Tagged: புதிய கல்விக்கொள்கை

குலக்கல்வியை மீண்டும் திணிக்கும், ”புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு”

இந்திய அரசின் துணையுடன் காவி பயங்கரவாத அரசியல் நமது கல்வி, உணவு, பண்பாட்டின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக இயக்கங்களின் ஒன்றிணைந்த முயற்சிகளை முன்னெடுக்க கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ ) மக்கள் விடுதலை(தமிழ்நாடு) ஒருங்கிணைப்பில் ஆலோசனைக் கூட்டம் 15.08.16 அன்று பிற்பகல் கோவை மாவட்டம் சூலூரில் தோழர் ஆனைமுத்து அவைக்கூடத்தில் தோழர் மீ.த.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் – தோழர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் – தோழர் தியாகு, சி.பி.எம்.எல் – மக்கள் விடுதலை – தோழர் பாலன், தமிழ்த் தேச மக்கள் கட்சி – தோழர் தமிழ்நேயன், பி.யூ.சி.எல் – தோழர்கள் குறிஞ்சி, பொன்.சந்திரன், தனலட்சுமி, சி.பி.ஐ ( எம்-எல் ) ரெட்ஸ்டார் – தோழர் குசேலர், தியாகி இம்மானுவேல் பேரவை – தோழர் புலிப் பாண்டியன், தமிழக மக்கள் முன்னணி – தோழர் அரங்க.குணசேகரன், தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சி...