Tagged: பெரியார் முழக்கம் 03042014 இதழ்

இழிதொழிலுக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

இழிதொழிலுக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

மனித மலத்தை எடுத்தல், சாக்கடைக் குழிக்குள் இறங்கி மூச்சுத் திணறி இறத்தல் என்று துப்புரவுத் தொழிலாளர்களான தாழ்த்தப்பட்டோர், இப்போதும் ஈடுபடுத்தப்படுவதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்திருப்பதோடு அவர்கள் புனர்வாழ்வுக்கான திட்டங்களையும் முன் வைத்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகி, என்.வி.இரமணா ஆகியோரடங்கிய அமர்வு 27.3.2014 அன்று பாராட்டத்தக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. 1993 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆபத்தான வேலையில் உயிரிழந்த குடும்பங் களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இத்தகைய வேலைகளில் ஈடுபடுத்தும் ஒப்பந்தக்காரர்கள் குற்றத்துக்கு பொறுப்பு ஏற்கச் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்தத் ‘தொழிலில்’ ஈடுபடுத்தப்படுவோரை விடுவித்து அவர்களுக்கு மறுவாழ்வுக்காக மாத ஊதியத்துடன் கூடிய வேறு தொழில் பயிற்சிகள், குடியிருப்பு மனைகள் அல்லது வீடுகள் வழங்குதல், குடும்பத்தில் ஒருவருக்கு மாற்றுத் தொழில் செய்வதற்கான சலுகைக் கடன் வழங்குதல் ஆகிய திட்டங்களை முன் வைத்துள்ளது உச்சநீதிமன்றம். இரயில்வே துறையில், இப்போதும்...

அய்.நா.வின் பன்னாட்டு விசாரணை – சில தகவல்கள்

அய்.நா.வின் பன்னாட்டு விசாரணை – சில தகவல்கள்

‘பன்னாட்டு விசாரணை’ குறித்த பல்வேறு தகவல்களை எளிமையாக விளக்குகிறது, இக்கட்டுரை. ஒரு நாடு தனது நாட்டில் நடக்கும் பரவலான மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்க முடியாத நிலை ஏற்படும்போது, அங்கு பன்னாட்டு விசாரணைக்கு ஆணையிடும் கடமை சர்வதேச சமூகத்திற்கு உண்டு. எனவே நியூயார்க்கில் உள்ள அய்.நா. பாதுகாப்புச் சபை, ஜெனீவாவில் அய்.நா. மனித உரிமைப் பேரவை ஆகிய அமைப்புகள் சர்வதேச விசாரணைக்கு ஆணையிடுகின்றன. இவையன்றி அய்.நா. பொதுச் செயலர் /அய்.நா. மனித உரிமை ஆணையர், பல்வேறு பன்னாட்டு அமைப்புகளும் இதுபோன்ற சர்வதேச விசாரணைக்கு ஆணையிடுகின்றனர். பாதுகாப்பு சபை மற்றும் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளே அதிக அதிகாரமிக்கதாகக் கருதப்படுகின்றன. பன்னாட்டு விசாரணை எவ்வாறு நடக்கும்? அய்.நா.வின் சார்பில் நடத்தப்படும் பன்னாட்டு விசாரணைக்கு என குறிப்பிட்ட ஒரு வடிவம் ஏதும் இல்லை. ஒரு நாட்டில் நடந்து முடிந்த ஒரு நிகழ்வு அல்லது தற்போதும் தொடரும் நிகழ்வுகள் குறித்த உண்மை நிலையை அறியும்...

திராவிடர் விடுதலைக் கழக செயலவை நிகழ்வுகள்

திராவிடர் விடுதலைக் கழக செயலவை நிகழ்வுகள்

29.3.2014 அன்று மயிலாடு துறையில் திராவிடர் விடுதலைக் கழக செயலவை – செயலவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடந்தது. நாகை மாவட்ட கழகத் தலைவர் மகா லிங்கம், ‘கடவுள்-ஆத்மா’ மறுப்பு களைக் கூற, தஞ்சை மண்டலச் செயலாளர் வழக்கறிஞர் இளைய ராசா வரவேற்றுப் பேசினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரையாற்றினார். பொருளாளர் இரத்தினசாமி, கழகப் பரப்புரைக்காக 30 பேர் பயணிக்கக்கூடிய பயன்படுத்தப் பட்ட வாகனம், கழகத் தலைவர் ஒப்புதலுடன் வாங்கப்பட் டுள்ளதையும், அதற்குத் தேவை யான நிதி குறித்தும் விளக்கினார். ஒவ்வொரு மாவட்டக் கழகமும் வாகனத்துக்கான நன்கொடை யாக பொது மக்களிடமிருந்து திரட்டித்தரக்கூடிய நிதி மற்றும் குடும்ப ரீதியாக வழங்கக்கூடிய நிதியை நிர்ணயம் செய்யலாம் என்ற ஆலோசனையை முன் வைத்தார். அதன்படி செயலவை உறுப்பினர்கள் இயக்கம் மற்றும் குடும்ப சார்பில் வழங்கக் கூடிய நன்கொடையைத் தெரிவித்தனர். உரையாற்றிய மாவட்ட பொறுப்பாளர்கள் : சென்னை ஜான், காஞ்சிபுரம்...

தலையங்கம்: அய்.நா.வில் நிறைவேறிய அமெரிக்க தீர்மானம்

தலையங்கம்: அய்.நா.வில் நிறைவேறிய அமெரிக்க தீர்மானம்

அய்.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை சர்வதேச தமிழர் அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் வரவேற்றுள்ளன. மயிலாடுதுறையில் 29.3.2014 அன்று கூடிய திராவிடர் விடுதலைக் கழக செயலவை, இத் தீர்மானம் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைவிட மேலும் முன்னேற்றம் கண்டிருப்பதை சுட்டிக்காட்டி, வரவேற்றுள்ளது. 2012-2013 ஆண்டுகளில், அய்.நா. வலியுறுத்திய ‘நம்பகத் தன்மையான விசாரணை’யை நடத்தும் தீர்மானத்தை ராஜபக்சே ஆட்சி முற்றிலும் புறந்தள்ளிய நிலையில் இப்போது அய்.நா. மனித உரிமை ஆணையரின் நேரடி கண்காணிப்பு வளையத்துக்குள் இலங்கை கொண்டு வரப்பட்டிருப்பது ஒரு முக்கிய திருப்பம். இதில் இந்தியா மேற்கொண்டுள்ள நிலைப்பாடு தமிழினத்துக்கு இழைத்த துரோகமாகும். மனித உரிமைக் குழுவில் இடம் பெற்றுள்ள 47 நாடுகளில் 23 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தும், கியூபா, ரஷ்யா, சீனா, வெனிசுலா, மாலத்தீவு, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்துள்ளன. ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கிய 12 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உண்மையில் இந்தியா நடுநிலை...

கழக செயலவையின் முடிவுகள்

கழக செயலவையின் முடிவுகள்

‘இந்துத்துவ சக்தி’களை எப்போதுமே எதிர்த்து வரும் சி.பி.அய். – சி.பி.எம். – இஸ்லாமிய கட்சிகள் – ‘விடுதலை சிறுத்தை’களை ஆதரிக்க வாக்காளர்களுக்கு ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ வேண்டுகோள் ஜாதி வெறியின் குறியீட்டு அடையாளமாக தர்மபுரியில் பா.ம.க. வேட்பாளரை தோற்கடிப்பீர்! கழக செயலவையின் முடிவுகள் மயிலாடுதுறையில் மார்ச் 29, 2014 இல் கூடிய கழக செயலவையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகத்தின் நிலைப்பாடு குறித்து விவாதித்து கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. தேர்தல் நிலைப்பாடு ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களும் அதன் அரசியல் முகமான பா.ஜ.க.வும், இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் பெரும் தொழில் நிறுவனங்களின் பின்பலத்தோடு நாடாளுமன்ற தேர்தல் களத்தில் களமிறங்கியுள்ளன. பல்வேறு மொழி பேசும் தேசிய இனங்களையும், பல்வேறு பண்பாடுகளையும் கொண்ட நாட்டில் “ஒரே நாடு-ஒரே பண்பாடு” என்ற ஒற்றை அடையாளத்தைத் திணிப்பதே இவர்களின் இலட்சியம் என்பதை கடந்தகால வரலாறுகள் மெய்ப்பிக்கின்றன. தங்களின் பாசிச அடையாளத்தை மறைத்துக் கொண்டு ‘வளர்ச்சி’ என்ற பொய்...