Tagged: புரட்சிக் கவிஞர்

மகிழ்வோடு; தார்சூடு!

மகிழ்வோடு; தார்சூடு!

பெண்களின் மறுமணத்தை வலியுறுத்தி புரட்சிக் கவிஞர் எழுதிய பாடல் இது. “என்னருமைத் துணைவி! நானோ கொடிய நோயினால் வருந்துகிறேன். இனி பிழைத் திருப்பேன் என்று சொல்வதற்கில்லை. ஆகவே என் மனத்திலுள்ளதைச் சொல்லுகிறேன் கேள். நான் இறந்தபின், நீ என்னையே எண்ணிக் காலங்கழிக்காதே. என்னை மறந்துவிட்டு மகிழ்வுடன் இரு! உன் மனத்துக்குரியவனை மணந்து வாழு! “வைதீக மிரட்டலுக்கு அஞ்சாதே; மலர் மாலை சூடி மகிழுடனே வாழ்வாய்” என்று கூறி மகிழ்ச்சியுடன் உயிரைவிட்டான் வீரத் தமிழன்.   இதை அழகுற எடுத்துக் கூறுகிறார் புரட்சிக் கவி பாரதிதாசன். “பெண்ணே! கண்ணே!! கண்மணியே!!! கடும்பிணியாளன் நான் இறந்தபின், மாதே! கைம்பெண்ணாய் வருந்தாதே பழிஎன்றன் மீதே. அடஞ்செய்யும் வைதீகம் பொருள்படுத்தாதே! ஆசைக்குரியவனை நாடு – மகிழ்வோடு – தார்சூடு – நலம் தேடு.” – புரட்சிக் கவிஞர் பெரியார் முழக்கம் 28072016 இதழ்

புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் (ஏப்ரல் 29)

புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் (ஏப்ரல் 29)

“நாடு நமக்கென்று வாங்குவீர்!” மத – ஓடத்திலேறிய மாந்தரே – பலி பீடத்திலே சாய்ந்தீரே! பாடு பட்டீர்கள் பருக்கையில்லா தொரு பட்டியில் மாடென வாழ்கின்றீர் – மதக் கேடர்கள் காலினில் வீழ்கின்றீர் – ஒண்ட வீடு மில்லாமலே தாழ்கின்றீர்!   (மத) பாதிக்குதே பசி என்றுரைத்தால், செய்த பாபத்தைக் காரணம் காட்டுவார் – மத வாதத்தை உம்மிடம் நீட்டுவார் – பதில் ஓதி நின்றால் படை கூட்டுவார்.              (மத) வாதனை சொல்லி வணங்கி நின்றால் தெய்வ சோதனை என்றவர் சொல்லுவார் – பணச் சாதனையால் உம்மை வெல்லுவார் – கெட்ட போதனையால் தினம் கொல்லுவார். (மத) பேதிக்கும் நோய்க்கும் பெரும் பசிக்கும் பல பீதிக்கும் வாய் திறப்பீர்களோ! – இழி சாதியென்றால் எதிர்ப்பீர்களோ? – செல்வர் வீதியைத் தான் மதிப்பீர்களோ?               (மத) கூடித் தவிர்க்கும் குழந்தை மனைவியர் கூழை நினைத்திடும் போதிலே – கோயில் வேடிக்கை யாம் தெரு மீதிலே – செல்வர்...