Tagged: பெரியார் முழக்கம் 20022014 இதழ்

நடிகர் சத்தியராஜ் பேச்சு: பெரியாரைத் தவிர்த்துவிட்டு எந்த சமூக மாற்றத்தையும் செய்ய முடியாது

நடிகர் சத்தியராஜ் பேச்சு: பெரியாரைத் தவிர்த்துவிட்டு எந்த சமூக மாற்றத்தையும் செய்ய முடியாது

‘அந்தி மழை’ மாத இதழில் எழுத்தாளர் பாமரன் ‘சொதப்பல் பக்கம்’ என்ற பெயரில் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு ‘சொதப்பல்’ என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு நிகழ்ச்சி 16.2.2014 ஞாயிறு மாலை 6 மணியளவில் கோவை ஆர்.எஸ்.புரம் பாரதிய வித்யாபவன் அரங்கில் நடைபெற்றது. நடிகர் சத்தியராஜ், விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் அழகிய பெரியவன், ‘அந்தி மழை’ நிறுவனர் இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினர். நிர்வாக ஆசிரியர் என். அசோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். முனைவர் இரா. சுப்பிர மணியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பாமரன் ஏற்புரை நிகழ்த்தினார். நடிகர் சத்தியராஜ் தமது உரையில் : அடுத்த ஆண்டு தனக்கு 60 ஆம் ஆண்டு திருமணம் நடத்த வேண்டும் என்று குடும்பத்தினரும் நண்பர்களும் தெரிவித்தக் கருத்தை, தான் மறுத்துவிட்டதாகவும்,  தனது மனைவிக்கு 60 வயது நிறைவு பெறும்போது அதை சுயமரியாதைத் திருமணமாக நடத்துவேன் என்றும் அறிவித்தார். ஆணுக்கு 60  வயது நிறைவு பெற்றால்தான்...

46 ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு: மேடையில் மதமறுப்பு திருமணம்

46 ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு: மேடையில் மதமறுப்பு திருமணம்

கோவையில் காதலர் திருவிழா கோவையில் பிப்.14 அன்று காதலர் திருவிழா, காலை தொடங்கி மாலை வரை கலை நிகழ்ச்சிகள், கருத்துரைகளுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது.  காந்திபுரம் ‘பாத்திமா சர்ச்’ கலை அரங்கில் நடந்த இந்த கொண்டாட்ட விழாவை திராவிடர் விடுதலைக் கழகத்தின் முன்னணி அமைப்பான ஜாதி மத எதிர்ப்பு காதல் மணம் புரிந்தோர் நலச் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களுடன், தமிழ்நாடு திரைக் கலைஞர் அனைத்து தொழிலாளர் கூட்டமைப்பைச் சார்ந்த தோழர் களும் தோழியர்களும் பெருமளவில் பங்கேற்று கலைநிகழ்ச்சிகளை வழங்கினர். ஜாதி மறுப்பு மணம் புரிந்த பல இணையர்கள் விழாவில் பங் கேற்றது குறிப்பிடத்தக்கதாகும். பகல் 11.45 மணியளவில் ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்புடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. ‘சன்’ தொலைக்காட்சி வி.ஜெகன் குழுவினர் பல குரல் நிகழ்ச்சி, கோவை பிரியாவின் கரகாட்டம், நாட்டுப் புற கலைஞர் செந்தில் கிராமிய நிகழ்ச்சி, ரெஜிதாவின் பாடல் உள்ளிட்ட கலை...

‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “காந்தி எங்க வீட்டுக்கு வந்திருக்கார்! ”

‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “காந்தி எங்க வீட்டுக்கு வந்திருக்கார்! ”

  மறைந்த பத்திரிகையாளர் சாவி, தந்தை பெரியாரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்து எடுத்த இந்தப் பேட்டி, 4.4.1965 ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளி வந்துள்ளது. அப்பேட்டியை மீண்டும் 15.1.2014இல் அந்த ஏடு மறு வெளியீடு செய்துள்ளது. பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய அந்த சந்திப்பை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. (சென்ற இதழ் தொடர்ச்சி) “வைக்கம் வீரர்னு உங்களுக்கு எப்படிப் பேர் வந்தது?” – மணியன் கேட்கிறார் “அதுவா? அது ஒரு கதை… சொல்றேன். நீங்க என்னமோ கேட்டீங்களே என்னது?” என்று என் பக்கமாகத் தலையைச் சாய்த்து காதைக் கைவிரல்களால் அணைத்துக் கேட்கிறார். “காந்தியை நீங்க சந்திச்சிருக்கீங்களா?னு கேட்டேன்…” என்கிறேன் நான். “எங்க வூட்டுக்கே வந்து தங்கியிருக்காரே. சட்டசபைப் பிரவேசத்துக்கு காங்கிரஸை அவர் அனுமதிச்சபோது நான் ‘கூடாது’னு தடை பண்ணினேன்; எதிர்த்தேன்; வாதாடினேன். அவர் சொன்னார்: “நீ என்ன இப்படிச் சொல்றே? மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ் இவங்களையெல்லாம் நினைச்சுப்...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

ஜெயலலிதா பிரதமரானால், திருப்பதி ஏழுமலையானுக்கு 2000 பேர் முடிகாணிக்கை செலுத்துவது என்று, வேலூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. மாநகர மாணவரணி முடிவு செய் துள்ளது.     – செய்தி அதுவும் சரிதான்! ஏழுமலையானுக்கு லஞ்சம் கொடுத்தால்தானே ஊழலற்ற ஆட்சி அமைக்க முடியும்? லக்னோவில் மோடிக்கு சிலை எழுப்பி, நாள்தோறும் ஆராதனை நடக்கிறது. – ‘தினமலர்’ செய்தி அப்படியே அந்த சிலையை அயோத்திக்குக் கொண்டு போய், அங்கே கோயில் கட்டிடலாமே! ‘ராமனுக்கு’. எல்லாம் தேர்தல் முடிஞ்சு பாத்துக்கலாம்! தேர்தலுக்கு பா.ஜ.க. ஊடக விளம்பரங்களுக்கு ரூ.400 கோடி செலவிடுகிறது, பிரபல விளம்பர நிறுவனங்கள் கவர்ச்சியான விளம் பரங்களை வடிவமைக்க உள்ளன.  – ‘தினமலர்’ செய்தி அதில் ஸ்ரீராமபிரான், சீதை, அனுமார், சுப்ரமணியசாமி எல்லாம் வருவார்களா? ஏழுமலையானுக்கு பக்தர்கள் ‘பட்டு வஸ்திர’ காணிக்கையை இடைத்தரகர் மூலம் வழங்க வேண்டாம். தரமில்லாத பட்டாக இருக்கிறது. இனி பக்தர்கள் பகவானுக்கு நேரடியாகவே வழங்க லாம்.            – தேவஸ்தானம் அறிவிப்பு அதேபோல் மூலஸ்தானத்திலும் இடைத்தரகர்களை ஒழித்து, பக்தர்களுக்கு...

கழகத் தலைவர்-தோழர்கள் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது

கழகத் தலைவர்-தோழர்கள் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது

கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் கழகத்  தோழர்கள் அருண்குமார், அம்பிகாபதி, கிருட்டிணன் ஆகியோர் மீது தமிழக அரசு பொய்யாக போட்டிருந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் 13.2.2014 அன்று ரத்து செய்தது. இது தொடர்பான விசாரணை உயர்நீதிமன்ற நீதிதிகள் இராஜேசுவரன், பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் பிப்.12 ஆம் தேதி வந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சார்பில் மூத்த வழக்கறிஞர் வைகை வாதிட்டார். அவர் தனது வாதத்தில், “பொது ஒழுங்கு சீர்குலைவு நடக்கும்போது மட்டுமே தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது. இந்த வழக்கில் அப்படி எந்த சீர்குலைவும் நடைபெறாதபோது சட்டம் முறை கேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்பது வேறு; பொது ஒழுங்கு சீர்குலைவு என்பது வேறு. காவல்துறையின் குற்றச்சாட்டில்கூட பொது ஒழுங்கு சீர்குலைந்திருக் கிறது என்ற எந்தக் குறிப்பும் இல்லை. குற்றம் சாட்டப்...