.3 சத வீதத்தைப் பெற்றுள்ள அ.இ.அ. தி.மு.க. 37 இடங்களைக் கைப்பற்றி யது. 23.6 சதவீத வாக்குளை பெற் றுள்ள தி.மு.க. ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 80 தொகுதிகளைக் கொண்ட உ.பி.யில் முஸ்லிம்கள் – 19 சதவீதம் இருந்தும், போட்டியிட்ட 55 முஸ்லிம் வேட்பாளர்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இங்கு பா.ஜ.க. நிறுத்திய வேட்பாளர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. முஸ்லிம் ஓட்டுகளை பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் பிரித்துக் கொண்டதே இதற்குக் காரணம். 428 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. 7 தொகுதிகளில் மட்டும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது. ஒருவர்கூட வெற்றி பெறவில்ல. பா.ஜ.க.வில் வெற்றி பெற்ற 282 பேரில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை. இந்தத்...